02
Sep
கோப்ரா இயக்கம் - அஜய் ஞானமுத்து நடிகர்கள் - விக்ரம் , ஶ்ரீனிதி ஶ்ரீஷெட்டி, மிருணாளினி, இர்ஃபான் பதான். சர்வதேசமாக கூலிக்கொலையாளியாக செயல் படும் மேத் ஜீனியஸ் அவனை தேடும் போலீஸுக்கு ஒருவன் துப்பு கொடுக்கிறான். நிஜ வாழ்வில் அநாதை இல்ல வாத்தியாராக இருக்கும் நாயகனின் அடையாளம் கல்யாண நாளுக்கு முதல் நாள் உடைந்து விட, உடைத்தது யார் என நாயகன் தேட ஆரம்பிக்கிறான் அவன் கண்டுபிடித்தானா ? இதற்கிடையில் போலீஸ் அவனை பிடித்ததா ? வில்லன் இவர்களை பிடித்தானா என்பதே கதை. ஆளவந்தான், வில்லன் என இரு படங்களில் வந்த கதையை கொஞ்சம் மசாலா தூவி பிரமாண்டம் சேர்த்து சமைத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் நீளமும் குழப்பமான திரைக்கதையும் படத்திம் பெரு மைனஸாக அமைந்திருக்கிறது. படத்தின் பிரமாண்டம் மலைக்க வைக்கிறது ஆனால் இது தேவையா என யோசித்திருந்தால் பல காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் காட்டும் பிரமாண்டமான கொலை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில்…