17
Apr
தமிழ் சினிமாவில் போராடி வெற்றி பெற்று, இம்றைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை கொடுப்பதற்காக உடலை உருக்கி உழைக்கும் மகாக் கலைஞன் நடிகர் சீயான் விக்ரமனின் 58ஆவது பிறந்தநாள் இன்று..! சீயான் என்று மூன்றெழுத்தில் மூச்சை வைத்திருக்கும் ,நண்பர்கள், பள்ளி, கல்லூரி தோழர்கள் என எல்லா இடங்களிலும் 'கென்னி' (இயற்பெயர் ஜான் கென்னடி வினோத் ராஜ்.0 என்ற நாமகரணம் கொண்ட. விக்ரமின் போராட்ட வாழ்வும், சினிமா மீது அவருக்கு இருக்கும் வெறித்தனமான காதலும் குறித்த சிறு பதிவு...! வெள்ளித்திரை வெற்றிக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் காத்திருந்த விக்ரம் இந்த இடை வெளியில் கலாட்டா குடும்பம், சிறகுகள் உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார் என்பது வெகு சில ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த தகவல்.இதேபோல வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடிகர் விக்ரம் டப்பிங் பேசியது இப்பொழுது திரைப்படம் பார்க்கும்போது ஒரு…