12
Jul
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது திரையுலக அனுபவம் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது…”ஒரு இசையமைப்பாளராக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்க்காகவே படித்து இசை துறையில் "உன்னை போல் ஒருவன்" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானேன் ஆனால் காலச்சூழ்நிலை என்னை நடிகை ஆக்கிவிட்டது. அப்பா இதுவரை எனக்கு எந்த சிபாரிசும் யாரிடமும் செய்தது இல்லை. நான் சரியாகவோ தவறாகவோ எது செய்தாலும் அதற்கு நான் தான் பொறுப்பு. விதம் விதமான கதாபாத்திரங்களில் நடித்து அப்பா சாதித்து காட்டியுள்ளார். நான் இதுவரை அப்படி எதுவும் சாதிக்கவில்லை. ஆனால் நிச்சயம் அந்த இலக்கை அடையவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. படம் இயக்கம் எண்ணம் தற்போது இல்லை ஏனென்றால் இயக்குனர் என்பது பெரிய பொறுப்பு. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் தவறவிடமாட்டேன். அதுமட்டுமல்லாமல் நான்…