04
Oct
குழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் இந்திய நாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு பேரணி சமீபத்தில் நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது. சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் லதா ரஜினிகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் எதற்காக ? அதன் நோக்கம் என்ன ? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அதன் நிறுவனர் . லதா ரஜினிகாந்த் எடுத்துரைத்தார். ஒரு நல்ல நோக்கத்திற்காக, சமுதாய விழிப்புணர்வுக்காக நடைபெறும் இந்த முயற்சியில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நிறுவனம் பல என்.ஜீ.ஓ நிறுவனங்களுடன் சேர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. லதா ரஜினிகாந்துடன் பவுல்,நிர்மல், மிர்னாலினி, காதாம்பரி, ராஜ…