மரகதநாணயம் பார்ட் டூ தயாராகுதாமில்லே!

மரகதநாணயம் பார்ட் டூ தயாராகுதாமில்லே!

ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ராமதாஸ், ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த 16-ஆம் தேதி வெளியான படம் ‘மரகதநாணயம்’. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுடன் வெற்றிகரமாக இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் நாலு நாட்கள் தியேட்டர் ஸ்ட்ரைக் முடிந்து திறக்க்கப்பட்ட நிலையிலும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க திட்டமிட்டு அதற்கான களப் பணியையும் செய்து வருக்கிறாராம் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன். ஆனால் அதற்கு முன்னதாக வேறு ஒரு கதையை இயக்கவிருப்பதாகவும் இப்படத்தை தொடர்ந்து மூன்றாவது படமாக ‘மரகதநாண யம்-2’வை இயக்க ஏ.ஆர்.கே.சரவன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இயக்குநர் சரவனிடம் கேட்டபோது, “ஆமாம், ‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா இருக்கிறது. ஆனால், அதை உடனே எடுத்தால், ரசிகர்களுக்கு போரடித்து விடும். அதனால் அதை மூணாவது படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார். மேலும்,…
Read More
ஆதரவற்ற சிறுவர்களுக்கு மரகத  நாணயம் காட்டிய நடிகர் ஆனந்தராஜ்!

ஆதரவற்ற சிறுவர்களுக்கு மரகத நாணயம் காட்டிய நடிகர் ஆனந்தராஜ்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற இல்லத்தில் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவிகளை, நடிகர் ஆனந்தராஜ் ‘மரகத நாணயம்’ படத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார். அறிமுக இயக்குநர் சரவண் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி பேண்டசி படம் ‘மரகத நாணயம்’. ஆதி, நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தில் ஆனந்தராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால், சென்னை எழும்பூரில் உள்ள கில்ட் ஆப் சர்வீஸ் ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவிகளை, ’மரகத நாணயம்’ படத்திற்கு நடிகர் ஆனந்தராஜ் அழைத்துச் சென்றார். கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ‘மரகத நாணயம்’ படத்தை பார்த்த மாணவிகள், சிரித்து மகிழ்ந்தனர். நடிகர் ஆனந்தராஜ் தனது குடும்பத்தாருடன் மாணவரிகளுடன் சேர்ந்து படம் பார்த்தார். படத்தின் இயக்குநர்…
Read More
ஆரம்பச்சதிலிருந்து முடியும் வரை காமெடிதான் =  ‘ மரகத நாணயம்’

ஆரம்பச்சதிலிருந்து முடியும் வரை காமெடிதான் = ‘ மரகத நாணயம்’

ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி சார்பாக ஜி. டில்லி பாபு தயாரிக்க சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடிக்கும் ‘மரகத நாணயம்’ படம் ஜுன் 16ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.நகைச்சுவை, த்ரில்லர், ஃபேன்டஸி கலந்த படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சரவன் தான் இயக்கியுள்ள முதல் படத்திலேயே படத் தயாரிப்பாளருக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இப்படத்தை இயக்கி முடித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமையான  ஜுன் 16ம் தேதி ஐந்து படங்கள் வெளிவந்தாலும் ‘மரகத நாணயம்’ படம் மட்டும்தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இதற்கு முன் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளார்கள் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு. முன்னதாக இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணனிடம் கேட்ட போது, "1100, 1992 மற்றும் 2016 என 3 காலகட்டத்தில் இக்கதை நடைபெறும்.…
Read More
மரகத நாணயம் ஆடியோ ரிலீஸ் + ஆல்பம்+ ஸ்பாட் நியூஸ்!

மரகத நாணயம் ஆடியோ ரிலீஸ் + ஆல்பம்+ ஸ்பாட் நியூஸ்!

கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'மரகத நாணயம்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மார்ச் 15 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதுமட்டுமின்றி ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் - விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு 'மரகத புதையல்' ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு. விமர்சையாக நடைபெற்ற மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு, இயக்குநர் ஏ ஆர் கே…
Read More