மரகதநாணயம் பார்ட் டூ தயாராகுதாமில்லே!

0
259

ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ராமதாஸ், ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த 16-ஆம் தேதி வெளியான படம் ‘மரகதநாணயம்’. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுடன் வெற்றிகரமாக இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் நாலு நாட்கள் தியேட்டர் ஸ்ட்ரைக் முடிந்து திறக்க்கப்பட்ட நிலையிலும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க திட்டமிட்டு அதற்கான களப் பணியையும் செய்து வருக்கிறாராம் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன். ஆனால் அதற்கு முன்னதாக வேறு ஒரு கதையை இயக்கவிருப்பதாகவும் இப்படத்தை தொடர்ந்து மூன்றாவது படமாக ‘மரகதநாண யம்-2’வை இயக்க ஏ.ஆர்.கே.சரவன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இயக்குநர் சரவனிடம் கேட்டபோது, “ஆமாம், ‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா இருக்கிறது. ஆனால், அதை உடனே எடுத்தால், ரசிகர்களுக்கு போரடித்து விடும். அதனால் அதை மூணாவது படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார். மேலும், “இந்த இரண்டாவது பாகத்தில் ஆனந்தராஜுக்குக் கிடைத்த மரகத நாணயம், பிரம்மானந்தம் கைக்குப் போன பிறகு நடக்கும் சம்பவங்களை வைத்து கதையாக உருவாக்க யோசித்து வருகிறோம்`” என்றார்.

இது குறித்து ஆக்ஸஸ் ஃபிலிம் டில்லி பாபுவிடம் கேட்ட போது, “ இந்த படம் முடிந்து ரிலீஸாவதற்கு முன்பே இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம் என்று சொன்னால் நம்புங்க பாஸ். ஆனால் ஏற்கெனவே தயாராகி கிட்டிருக்கற படங்களை முடிச்சிட்டு மரகதநயகம் செகண்ட் பார்ட் ஆரம்பமாகும்” என்றார்