10
Oct
மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி நடிப்பில் தயாரான மௌனராகம் படம் இன்றளவும் ஒவ்வொரு முறை ஒளிபரப்பப்படும் பொழுதும் பலரால் விரும்பிப் பார்க்கப்படுகிறது என்று சொல்வது மிகையல்ல . காரணம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டாத காட்சியமைப்புகள் , இந்தக் காட்சிகளுக்குப் பின்னணி இசைக்கோர்வைகள் பெரிய பலம் என்பது நூறுசதவீத உண்மை. அதிலும் கார்த்திக், ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமெளலி என காபி சாப்பிட அழைக்கும் காட்சி ஒரு அழகிய குட்டிக்கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஒற்றை வார்த்தையையே தற்போது தயாராகப் போகும் ஒரு தமிழ்ச் சினிமாவின் தலைப்பாகவே வைத்திருக்கிறார்கள் என்பதும் அந்த நேமை உச்சரித்த அதே நாயகன் கார்த்திக்கை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள் என்பது இன்னும் சிறப்பான விஷயம். இதில் அடிசினல் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த நவரச நாயகன் கார்த்திக் மகன்தான் இதில் ஸ்பெஷல் ரோல் என்பதுதான் . ஆம்.. வளந்து ஓயெது விட்ட நடிகர்…