எல்லா தியேட்டர்களையும் 3 டியா மாத்தணும் – லைகா அட்வைஸ்!

எல்லா தியேட்டர்களையும் 3 டியா மாத்தணும் – லைகா அட்வைஸ்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் ‘2.0’ ஆகும். 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் லைகா நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அதாவது ரஜினியின் ‘2.0’ படத்தை 3டி-யில் ரிலீஸ் செய்தால் மட்டுமே தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு லாபம் கிடைக்கும். அதனால் அனைத்து திரையரங்கையும் 3டி-யில் மாற்றுவது குறித்துதான் இப்போதே பேசத்தொடங்கியிருக்கிறது லைகா நிறுவனம். இந்நிகழ்வில் ராஜூ மகாலிங்கம் பேசியதாவது: "400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம், முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.“டால்ஃபி அட்மாஸ், க்யூப் எனப் பல டெக்னாலஜிகளை ரசிகர்களுக்காக அப்டேட் செய்தது போல, 3டியும் இனி திரையரங்கில்…
Read More
கமலின்  ஆளவந்தான் அப்டேட்டா டிஜிட்டலில் ரெடியாகுது!

கமலின் ஆளவந்தான் அப்டேட்டா டிஜிட்டலில் ரெடியாகுது!

கமல்ஹாசன் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த 'ஆளவந்தான்' திரைப்படம் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தாலும் கதைசொல்லல் முறை மற்றும் உருவாக்கத்தில் சிறந்த படமாக இப்போதும் பேசப்பட்டுவருகிறது. உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநரான குவாண்டின் டொரண்டினோ ஒரு முறை ‘ஆளவந்தான் படத்தில் வரும் காமிக் சண்டைக்காட்சியின் பாதிப்பிலிருந்து தான் தனது Kill Bill படத்தின் உருவாக்கத்தை அமைத்தேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அண்ணன், தம்பி என இரு வேடங்களில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ரவீனா தண்டன் உள்படப் பலர் நடித்த இந்தப் படத்தைச் சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டிலேயே ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் பட்ஜெட் இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 'ஆளவந்தான்' திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்கக் கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்துள்ளார். இந்தத் தலைமுறையினர் தவறவிட்ட ஆளவந்தான் படத்தை மிக விரைவில் தமிழகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.…
Read More