ஊழலில் பீஹாரை மிஞ்சியது தமிழகம் – கமல் காட்டம்!

ஊழலில் பீஹாரை மிஞ்சியது தமிழகம் – கமல் காட்டம்!

நாடு முழுவதும் ஜூலை 1 -ம் தேதி முதல் மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரண்டுமே அமலில் உள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பு முறையை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.மத்திய மற்றும் மாநில அரசின் இந்த வரிவிதிப்புக்கு தமிழ்த் திரையுலகரினர் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது. இப்பிரச்சினையைப் பொறுத்தவரை, பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். அதேவேளையில், சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. தமிழ்நாட்டைத் தவிர…
Read More
சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள்! -மன்சூரலிகான் எச்சரிக்கை

சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள்! -மன்சூரலிகான் எச்சரிக்கை

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் " உறுதி கொள்" ithil கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது... "கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால் GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP. துவங்கி அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று ஆரி பேச. "தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை…
Read More
ஜி எஸ் டி குழப்பம் ; ஜூலை ஜூலை 3 முதல் சினிமா தியேட்டர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்!

ஜி எஸ் டி குழப்பம் ; ஜூலை ஜூலை 3 முதல் சினிமா தியேட்டர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்!

ஜிஎஸ்டி குறித்து தெளிவான விளக்கம் இல்லாததால் வரும் திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் சினிமா தியேட்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும், ஒரே சீரான வரிவிதிப்பு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படவுள்ளது. இதன் அறிமுக விழா, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி ஜிஎஸ்டி குறித்து தெளிவான விளக்கம் இல்லாததால் வரும் திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் சினிமா தியேட்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. இது குறித்து பேசிய தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தெளிவான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சினிமா டிக்கெட் மீதான சேவை வரி குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Read More
error: Content is protected !!