மங்காத்தாவை விட இது பெரிய புராஜெக்ட்..!- மாநாடு அப்டேட்!

மங்காத்தாவை விட இது பெரிய புராஜெக்ட்..!- மாநாடு அப்டேட்!

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். மதன்கார்க்கி பாடல்கள் எழுதியிருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு, கே எல் பிரவீண் படத்தொகுப்பு, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகள், உமேஷ் ஜே குமார் கலை இயக்கத்தையும் செய்துள்ளனர். உடையலங்காரம் வாசுகி பாஸ்கர்.   சிம்பு அப்துல் காலிக் (இது இசையமைப்பாளர் யுவனின் பெயராக்கும்) என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த மாநாடு படத்தில் இடம்பெறும் ’மெர்ஸைலா’ என்கிற பாடல் வெளியாகி உள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப்…
Read More
மணிரத்னம் படத்தில் சிம்பு & ஜோதிகா!

மணிரத்னம் படத்தில் சிம்பு & ஜோதிகா!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிம்பு, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து மணிரத்னம், தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அதில் நடிக்க பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இறுதியாக ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருமே அடுத்த மணிரத்னம் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்தார்கள். நடிகர்களாக நானி, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மணிரத்னம். இதில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், இப்படத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜய்  சேதுபதி கவுரவ தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முன்னரே மன்மதன் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து சிம்பு நடித்திருந்தார். தற்போது மீண்டும் இவர்கள் ஒரே படத்தில் நடிக்கின்றனர். ஏஏஏ படத்திற்கு பிறகு சிம்பு…
Read More
சிம்பு மியூசிக்கில் உருவான  சக்க போடு போடு ராஜா’ பட பாடல் க்ளிம்ப்ஸ்

சிம்பு மியூசிக்கில் உருவான சக்க போடு போடு ராஜா’ பட பாடல் க்ளிம்ப்ஸ்

சந்தானம் நடிப்பில் சிம்பு இசையமைக்கும் படம் 'சக்க போடு போடு ராஜா'. இந்தப் படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான வி.டி.வி.கணேஷ் தயாரித்துள்ளார்.  சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா டூயட் பாடி ஆடி வருகிறார்.மேலும், முக்கிய வேடங்களில் விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத், சஞ்சனா சிங் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘விடிவி புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார். தற்போது இப்படத்தின் `கலக்கு மச்சா தௌலாத்துல' பாடல் யூடியூபில் நேற்று(செப்டம்பர் 8) வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.`பீப்' பாடல் பாடி பெரும் சர்ச்சைக்கு உள்ளானன, அனிருத்-சிம்பு கூட்டணி 'சக்க போடு போடு ராஜா' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் அறிமுக பாடலாக வரவிருக்கும் `கலக்கு மச்சா தௌலாத்துல' பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடலின்…
Read More
நான் எந்தப் படத்திலும் நடிக்கலை! – சிம்பு விளக்கம்

நான் எந்தப் படத்திலும் நடிக்கலை! – சிம்பு விளக்கம்

சிம்பு நடிப்பில் வெளியான ' அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பில்லா- 3 என்ற பெயரில் ஒரு படத்தில் நடிகர் சிம்பு தயாரித்து ,இயக்கி, நடிக்க திட்டமிட்டு உள்ளார். ஆனால், இது ரஜினி ,அஜித்தின் பில்லா மறுதொடக்க தொடர்ச்சியாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. சிம்புவின் கெட்டவன் படத்தை பில்லா- 3 ஆக மாற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு கொடுரமான பாத்திரத்தில் நடிக்கபோவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களை உள்ளது, அதில் ஒன்று சிம்பு நடிக்கிறார். மற்றொரு முன்னணி பெண் கதாபாத்திரம் ஆகும். இந்த கேரக்டருக்கு ஸ்டைலான நடிகையை தேடிவருவதாக கூறப்படு கிறது. ஆரம்பம் படத்தில் நடித்த அக்‌ஷரா கவுடா நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் சில ரிகர்சல் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் எடுக்கபட்டு…
Read More
”அ. அ. அ. -படத்தில் ஐயாவுக்கு நாலு கேரக்டர்” – சிம்பு தகவல்

”அ. அ. அ. -படத்தில் ஐயாவுக்கு நாலு கேரக்டர்” – சிம்பு தகவல்

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார். இப்படம் குறித்து சிம்புவிடம் கேட்ட போது, “அன்பானவன் அடங்காதவன் அசராதவன் டீசரை பார்த்துவிட்டு, நீங்களாக கற்பனை செய்து இந்த கதை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு வித்தியாசமான படம். நாங்கள் புதிதாக ஒரு முயற்சி எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தில் மூன்று மெயின் கதாபாத்திரங்கள் வருவதால் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வைத்தோம். இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை தாண்டி இன்னொரு கதாபாத்திரமும் இருக்கிறது. மொத்தமாக நான்கு கதாபாத்திரங் களில் நான் நடித்திருக்கிறேன். இதை நான் வெளியிட்டதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கோபித்து கொள்வார் என்று நினைக்கிறேன். இருந்தாலும்,…
Read More