நான் எந்தப் படத்திலும் நடிக்கலை! – சிம்பு விளக்கம்

சிம்பு நடிப்பில் வெளியான ‘ அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பில்லா- 3 என்ற பெயரில் ஒரு படத்தில் நடிகர் சிம்பு தயாரித்து ,இயக்கி, நடிக்க திட்டமிட்டு உள்ளார். ஆனால், இது ரஜினி ,அஜித்தின் பில்லா மறுதொடக்க தொடர்ச்சியாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. சிம்புவின் கெட்டவன் படத்தை பில்லா- 3 ஆக மாற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு கொடுரமான பாத்திரத்தில் நடிக்கபோவதாக கூறப்படுகிறது.

இதில் இரண்டு கதாபாத்திரங்களை உள்ளது, அதில் ஒன்று சிம்பு நடிக்கிறார். மற்றொரு முன்னணி பெண் கதாபாத்திரம் ஆகும். இந்த கேரக்டருக்கு ஸ்டைலான நடிகையை தேடிவருவதாக கூறப்படு கிறது. ஆரம்பம் படத்தில் நடித்த அக்‌ஷரா கவுடா நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் சில ரிகர்சல் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் எடுக்கபட்டு உள்ளது. விரைவில் டீஸர் டிரெய்லராக வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது என்றெல்லாம் செய்தி வெளியானது. மேலும் முன்பு கைவிடப்பட்ட ‘கெட்டவன்’ படத்தை சிம்பு தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் டீஸர் ஒன்றை தயார் செய்து வெளியிடவுள்ளதாகவும், இதில் நாயகியாக அக்‌ஷரா கெளடா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவே நாயகனாக நடித்து, இயக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த தகவல்கள் குறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊடகங்களுக்கு பணிவான வேண்டுகோள். எனது அடுத்த படம் பற்றிய யூகங்களை நிறுத்துங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்”இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.