நான் கடவுள் ராஜேந்திரன் தயாரிப்பில் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “!

நான் கடவுள் ராஜேந்திரன் தயாரிப்பில் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “!

TN 75 KK.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “கதாநாயகனாக அகில் நடிக்கிறார். சதுரங்கவேட்டை இஷாரா நாயர், கமர்கட்டு படத்தில் நடித்த ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரஹீம்பாபு .இசை - சு.வர்ஷன். இவர் புறம்போக்கு படத்தின் இசையமைப்பாளர். எடிட்டிங் - சுரேஷ்அர்ஸ் கலை - ஜான்பிரிட்டோ நடனம் - ரமேஷ் ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் பாடல்கள் - விஜய் சாகர், சக்தி செல்லம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கெவின் தயாரிப்பு - திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள். படம் பற்றி இயக்குனர்.. கெவின் கூறியதாவது... “தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கான பேர் பிழைப்புக்காக…
Read More
முதல்ல நீங்க மாறுங்கப்பூ! – டாப் நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்!

முதல்ல நீங்க மாறுங்கப்பூ! – டாப் நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்!

 ஏற்கெனவே மத்திய அரசின் ஜி எஸ் டி வரி வந்த சினிமா டிக்கெட்டுகளுக்கு தமிழக அரசு 30 சதவீத கேளிக்கை வரி விதித்ததற்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் கேளிக்கை வரியை ரத்து செய்யம்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந் நிலையில் நடிகையும், சினிமா டைரக்ட ருமான லட்சுமி ராமகிருஷ்ணன் திரையுலகினரின் போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டு உள்ளார். அதாவது “திரைப்படத் தொழிலை வியாபாரமாக பார்த்தால் எதற்காக வரிவிதிப்புகளை எதிர்க்க வேண்டும்..? நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி கொடுத்து விட்டு வரிவிலக்கு கேட்க வேண்டுமா…? வரி கட்டுபவர்கள் அரசாங்கத்தின் வீண் செலவுகளை கேள்வி கேட்பார்கள். படம் 100 கோடி ரூபாய் வசூலித்து விட்டது என்கிறார்கள். இதற்காக கோடிகளில் விளம்ப ரமும் செய்கிறார்கள். நடிகர்கள் சம்பள தொகையை ஏற்றுகிறார்கள். அதன் பிறகும் வரி விலக்கு கேட்டு…
Read More
ஊழலில் பீஹாரை மிஞ்சியது தமிழகம் – கமல் காட்டம்!

ஊழலில் பீஹாரை மிஞ்சியது தமிழகம் – கமல் காட்டம்!

நாடு முழுவதும் ஜூலை 1 -ம் தேதி முதல் மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரண்டுமே அமலில் உள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பு முறையை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.மத்திய மற்றும் மாநில அரசின் இந்த வரிவிதிப்புக்கு தமிழ்த் திரையுலகரினர் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது. இப்பிரச்சினையைப் பொறுத்தவரை, பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். அதேவேளையில், சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. தமிழ்நாட்டைத் தவிர…
Read More
ஜி எஸ் டி குழப்பம் ; ஜூலை ஜூலை 3 முதல் சினிமா தியேட்டர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்!

ஜி எஸ் டி குழப்பம் ; ஜூலை ஜூலை 3 முதல் சினிமா தியேட்டர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்!

ஜிஎஸ்டி குறித்து தெளிவான விளக்கம் இல்லாததால் வரும் திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் சினிமா தியேட்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும், ஒரே சீரான வரிவிதிப்பு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படவுள்ளது. இதன் அறிமுக விழா, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி ஜிஎஸ்டி குறித்து தெளிவான விளக்கம் இல்லாததால் வரும் திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் சினிமா தியேட்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. இது குறித்து பேசிய தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தெளிவான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சினிமா டிக்கெட் மீதான சேவை வரி குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Read More
தமிழ் சினிமாவின் தந்தை  என்று கூறப்படும் R நடராஜ முதலியார்!

தமிழ் சினிமாவின் தந்தை என்று கூறப்படும் R நடராஜ முதலியார்!

தமிழகத்திற்கு 5 முதலமைச்சர்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் தந்தை யார் என்றே நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் பெயர் R நடராஜ முதலியார்!  இந்தியாவின் முதல் மவுனப் படமான ‘ஹரிச்சந்திரா’ துண்டிராஜ் கோவிந்த பால்கே என்ற மராட்டியரால் 1913-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதை வாங்கி பாம்பே காரனேஷன் தியேட்டரில் வெளியிட்டவர் இந்திய சினிமாவின் தந்தை எனப் புகழப்படும் தாதா சாகிப் பால்கே. பம்பாயில் திரையிடப்பட்ட அடுத்த ஆண்டே மதராஸுக்கு வந்த ‘ஹரிச்சந்திரா’, கெயிட்டி தியேட்டரில் 1914-ம் ஆண்டு திரையிடப்பட்டது. அதைக் காண வந்தார் 29 வயதே நிரம்பிய இளைஞரான ஆர். நடராஜ முதலியார். புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் கார் கம்பெனி நடத்திவந்த அவரை அந்தப் படம் பெரிதும் பாதித்தது. ஆங்கிலேய வியாபாரிகள் நடத்திவந்த ‘அடிசன் & கம்பெனி’ என்ற கார் விற்பனை கடை மட்டுமே அன்று மதராஸில் இருந்த நிலையில் ஆங்கிலேயர் அல்லாத ஒருவரால் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கார் ஷோரூம் நடராஜ…
Read More
’எப்படி இருந்த’ சினிமா  “இப்படி ஆயிடுச்சு!” – 1

’எப்படி இருந்த’ சினிமா “இப்படி ஆயிடுச்சு!” – 1

திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்ஷன் என்பன ஒரு படத்தை உச்ச நிலைக்கு உயர்த்துகின்றன. ஆரம்பகால தமிழ்த்திரைப்படங்களைப் பாடல்களே ஆக்கிரமித்தன 85 சங்கீதங்கள் நிறைந்த படம் எனறே அறிமுகப்படுத்துவார்கள். ஹரிதாஸ், சிந்தாமணி போன்ற படங்களின் பாடல்களை அந்த காலத்து ரசிகர்கள் இன்றும் …கித்துப் பேசுவார்கள். பாடல்களுக்கிடையே ஒரு சில வசனங்கள் பேசப்படும் அன்பே, சுவாமி, கண்ணே, நாதா, ஆரமுதே, பிராணநாதா போன்ற சொற்கள் அடிக்கடி உச்சரிக்கப்படும் நாயகனும் நாயகியும் எட்ட நின்றே உரையாடுவார்கள். கையைப் பிடிப்பார்கள் கட்டிப்பிடிக்கமாட்டார்கள். 1935 ஆம் அண்டு வெளிவந்த மேனகா என்ற படம் இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்தெரிந்தது. முத்தம், கற்பழிப்பு என்பன இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியது. முத்தம் என்றதும் கன்னாபின்னாவென்று கற்பனை செய்ய வேண்டாம். கை, கன்னம் உச்சியென்பனவற்றிலே தான். நாயகன் முத்தமிட்டான் இப்படத்தைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாக…
Read More