ஆரம்பச்சதிலிருந்து முடியும் வரை காமெடிதான் =  ‘ மரகத நாணயம்’

ஆரம்பச்சதிலிருந்து முடியும் வரை காமெடிதான் = ‘ மரகத நாணயம்’

ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி சார்பாக ஜி. டில்லி பாபு தயாரிக்க சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடிக்கும் ‘மரகத நாணயம்’ படம் ஜுன் 16ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.நகைச்சுவை, த்ரில்லர், ஃபேன்டஸி கலந்த படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சரவன் தான் இயக்கியுள்ள முதல் படத்திலேயே படத் தயாரிப்பாளருக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இப்படத்தை இயக்கி முடித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமையான  ஜுன் 16ம் தேதி ஐந்து படங்கள் வெளிவந்தாலும் ‘மரகத நாணயம்’ படம் மட்டும்தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இதற்கு முன் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளார்கள் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு. முன்னதாக இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணனிடம் கேட்ட போது, "1100, 1992 மற்றும் 2016 என 3 காலகட்டத்தில் இக்கதை நடைபெறும்.…
Read More
“என் ஆளோட செருப்பக் காணோம்” – டைட்டில் ஏன்?- இயக்குநர் ஜெகன்நாத் விளக்கம்

“என் ஆளோட செருப்பக் காணோம்” – டைட்டில் ஏன்?- இயக்குநர் ஜெகன்நாத் விளக்கம்

‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த போஸ்டர்கள் நிச்சயம் தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும். அது என்ன ? , இப்படி ஒரு தலைப்பு என இயக்குனர் ஜெகன்நாத்திடம் கேட்ட போது, “ஒரு செருப்பு கூட நம் வாழ்க்கையில் சில திருப்பங்களை ஏற்படுத்திவிடும். ஒரு சமயம் ஒரு தெலுங்குத் தயாரிப்பாளருக்குக் கதை சொல்ல போன போது, நான் அணிந்து கொண்டிருந்த ஒரு ஷு, அவரைச் சந்திக்க சென்ற ஹோட்டலுக்கருகில் தனித் தனியாக வந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், அவருக்கு போன் செய்து வேறு ஒரு காரணத்தைச் சொல்லி மாலை சந்திப்பதாகச் சொன்னேன். அந்த ஷு பிரச்சனை இல்லாமல் இருந்து, நான் அவரைச் சந்தித்து, அந்தப் படத்தை எடுத்திருந்தால் தெலுங்கில் ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அவரைச் சந்திக்க முடியாமல் போனதால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சென்னையில் மழை, வெள்ளம் வந்த போது எத்தனையோ…
Read More
வெள்ளைப் பன்றியை வைத்து சர்வதேச அரசியலை சொல்லும் ‘ஜெட்லி’

வெள்ளைப் பன்றியை வைத்து சர்வதேச அரசியலை சொல்லும் ‘ஜெட்லி’

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ ஜெட்லி “ வாயில்லா ஜீவன்களின் சாகசங்கள் எப்போதுமே  மனித மனங்களைக் கவர்ந்து விடும். அதனடிப்படையில் ஆடு,மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை என எல்லா ஜீவன்களுமே திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறன. அந்த வரிசையில் விடுபட்டு போன வெள்ளைப் பன்றியை மையப் படுத்தி உருவாகி உள்ள படமே “ ஜெட்லி “ உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான படமாக “ ஜெட்லி “ உருவாகிக் கொண்டிருக்கிறது. முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்கிறார்கள். மலையாளத்தின் முக்கிய நடிகரும் தேசிய விருது பெற்ற நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எத்திராஜ்பவன் கனமான வேடத்தில் நடிக்கிறார். மற்றும் நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகள் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் இயக்குனர்..இசை வெளியீட்டு விழாவன்று…
Read More