உண்மையான சம்பவம்தான் ‘அபியும் அனுவும்’ – இயக்குநர் விஜயலக்‌ஷமி பேட்டி!

உண்மையான சம்பவம்தான் ‘அபியும் அனுவும்’ – இயக்குநர் விஜயலக்‌ஷமி பேட்டி!

ஒரு சாதனையாளருக்கு பிள்ளையாக பிறந்து வளர்வது ஒரு சுகமான சுமையாக இருக்கும். அவர்களுக்கு எந்த துறையிலும் நுழைவு எளிதாக இருக்கலாம் ஆனால் வெற்றிக்கான செயல்முறை ஒன்றாகத்தான் இருக்கும். இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் மிக பெரிதாக ஆகி அதுவே ஒரு சுமையாக மாறும். விரைவில் ரிலீசாக இருக்கும் 'அபியும் அணுவும்' படத்தை மறைந்த தமிழ் சினிமாவின் ஜாம்பவான் B R பந்துலுவின் மகள் B R விஜயலக்ஷ்மி இயக்கியுள்ளார். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான B R விஜயலக்ஷ்மி 22 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.'டாடி' என்ற மலையாள படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையும் அவரை சார்ந்தது. அவர் தற்பொழுது 'அபியும் அனுவும்' என்ற துணிச்சலான காதல் படத்தை இயக்கியுள்ளார். '' லத்தீன் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக வைத்தே 'அபியும் அனுவும்' கதையை எழுதினேன். இது ஒரு துணிச்சலான, அழகாக சொல்லப்பட்டுள்ள கதை. உண்மை…
Read More
பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள்…?!

பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள்…?!

காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இவர் ரா..ரா.. ராஜசேகர்' படத்தைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு 'யார் ? இவர்கள்' என பெயரிட்டுள்ளார்கள். லிங்குசாமி தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்க 'ரா.. ரா.. ராஜசேகர்' படத்தை இயக்கினார் பாலாஜி சக்திவேல். அப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதனிடையே தனது அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார் பாலாஜி சக்திவேல். இதிலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளார். 'யார்? இவர்கள்' என பெயரிடப்பட்டுள்ள படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் மில்டன் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன். இவர்கள் தான் நாயகர்கள். இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக ஜனரஞ்சகமான அம்சங்களுடன் உருவாக்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இசக்கி கிஷோர், அஜய், சுபிக்‌ஷா, பாண்டியன்,…
Read More
கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல’

கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல’

சமூக ஊடகங்கள்  மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னை யிலிருந்து கோவா  புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும்  நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை இது. இப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ்  மற்றும்  தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சக்திவேல் , ஜெகன் நாராயணன் ஆகியோர் இருவரும்  இணைந்து தயாரிக்கிறார்கள் . இவர்களில் சக்திவேல் 'கந்தகோட்டை' , 'ஈகோ' படங்களை இயக்கியவர்,  அவரிடம் பணிபுரிந்த வி.என். ராஜ சுப்ரமணியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார் இவர் 'நான் சிவனாகிறேன்' படத்தில் நாயகனாக நடித்தவர். பாலாவின் இயக்கத்தில் 'பரதேசி'படத்தில் அதர்வாவுடன் நடித்தவர்.நாயகியாக சஹானா நடித்துள்ளார். விஜய் டிவியின்  ' கனாக்காணும் காலங்கள்' புகழ் சிவகாந்த் முழு  நீள காமெடியனாக வந்து கலகலப்பூட்டிக் கலக்குகிறார். முழுக்க முழுக்க கோவாவில் படமாகியுள்ளது. கோவா நகரம் அதன்  தெருக்கள் ,…
Read More
“என் ஆளோட செருப்பக் காணோம்” – டைட்டில் ஏன்?- இயக்குநர் ஜெகன்நாத் விளக்கம்

“என் ஆளோட செருப்பக் காணோம்” – டைட்டில் ஏன்?- இயக்குநர் ஜெகன்நாத் விளக்கம்

‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த போஸ்டர்கள் நிச்சயம் தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும். அது என்ன ? , இப்படி ஒரு தலைப்பு என இயக்குனர் ஜெகன்நாத்திடம் கேட்ட போது, “ஒரு செருப்பு கூட நம் வாழ்க்கையில் சில திருப்பங்களை ஏற்படுத்திவிடும். ஒரு சமயம் ஒரு தெலுங்குத் தயாரிப்பாளருக்குக் கதை சொல்ல போன போது, நான் அணிந்து கொண்டிருந்த ஒரு ஷு, அவரைச் சந்திக்க சென்ற ஹோட்டலுக்கருகில் தனித் தனியாக வந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், அவருக்கு போன் செய்து வேறு ஒரு காரணத்தைச் சொல்லி மாலை சந்திப்பதாகச் சொன்னேன். அந்த ஷு பிரச்சனை இல்லாமல் இருந்து, நான் அவரைச் சந்தித்து, அந்தப் படத்தை எடுத்திருந்தால் தெலுங்கில் ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அவரைச் சந்திக்க முடியாமல் போனதால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சென்னையில் மழை, வெள்ளம் வந்த போது எத்தனையோ…
Read More