‘பப்ளிக் ஸ்டார்’  துரை சுதாகர் நடிக்கும் ‘தப்பாட்டம்’.

‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிக்கும் ‘தப்பாட்டம்’.

தமிழகத் தோல் இசைக் கருவிகளில் மிக முக்கியமானது பறை. பறை ஆட்டம், தப்பாட்டம் என இரு பெயர் தாங்கிய பறை இசை, வடிவ மாற்றங்களால் உரு மாறினாலும் சங்க காலம் முதல் சம காலம் வரை அழிவின்றி அதிரோசை எழுப்பிக்கொண்டிருக்கிறது.  தப்பு என்ற இசைக்கருவியை இசைத்துக்  கொண்டு ஆடப்படும் ஆட்டம் என்பதால், தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கலையைப் ‘பறையாட்டம்’ என்றும் அழைக்கிறார்கள். ‘பறை’ என்ற இசைக் கருவியைத்தான் ‘தப்பு’ என்றார்கள். இதை மாட்டுத்தோலில் செய்கிறார்கள். மரக் கட்டையால் செய்யப்பட்ட வட்ட வடிவ சட்டத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை ஒட்டி பறை செய்யப்படுகிறது. இவ்வாறு ஒட்டு வதற்குப் புளியங்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பசையைப் பயன்படுத்துகி றார்கள். இந்தக் கலையை நடத்துகிறவர்களே பறையைத் தயார் செய்து கொள்கிறார்கள். பறையை அடிப்பதற்கு மூங்கில் குச்சியைப் பயன்படுத்துகிறார்கள். இதைச் சிம்புகுச்சி அல்லது சிம்படி குச்சி என்று அழைக்கிறார்கள். தப்பு அடிக்கும் கலைஞர்கள் இந்தக் குச்சியை இடது கையில் வைத்திருப்பார்கள். பூவரசு…
Read More
உரு – திரை விமர்சனம்!

உரு – திரை விமர்சனம்!

சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜானர் என்றால் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்களை சொல்லலாம்.  சமீபகாலமாக சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்கள் தமிழிலும் வரத் தொடங்கி யுள்ளன. உரு படமும் ஒரு சைக்காலஜிகல் த்ரில்லர் படம் தான். கலையரசன் பிரபலமாக இருந்து சரிவில் சிக்கித் தவிக்கும் ஓர் எழுத்தாளர். அவரது மனைவி தன்ஷிகா. ரீ எண்ட்ரிக்காக ஒரு தனி வீட்டில் தங்கி புது நாவல் எழுதத் தொடங்குகிறார் கலை. நாவலில் அவர் எழுதுவதெல்லாம் நிஜத்தில் நடக்கத் தொடங்குகிறது. அதனால் விளையும் ஆபத்துகள் தான் கதை. க்ளைமாக்ஸில் முக்கியமான இரண்டு ட்விஸ்ட்கள் இருக்கின்றன. இரண்டுமே எதிர்பாராதவை. இரண்டே இரண்டு முக்கிய கேரக்டர்கள். இன்னும் நாலைந்து துணை கேரக்டர்கள்.இரண்டு, மூன்று லொகேஷன்கள் இவை தான் படம் முழுக்க. நல்ல திரைக்கதை அமைத்தால் மினிமம் பட்ஜெட்டில் ஒரு சைகாலஜிகல் த்ரில்லர் தரலாம் என்று நிரூபித்த இயக்குநர் விக்கி ஆனந்துக்கு பாராட்டுகள். கலையரசன் த்ரில்லர் படத்துக்கே உண்டான முகபாவனைகளை அசாத்தியமாக…
Read More