15
Jul
ரகு, ரகு என சரண்யா பொன்வண்ணன் அழைத்துக்கொண்டிருந்த வரை, நமக்கே ரகுவரன் மீது அத்தனை ஈர்ப்பு இல்லை. ‘என் முழுப் பேரு ரகுவரன்’ என தனுஷ் வில்லத்தனம் காட்டியதுதான் திருப்புமுனை. ரகுவரனுக்கு அப்பா என்றால் பயம். அம்மா மீது பாசம். தம்பி என்றால் அன்பு கலந்த வெறுப்பு என வி.ஐ.பி படத்தில் பார்த்துவிட்டு, வி.ஐ.பி-2 படத்தில் என்ன செய்திருப்பார்களோ என்ற பயம் ஏற்பட்டபோது, அதை சுக்குநூறாக உடைத்தது வி.ஐ.பி 2 டீசர். டீசரில் சமுத்திரக்கனிக்கு எதிரியே இல்லைன்னா வாழ்க்கையே போருடா என்ற வசனம் கொடுத்திருப்பார்கள். அதுதான் ரகுவரனின் தாரக மந்திரம். தனக்கு சமமான எதிரியை வைத்துக்கொண்டு வீழ்த்துவதைவிட, தன்னைவிட பல மடங்கு உயரத்தில் இருக்கும் எதிரியை அதற்கும் மேலே சென்று அடித்து வீழ்த்துவதுதான் வீரத்தின் அடையாளம். ஆனால், வி.ஐ.பி 2 படத்தில் அது வில்லனுக்கு(ரகுவரனுக்கு) அடையாளம். ரகுவரனின் எதிரியாக வரும் வசுந்தராவின் கேரக்டரை உச்சத்தில் வைத்ததிலேயே, ரகுவரனின் அடுத்த பாய்ச்சல் எத்தனைப் பெரியதாக இருக்கப்போகிறதென தெரிந்துகொள்ளலாம் . ஆனால்,…