30
Jul
அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருவதால் மீடியாக்கள் மூலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு பிம்பம் கிளப்பப்படு வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி யான தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் , “நான் எனக்குள் தோன்றிய நல்ல கருத்துக்களை சொல்கிறேன். இன்றைய நிலையில் நடைபெறும் அரசியல் பற்றிய எனது கருத்துக்கள் பொதுவானவை. பொது வாழ்வில் ஊழல் நடைபெறக் கூடாது என்பதால் அதை சுட்டிக் காட்டுகிறேன்.னது கருத்து அரசியல் தொடர்பானது, அதிமுக பற்றிய கருத்து அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் கருத்துக்கள். அதற்காக என்னை அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். அரசியல் கட்சி தொடங்கினால் அதற்கு எவ்வளவு பணம் தேவை என்று எனக்கு தெரியும் என்றார். மேலும் அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இதோ:- கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக மாறினார்? பதில்:-…