05
Nov
சில படங்களை நெனச்சு பக்கம் பக்கமாக எழுதலாம். கமலின் குணா அப்படியொரு படம். 34 ஆண்டுகளுக்கு முன் 1991 இதே நவம்பர் 5 ஆம் தேதி இதே நாளில் குணா ரிலீஸாச்சே பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் ஆச்சரிய அலையை ஏற்படுத்திச்சு. அதேநேரம் பொதுப்பார்வையாளர்களை படம் சென்றடையுமா என்ற கேள்வியும் எழுந்துச்சு. மாஸ் ஹீரோ படத்திற்கென ஒரு ஃப்ரேம் உண்டு. அவன் எவராலும் வெல்ல முடியாதவன், தீமைகளை அழிப்பவன்... இப்படி. ஆனா குணா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கதை, கதாபாத்திரங்கள், காட்சிகள் அம்புட்டும் அதுவரை தமிழ் சினிமா அறியாத தளத்தை, வண்ணத்தை கொண்டிருந்துச்சு..அந்த வகையில் குணாவின் கதையும் காட்சிகளும் பல வருடங்களாக இன்னிக்கும் பேசப்பட்டும், வியந்து போற்றப்பட்டும் வருது. குணா படத்தின் பின்னணி தகவல்களும் அதேயளவுக்கு ஆச்சரியம் கொண்டவை. மலையாளத்தின் சிறந்த இயக்குநர்களை தமிழில் பயன்படுத்தோணும் அப்படீங்கற விருப்பம் கமலுக்கு முன்பே இருந்துச்சு. பரதன், சிபி மலையில், பாலச்சந்திர மேனன் என பலருடன் இணைஞ்சு படம்…
