09
Jul
கோலிவுட்டில் ஒரு டைரக்டராக, படைப்பாளியாக, தயாரிப்பாளராக, நடிகராக, கலைஞனாக திறமைகளைத் தேடிக் கண்டுபிடித்து வாய்ப்புகளைக் கொடுப்பவராக பலரது வழிகாட்டியாக, ஆசானாக, தந்தையாக, ரசிகராக விளங்கிய பாலசந்தரைப் பற்றி பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்னும் எழுதப்பட பல்லாயிரம் பக்கங்கள் எஞ்சியுள்ளன... இன்றைய ஒரே நாளில் ஒரு கட்டுரைக்குள் அவருடைய மொத்த சிறப்புகளையும் உள்ளடக்கி அவருடைய ஆளுமைச் சித்திரத்தை வடித்துவிட முடியாது.. செயலில் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, நூறு சதவீதம் தயார் நிலை, ஒருமுகப்பட்ட கவனம். இதுதான் கே.பி. என்று அழைக்கப்படும் கே.பாலசந்தர். நாடகங்கள் நடத்திக்கொண்டு சினிமா தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த பாலசந்தருக்கு முன்பணம் கொடுத்து முதன் முதலாகத் திரைத்துறைக்கு அறிமுகப் படுத்தியவர் இராம. வீரப்பன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இணைந்து நடித்த 'தெய்வத்தாய்' என்ற திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக வரப்பெற்றார், வரம்பெற்றார். எம்.ஜி.ஆர். என்ற மிகப்பெரிய மக்கள் சக்தியின் ஃபார்முலா பாதிக்கப்படாமல், ஆனால் அதேசமயம் தன் அறிவின் அகலத்தையும் குறைத்துக்கொள்ளாமல், வசனங்களைத்…