29
Aug
முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்-2 போன்ற தேசப்பற்றுமிக்க திரைப்படங்களின் நாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன், எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் “சொல்லிவிடவா” தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக-முக்கிய வேடத்தில் நடிக்க, தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் படைத்திருக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இணையாக புதுமுகம் சந்தன் குமார் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் கதைக்களம் வெகு சுவாரசியமானது. இதுவரை காணாத வகையில், ஒரு முற்றிலும் புதிய பின்னணியில் இந்த கதை பயணிக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை பிரமிக்கும் வகையில் இத்திரைப்படம் வெகு நேர்த்தியாகப் படம்பிடித்து காட்டியிருக்கிறது. ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், கதையின் தேவைகேற்ப பெரும் நட்சத்திரங்களான சுகாசினி, இயக்குனர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் தங்களது இயல்பானப் பங்களிப்பின்…