இறுதிக் கட்ட படப்பிடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!

இறுதிக் கட்ட படப்பிடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.  இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார். தற்போது சென்னையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்க மால்தீவ்ஸ் தீவில் படப்பிடிப்பு நடைபெற்று  அத்துடன் நிறைவடைகிறது. மீதமுள்ள பாடல் காட்சிக்காக படக்குழுவினர் வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர்.  பாஸ்கர் ஒரு ராஸ்கல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்கம்  : சித்திக் இசை : அம்ரேஷ் வசனம் : ரமேஷ் கண்ணா ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன் எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர் புரொடக்ஷன் டிசைனர் : …
Read More
கேரளா கொள்ளைக்காரன் காயம்குளம் கொச்சுண்ணி -யின் வாழ்க்கை படமாகிறது!

கேரளா கொள்ளைக்காரன் காயம்குளம் கொச்சுண்ணி -யின் வாழ்க்கை படமாகிறது!

உள்ளூர் கதைகளுக்கும் ,உள்ளூர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கும் நமது நாட்டில் பஞ்சமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கேற்ப உள்ளோர் கதைகளும் , அதன் கதாநாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு , கேரளாவின் புகழ் பற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. '36 வயதினிலே' படம் மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்கவுள்ளார். ''காயம்குளம் கொச்சுண்ணி'' என்றே படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது . '' மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின் பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடி அமலா பால். பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் இப்படம் தயாராகவுள்ளது . கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணி யின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் தாண்டி அனைத்து மொழி மக்களாலும் நிச்சயம் ரசிக்கப்படும் '' என தயாரிப்பு தரப்பு கூறுகின்றனர் . 1980களில் நிஜமாகவே வாழ்ந்த…
Read More
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’- செப்டம்பரில் வெளியாகிறது!

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’- செப்டம்பரில் வெளியாகிறது!

 மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட்டது. சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால், நைனிகா உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார்கள். சென்னை, கொச்சின், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன. 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்துக்கு இயக்குநர் ரமேஷ் கண்ணா வசனங்கள் எழுதியுள்ளார். விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாத இறுதியில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் துவங்கவுள்ளது. செப்டம்பரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.ஒற்றைப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் நட்பாகி, எப்படி பெற்றோரைச் சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் கதையாகும். இசை – அம்ரேஷ் பாடல்கள் – பா விஜய், விவேகா வசனம் – ரமேஷ் கண்ணா ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன் எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர் புரொடக்ஷன்…
Read More
ஷாலினி கேரக்டர், ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாற்றும் ஆயுதம்!

ஷாலினி கேரக்டர், ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாற்றும் ஆயுதம்!

மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகி றார்கள். அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் விஷயங்களும் உண்டுதான் . ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். நாய் குணம் மாறாது என்பது போல, ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்கும் சிறந்த குணம் பொறுமை! சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். புரியவில்லையா? அவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள். ஆனால்'இந்த மாதிரி பொண்டாட்டியெல்லாம் படத்துல மட்டுந்தான் சார் கிடைப்பாங்க' என்று ஒரு சொலவடை தமிழகத்தில் உண்டு. ஆனால் அதையும் விட்டுவைக்கவில்லை 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம். ரகுவரனின் சட்டையைப்பிடித்து அவரது மனைவி ஷாலினி குடிக்கலல்ல அப்பறம் என்ன ஊது என சொல்வது, பலருக்கும் கல்யாண வீடியோவை…
Read More