TAROT படம் எப்படி இருக்கிறது ?

 

நடிகர்கள் – Harriet Slater, Adain Bradley, Avantika, Wolfgang Novogratz, Humberly González, Larsen Thompson and Jacob Batalon.

இசை -Joseph Bishara

ஓளிப்பதிவு – Elie Smolkin

படத்தொகுப்பு-Tom Elkins

எழுத்து & இயக்கம் -Spenser Cohen and Anna Halberg (feature film debut)

சோனி பிக்சர்ஸ் வெளியீட்டில் இந்தியாவில் வெளியாக இருக்கும் ஹாலிவுட் ஹாரர் திரைப்படம் TAROT

1992 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் எப்போதும் பேய் படத்திற்கு இன்று தனி மவுசு இருக்கிறது. ஒரு வீட்டுக்குள் இருக்கும் பேயை வைத்துக் கொண்டு, ஒரே இடத்தில் மாட்டிக் கொள்ளும் நபர்களை வைத்து, பல பேய் படங்கள் அங்கு வந்திருக்கிறது. அது உலகம் முழுக்க வசூல் மழையும் பொழிந்திருக்கிறது. பல தினசு தினுசான பேய்களை காட்டும் படங்கள் வருடம் முழுதும் அங்கு வந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் சின்ன பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களை வைத்துக்கொண்டு, வந்திருக்கும் திரைப்படம் தான் டாரட்.

தோழி ஒருத்தியின் பிறந்தநாளை கொண்டாட ஒன்று சேரும் நண்பர்கள், ஒரு வீட்டில் பாழடைந்த ரூமில் இருக்கும் ஹார்ஸ்கோப்பை எடுத்து விளையாடுகிறார்கள். அதிலிருந்து ஒவ்வொருவருக்கும் ராசி பலன் பார்க்கிறார்கள். அந்த ராசிபலன் பின்னால் சபிக்கப்பட்ட பேய் ஒன்று இருக்கிறது. அது ஒவ்வொருவராக கொலை செய்ய ஆரம்பிக்கிறது. அதிலிருந்து யாராவது தப்பிக்கிறார்களா என்பது தான் இந்த திரைப்படம்

Adain Bradley “Grant” and Avantika Vandanapu “Paige” in Screen Gems TAROT

இந்த மாதிரி ஹாலிவுட் திரைப்படங்களுக்கு என்று டெம்ப்ளேட்டாக ஒரே மாதிரியான திரைகள் தான், வரிசையான சாவுகள், மிரட்டும் இசை, பயமுறுத்தும் கேமரா கோணங்கள் இதை வைத்துக் கொண்டு ஒரு ஹாரர் படத்தை எடுத்து விடலாம். இந்த படத்தில் புதிதாக எதுவுமே இல்லை. ஆனால் ஹாரர் படத்திற்கான அத்தனையும் கச்சிதமாக இருக்கிறது. திரைக்கதையில் சுவாரசியமும் இல்லை. அச்சு காப்பி அடித்தால் போல இதுவரை வந்த திரைப்படங்களை காப்பியடித்து, அதே போன்று பல காட்சிகள் இருக்கிறது. ஹாரர் படங்களை நீங்கள் அதிகம் விரும்பி பார்ப்பீர்கள் என்றால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

டாரர் ஹாரர் விரும்பிகளுக்கு மட்டும் !!