எதற்கும் துணிந்தவன் – திரை விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் – திரை விமர்சனம்

  இயக்கம் - பாண்டிராஜ் நடிப்பு - சூர்யா, பிரியங்கா மோகன்,சத்யராஜ்,வினய் கருணை இல்லா மனித மிருகங்களால் சூரையாடப்படும் பெண்களை போராடி மீட்கும் நாயகனின் கதை தான் எதற்கும் துணிந்தவன், நன்றாக வாழும் இரண்டு கிராமங்களில் பெரிய மனிதன் போர்வையில் வலம் வரும் வினய் அவரது இச்சைக்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி, பல தவறூகளை செய்கிறார். இதனால் சில உயிர்களும் பறிபோகின்றன. அதை அறியும் நாயகன் சூர்யா, வில்லனை முறியடித்து அப்பாவிகளை எப்படி காக்கிறார் என்பது தான் கதை. ஜெய்பீம் படத்திற்கு பிறகு மீண்டும் சமூக நோக்கிலான படம் செய்ததில் கவர்கிறார் சூர்யா, ரசிகர்களுக்கு ஏற்ற மசாலா காமெடியும் கலந்து ஒரு குடும்ப படமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுக்கு திரையில் வந்திருக்கும் படம் ரசிகர்களின் மொத்த ஏக்கததையும் போக்கும் வகையில் ஆடல் பாடல் ஆக்சன் காமெடி கருத்து எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். பஞ்ச் வசனம் காமெடி…
Read More
வலிமை –  முழுமை இல்லாத சினிமா.

வலிமை – முழுமை இல்லாத சினிமா.

  இயக்கம் - H வினோத் நடிகர்கள் - அஜித்குமார் ஹுமா குரேஷி மூன்று வருட காத்திருப்பிற்கு பிறகு வந்திருக்கும் அஜித்தின் சினிமா ஆனால் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதாஎன்றால் இல்லை. பைக்-ல் செயின் பறிப்பு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை பிடித்து குற்றங்களை தடுக்கமுயற்சிக்கும் ஹீரோ, அந்த கும்பல் அசாத்தியம் நிறைந்த ஒரு கூடாரம் என தெரிந்த உடன் அவர்களை எப்படிசமாளிக்கிறார் என்பதே கதை. விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரைக்கதைக்கும், வெற்று செண்டிமெண்ட் காட்சிகளால் நிரப்பி வைக்கபடும்திரைக்தைக்கும் இடையில் சிக்கி விழி பிதுங்கி இருக்கிறது வலிமை திரைப்படம். முழுமையாக ஆக்‌ஷன் காட்சிகளால் நகர வேண்டிய அமைப்பை கொண்ட திரைக்கதை ஆக்‌ஷன் காட்சிகளைதனியாகவும், மற்ற காட்சிகளை தனியாகவும் தெரியும் படி ஒட்டாமல் தொங்குகிறது. தனது சாமார்த்தியமான தந்திரத்தால், வேலையில்லாத இளைஞர்களை தன் வசம் இழுத்து குற்றங்களை செய்யவைத்து அதன் மூலம் ஆதாயம் தேடும் வில்லன் கதாபாத்திரம். வில்லன் கதாப்பாத்திரத்தின் வலு, கதையளவில்மட்டுமே உள்ளது, நடிப்பில் பெரிதாக…
Read More
இரை இணைய தொடர் விமர்சனம்

இரை இணைய தொடர் விமர்சனம்

இயக்கம் - ராஜேஷ் எம் செல்வா நடிப்பு - சரத்குமார், அபிஷேக், ஶ்ரீஷா,கௌரி நாயர் இரை புதிதாக தமிழுக்கு வந்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள முதல் இணைய தொடர். சரத்குமார் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்க பேர்ட்ஸ் ஆஃப் பிரே நாவல் இரையாக மாறியிருக்கிறது. ஹாலிவுட்டில் ஒரு டெம்ப்ளேட் இருக்கும் ஒரு வயதான அதிகாரி அவரிடம் ஒரு கேஸ் வரும் அதை அவர் விசாரிக்க ஆரம்பிக்கையில், ஏதோ ஏதோ மர்மங்கள் விடுபடும். இந்த பாணி இதுவரை தமிழில் வந்ததில்லை ஆனால் அந்த ஆசையை போக்கும் வகையில் வந்திருக்கிறது இரை. சரத்குமார் ஓய்வில் இருக்கும் ஒரு காவல் அதிகாரி அரசியல் கட்சி புரோக்கர் ஒருவர் கடத்தப்பட அவரை கண்டுபிடிப்பதற்காக சரத்குமார் கொடைக்கானல் வருகிறார் ஆனால் அது ஒரு பெரிய குழந்தை கடத்தல் கேஸில் கொண்டு விடுகிறது. அது என்ன என்பது தான் கதை. சமூகத்தில் நம்மை சுற்றி நிறைய கெட்ட…
Read More
அன்சார்டட் (uncharted) எப்படி இருக்கிறது ?

அன்சார்டட் (uncharted) எப்படி இருக்கிறது ?

சோனி நிறுவன சார்பில் வெளியாகி உலகம் முழுக்க புகழ்பெற்ற வீடியோ கேம் சீரிஸான 'அன்சார்டட்' தான் அதே பெயரில் அவர்களின் ஃபேவரைட் நடிகரான டாம் ஹாலந்த் நடிப்பில், படமாக வந்துள்ளது. ஆய்வாளர் மெக்கலன் திரட்டிய 500 ஆண்டுகளுக்கு முன்பான மான்காடா மாளிகையின் தங்கப் புதையல், பல ரத்த காவுகளை வாங்கியும் மீட்டெடுக்கப்படாமல் உள்ளது. இந்த தங்கத்துக்கு சரியான வாரிசுகள் தான் என நினைக்கும் சாண்டியாகோ மான்காடா, தனது குடும்ப பாரம்பரியத்தை மீட்க நினைக்கிறார். அதேநேரம் பல பில்லியன்கள் மதிப்புள்ள அந்த தங்கத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது சுல்லி - நேட் - க்ளோயி கூட்டணி. தங்களிடம் இருக்கும் துப்புகளைக் கொண்டு உலகின் மிக பழமையான மர்மங்கள் நிறைந்த அந்தப் புதையலை இரு தரப்பும் எப்படி மீட்கிறது, இதன் பின்னணியில் இருக்கும் சவால்கள் என்ன என்பதை தான் இந்த படம் ஹாலிவுட் பாணி ஆக்சனில் சொல்லியுள்ளது. நாவல், புத்தகங்களை தாண்டி இப்போது வீடியோ கேம்கள்…
Read More
வீரபாண்டியபுரம் – ஜெய் ஜெயித்தாரா ?

வீரபாண்டியபுரம் – ஜெய் ஜெயித்தாரா ?

  இயக்கம்- சுசீந்திரன் நடிகர்கள் - ஜெய், மீனாக்‌ஷி, பாலசரவணன் சுசீந்திரன் ஆரம்ப அறிமுக காலகட்டங்களில் அனைவரையும் யாரிவர் என திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ் சினிமா பார்க்காத கதைகளை அச்சு அசலாக பேசுவதாக பாரட்டப்பட்டவர், ஆனால் அப்படிபட்டவர் சமீப காலங்களில் அய்யோ அவரா ? என கவலைப்பட வைக்கிறார். அவரது சமீப கால படங்கள் சோபிக்காத நிலையில், ஜெயிக்க நினைத்து ஒரு பழிவாங்கல் கதையை கமர்ஷியல் மசாலா தூவி எடுத்திருக்கிறார். ஒரு கிராமம் அருகே இரண்டு குழுக்கள் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்க காத்திருக்கிறார்கள். அந்த கூட்டத்திற்குள் ஒரு குழுவின் மாப்பிள்ளையாக உள்ளே நுழைகிறார் ஜெய், அவர் என்ன செய்கிறார் என்பது தான் திரைக்கதை. படு மோசமான 80 கால திரைக்கதை, அதை விட மோசமான இயக்கம் திடீர் திடீரென வரும் பாட்டு என படம் நம் பொறுமையை சோதிக்கிறது. ஜெய் இதில் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் மோசமில்லை. அவர் இன்னும்…
Read More
மகான் – விமர்சனம்!

மகான் – விமர்சனம்!

இயக்கம் - கார்த்திக்சுப்புராஜ் நடிகர்கள் - விக்ரம், துருவ், பாபி சிம்ஹா இரண்டு சிந்தாந்தங்களுக்கு இடையேயான சண்டை தான் மகான். தன்னுடைய சுய விருப்பத்தின் படி ஒரு வாழ விருப்பபடும் நாயகன், அதனால் தன் குடும்பத்தின் கோபத்திற்கு ஆளாகி, தனியாளாக மாற நேரிடுகிறது. அதன் பின் அவனது வாழ்கையில் நிகழும் சம்பவங்கள் தான் கதை. ஆழமான கதையோட்டத்தில் உருவாக்கபட்ட திரைக்கதை. காந்திய சிந்தாந்தங்களில் தான் நீ வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஒரு பக்கம், எனக்கு விருப்பமான தவறுகள் நிறைந்த வாழ்கையை வாழவிடாமல் என்னை தடுக்காதீர்கள் என்ற சுதந்திரம் ஒரு பக்கம் என இருமுனைகளின் போராட்டத்தை கதைகளமாக எடுத்ததற்கு இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும். படத்தின் அடிநாதம் அழகாய் அமைந்திருந்தாலும், திரைக்கதையில் கோட்டைவிட்டு இருக்கிறார்கள் படக்குழு. பல காட்சிகள் வெறுமனே ஓடுவது போல் உள்ளது. ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஆழமான தேவை இருக்கிறது, ஆனால் அது எதுவும் திரையில் வரவில்லை. மிகப்பெரிய சிந்தாந்த போராட்டமாக…
Read More
F I R திரை விமர்சனம் !

F I R திரை விமர்சனம் !

இயக்கம் - மனு ஆனந்த் இசை - அஷ்வத் நடிகர்கள் - விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், ரைசா வில்சன் ஒரு முஸ்லீம் பெயர் இருப்பாதாலேயே ஒருவன் வாழ்வில் என்னென்ன சிக்கல்களை அனுபவிக்க வேண்டி வரும். நம் நாடு இன்றைய காலகட்டத்தில் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை இது தான் இந்த திரைப்படத்தின் மையம். சென்னையில் கெமிக்கல் இன்ஞ்சினியரிங் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞன் இர்ஃபான். அன்பான அம்மா அழகான வாழ்க்கை என எளிமையாக வாழ்ந்து வருகிறார். அவர் பார்ட் டைமாக வேலை செய்ய போகும் இடத்தில் நம் அரசாங்கம் கண்காணிக்கும் தீவிரவாதியை சந்திக்கிறார். நேஷனல் அதிகாரிகள் இர்ஃபானை பிந்தொடர அவர் போன இடத்தில் பாம் வெடிக்க பழி அவர் மேல் விழுகிறது. தன் முஸ்லீம் பெயரால் பழிக்கு ஆளாகியுள்ள நாயகன் அதிலிருந்து வெளிவருகிறாரா என்பது தான் படம். சிறுபான்மையினரான முஸ்லீம் நண்பர்கள் மீது இந்தியாவில் தற்போது நடந்து வரும்…
Read More
கூர்மன்-  திரை விமர்சனம் !

கூர்மன்- திரை விமர்சனம் !

இயக்குநர் - பிரயன் B ஜார்ஜ் நடிகர்கள் - ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் தன் காதலி இறப்பினால் தனியே வசிக்கும் காவல் அதிகாரியிடம் ஒரு கேஸ் வருகிறது அதை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் அதனால் வரும் சிக்கல்கள் என்ன என்பது தான் படம். மனதிற்குள் நினைப்பதை அறியும், மைண்ட் ரீடர் ஒருவன் தன் காதலி இறந்ததால் போலீஸிலிருந்து விலகி தனியே வசிக்கிறான். அவனிடம் அவ்வப்போது சிக்கலான கேஸ்களில் குற்றவாளிகளை விசாரிக்க உதவி கேட்கிறார் உயரதிகாரி. அந்த மாதிரி ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் வரும் குற்றவாளி ஒருவன் திடீரென தப்பித்து விட அவனை நாயகன் பிடிக்கிறாரா அந்த கேஸ் என்ன ஆகிறது என்பதே படம். உண்மையில் படம் ஆரம்பிக்கும் இடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அடுத்து அடுத்து வரும் திருப்பங்களும் போரடிக்காத சினிமாவை பார்க்கும் உணர்வை தருகிறது. திரைக்கதையும் கொஞ்சம் வித்தியாசப்பட்டு இருக்கிறது. இது எல்லாம் கொஞ்சம் ப்ளஸ்…
Read More
வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்

வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்

இயக்கம் - து ப சரவணன் நடிகர்கள் - விஷால், யோகிபாபு, ரவீனா ரவி தங்கையை கொன்ற வில்லனை தேடி பழிவாங்கும் நாயகன் இது தான் கதைக்கரு. எஸ் ஐ ஆவதற்காக தயாராகிகொண்டிருக்கிறார் நாயகன் விஷால், அப்பா போலீஸ், அன்பான தங்கை என அழகான குடும்பம் இதில் ஒரு காதலி வேறு, நியாயம் தர்மம் என பேசிக்கொண்டு திரிகொண்டு திரிகிறார். இடையில் சில ரௌடிகளால் தங்கைக்கு தொல்லை ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் இன்னொரு பெண்ணுக்கு வீடியோ எடுத்து மிரட்டும் இளைஞர்களின் பிரச்சனை. அது இல்லாமல் இன்னொரு பக்கம் பேக்டரியை மூட சொல்லும் போராளிக்கும் அரசியல் வாதி வில்லனுக்கும் பிரச்சனை இந்த மூன்று கதைகளும் எப்படி இணைகிறது என்பது தான் படம். கதையை சொல்லும் போது நன்றாக தான் இருக்கிறது ஆனால் படம் தான் கொடூர அனுபவத்தை தருகிறது விஷால் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் குடும்பத்திற்காக பழி வாங்குவார் என தெரியவில்லை.…
Read More
முதல் நீ முடிவும் நீ திரை விமர்சனம் !

முதல் நீ முடிவும் நீ திரை விமர்சனம் !

இயக்கம் - தர்புகா சிவா நடிகர்கள் - ஹரீஷ், அமிர்தா, ரகுநாத் ஒரு திரைப்படத்துல என்ன இருக்கனும்? கதையா? காட்சிகளா? நடிகர்களின் அசாத்திய நடிப்பா? இல்லை ஒரு புது உலகத்தை காட்டுற ஆச்சர்யமா? இல்லை நம்ம வாழ்ற உலகத்துக்குள்ள இருக்க அழகியலான அனுபவமா? இப்படி அடுக்கிகிட்டு போற கேள்விக்கான பதில் என்னன்னா? பதிலே இல்ல, அப்படிங்கிறது தான் பதில். காரணமில்லாம நடக்குற அற்புதங்களும், ஆபத்துகளும் தான் வாழ்கை. அந்த அற்புதத்தையையும், ஆபத்தையையும், கூடவே வாழ்கையோட ஆனந்தத்தையும் தர முயற்சி பண்ண படம் தான் “முதல் நீ, முடிவும் நீ”. பள்ளி பருவத்தோட சந்தோசத்துலயும், அங்க கிடைக்கிற ஆனந்தத்துலயும் வாழ்ந்துட்டு இருக்க பசங்களோட வாழ்கை அவங்க எடுக்கிற முடிவுகளால எப்படி மாறுது என்பது தான் கதை. 90 களின் இறுதியில் பள்ளியில் படிக்கும் பசங்களின் வாழ்க்கை தான் படம். நம்மளோட பள்ளி பருவ வாழ்க்கைய நாமளே போய் வாழ்ந்துட்டு வந்த உணர்வ தருது…
Read More