சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ எப்படி இருக்கிறது ?

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ எப்படி இருக்கிறது ?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளி வந்து இருக்கும் கங்குவா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா ? 1000 வருடத்திற்கு முந்தைய காலம், நிகழ் காலம் என இரண்டு கால கட்டத்தில் நடக்கும் கதை. அறிவியல் ஆராய்ச்சி கூடத்திலிருந்து ஒரு சிறுவன் தப்பிக்கிறான் அவன் கோவாவில் பவுண்டி ஹண்டராக இருக்கும் சூர்யாவை தேடி வருகிறான், அவனுக்கும் சூர்யாவுக்கும் என்ன தொடர்பு எனும் போது ஆயிரம் வருடத்திற்கு முன்னால் கதை விரிகிறது. அந்த காலகட்டத்தில் சூர்யாவுக்கும் அந்த சிறுவனுக்கும் என்ன நடந்தது. அந்த சிறுவனை கொல்ல துரத்துபவர்கள் யார்? நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் அந்த சிறுவனை சூர்யா காப்பாற்றுகிறாரா ? என்பது தான் படம் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சம். படம் விசுவல் டிரீட், கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் வரலாற்று காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. யாரும் தனி நடிகர்களாக…
Read More
வீட்டுக்குள் மாட்டிக்கொண்டது பிளடி பெக்கரா?

வீட்டுக்குள் மாட்டிக்கொண்டது பிளடி பெக்கரா?

நடிகர்கள் : கவின் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன், பிரியதர்ஷினி இசை : ஜென் மார்டின் இயக்கம் : சிவபாலன் முத்துக்குமார் மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர் ஹாலிவுட்டில் ஒரு அறைக்குள் அல்லது வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதைகள் அதிகம் அந்த வகையில் தமிழுக்கு கொஞ்சம் புதிது தான். பிளடி பெக்கர் முழுக்க ஒரு வீட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் பிச்சைக்காரனின் கதை நாயகன் கவின். தனக்கு கண் பார்வை தெரியாது, காது கேட்காது என மக்களை ஏமாற்றி பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். கவினுக்கு எப்படியாவது மாளிகையில் வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இந்நிலையில் நடிகர் ஒருவர் தன்னுடைய மாளிகையில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் போடுகிறார். இந்த விருந்தில் கவினும் கலந்து கொள்கிறார். அந்த ஆடம்பர மாளிகையில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக உள்ளே போக, அங்கு ஒரு வில்லங்கத்தில்…
Read More
Lucky Bashkar Sweet Surprise !!

Lucky Bashkar Sweet Surprise !!

ஒரிஜினல் தெலுங்கு, தமிழ்ல டப்பிங்.. ஆனா கதை நடக்குறது மும்பையில … Sweet Surprise இந்த குழப்பங்கள் இல்லாம.. எளிமையான மனிதனோட குடும்பக்கதையா.. இத புரிய வச்சது தான் இந்தப்படத்தோட வெற்றி. இந்த டிரெய்லர் பார்த்தப்பவே படத்த எதிர்பார்த்தேன்… ஏன்னா Con man அது சம்பந்தமான படங்கள் எனக்குப் பிடிக்கும், அதுவும் மக்கள ஏமாத்தாம.. அரசாங்கத்த ஏமாத்துற Con man Story இன்னும் சுவாரஸ்யமா இருக்கும். Wolf of Wall Street ஆரம்பிச்சு, Scam 93 வரைக்கும் நிறைய ஹிட் சினிமாக்கள் இருக்கு.., இந்தப்படமும் அதே டெம்ப்ளேட் தான், என்னதான் பேங்ல வேலை பார்த்தாலும், கஷ்டபடுற குடும்பத்துல, மாச சம்பளத்த தாண்டி செலவு இருக்குற குடும்பத்துல.. இருக்க ஒருத்தன், பணத்துக்கா மானம், மரியாதை எல்லாமே போற இடத்துல…. நேர்மைய தூக்கி கடாசிட்டு… துணிஞ்சு ஸ்கேம்ல இறங்கி சம்பாதிக்க ஆரம்பிக்க,,, கோடி கோடியா கொட்டுது…. அந்த ஸ்கேம அவன் எப்படி பண்றான்? அந்த…
Read More
கல்வியின் அவசியம் பேச முற்படும் சார் திரைப்படம் !!

கல்வியின் அவசியம் பேச முற்படும் சார் திரைப்படம் !!

தனது தவறுகளிலிருந்து நல்ல படங்களில் நடித்து வரும் விமல் நடிப்பில், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சார். கல்வி எவ்வளவு முக்கியம் அது சமூகத்தை எவ்வளவு மாற்றும், அதற்கு ஆசிரியர்கள் எந்தளவு தியாகத்துடன் உழைக்கிறார்கள் என்பது தான் படத்தின் கரு. மாங்கொல்லை கிராமத்தில் உள்ள சிறிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சரவணன். தனது தந்தை போராடி கட்டிய இந்த பள்ளியை தான் நடுநிலை பள்ளியாக மாற்றியது போல் தனது மகன் ( விமல்) இந்த பள்ளியை மேல்நிலை பள்ளியாக மாற்ற வேண்டும் என்பது தான் அவரது ஆசையாக இருக்கிறது. அவரது மகன் சிவஞானம் ( விமல்) . வெளியூரில் படித்துவிட்டு விருப்பமே இல்லாம சொந்த ஊருக்கு ஆசிரியராக வருகிறார். விமலின் தாத்தாவை சாமி அடித்து அவர் புத்தி பேதலித்துவிட்டதாக ஊருக்குள் ஒரு கதை வலம் வருகிறது. சின்ன வயதில் இருந்தே கிறுக்கு வாத்தியார் பேரன் என்று…
Read More
ஆலன் படம் எப்படி இருக்கிறது ?

ஆலன் படம் எப்படி இருக்கிறது ?

புதுமுக இயக்குநர் ஆர்.சிவா இயக்கத்தில் எட்டுத்தோட்டாக்கள் புகழ் வெற்றி நடித்திருக்கும் திரைப்படம் ஆலன். ஆன்மிகமும் காதலும் கலந்த வித்தியாசமான களத்தில் ஒரு கதை. இயக்குநர் நிறைய புத்தகமும் இலக்கிய நாட்டமும் கொண்டிருப்பார் போலும் அதை திரையில் கொண்டுவர ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் படத்தின் பட்ஜெட்டும், துணை நடிகர்களின் அமெச்சூர் நடிப்பும் படத்தை சராசரி படமாக்கியிருக்கிறது. சிறு வயதில் விபத்து ஒன்றில் தனது குடும்பத்தை இழந்த நாயகன் வெற்றி, தன் மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று அங்கிருக்கும் மடத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் மூழ்க நினைக்கிறார். ஆனால், எழுத்தாளர் ஆக வேண்டும் என்று விரும்பும் அவரது மனது 10 வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீகத்தை ஆட்கொள்ள மறுக்கிறது. இதனால், தான் நேசிக்கும் எழுத்துலகை நோக்கிய தனது பயணத்தை தொடங்குகிறார். அப்போது அவருக்கு கிடைக்கும் ஒரு வெளிநாட்டு பெண்னின் நட்பு, அவரது பாலைவனம் போன்ற வாழ்க்கையை சோலைவனமாக மாற்றுகிறது. அதன் மூலம் துறவியாக சுற்றி திரிந்தவர் சக…
Read More
தில் ராஜா  திரை விமர்சனம் !!

தில் ராஜா திரை விமர்சனம் !!

நடிப்பு : விஜய் சத்யா, ஷெரின், ஏ.வெங்கடேஷ், வனிதா விஜயகுமார், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா, ஞானசமந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், முக்குத்தி முருகன் இயக்கம் : ஏ.வெங்கடேஷ் இசை: அம்ரிஷ் தயாரிப்பு: கோல்டன் ஈகிள் ஸ்டுடியோ - கோவை பாலசுப்ரமணியம் பல முன்னணி ஹீரோக்களை வைத்து கமர்ஷியல் படம் தந்த ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தில் ராஜூ நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, மனைவி மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது, எதிர்பாராத பிரச்சனை ஒன்று அவர்களை துரத்துகிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக விஜய் சத்யா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையால், அவர் மட்டும் இன்றி அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இதனால், ஒரு பக்கம் வில்லன் கோஷ்ட்டி மறுபக்கம் காவல்துறை…
Read More
மெய்யழகன் நாஸ்டாலஜியாவை தூண்டும் அழகான சினிமா!!

மெய்யழகன் நாஸ்டாலஜியாவை தூண்டும் அழகான சினிமா!!

  96 படம் மூலம் மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த, இயக்குநர் பிரேம் இயக்கியிருக்கும் திரைப்படம் மெய்யழகன். முன்னதாக இந்தப்படத்தை ஒரு நாவலாக எழுதி வைத்திருந்தவர் நண்பர்களின் வற்புறுத்தலால் சினிமாவாக்கியிருக்கிறார். ஆனால் அதிலும் ஆச்சரியங்கள் தந்திருக்கிறார். மனம் தடுமாறும் ஒரு நாளில் ஒரு கடற்கரையில் அமர்ந்து, நம் வாழ்க்கை நினைவுகளை மீண்டும் திரும்பி அசை போடும்போது ஏற்படும் ஒரு உணர்வை இந்தப்படம் தந்துவிடுகிறது. பிரேம் உலகத்தை, மனிதர்களை பார்க்கும் விதம், சம்பவங்களை உள்வாங்கும் விதம் எல்லாம் அழகின் உட்சமாக இருக்கிறது. அதை திரையில் தரும் விதம் வாவ் போட வைக்கிறது. தன் உயிராக நினைத்த வீட்டை விட்டு, ஊரை விட்டு சின்ன வயதிலேயெ வந்தவன், 22 ஆண்டுக்கு பிறகு சொந்தக்கார தங்கை கல்யாணத்திற்கு செல்கிறான். அங்கு தன் மேல் பாசம் கொட்டும் ஒருவனை சந்திக்கிறான். அவனுக்கு அவன் பெயர் கூட தெரியவில்லை, ஆனால் அவன் இவனது மொத்த ஜாதகமும்…
Read More
சட்டம் என் கையில் திரை விமர்சனம்!

சட்டம் என் கையில் திரை விமர்சனம்!

சீட்ஸ் என்டர்டைன்மண்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாச்சி இயக்கத்தில், நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சட்டம் என் கையில். மது போதையில் கார் ஓட்டி செல்லும் ஒரு இளைஞன், தெரியாமல் ஒரு விபத்தை ஏற்படுத்தி விடுகிறான். அந்த விபத்தில் ஒருவன் மரணம் அடைந்து விட, அவனை தூக்கி டிக்கியில் போட்டுக் கொண்டு செல்லும்போது, போலீஸ் செக்கிங் கில் மாட்டிக் கொள்கிறான். வேறொரு இடத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருக்க, அதை விசாரிக்கும் போலீஸ், இவன் இடித்து சாகடித்தவனிடம் வருகிறது. இந்த கொலை குற்றங்களை எல்லாம் அவன் மேல் போட்டு, அவனை குற்றவாளியாக்க போலீஸ் திட்டமிடுகிறது. அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதுதான் இந்தப் படம். ஓர் இரவு மலைமுகட்டில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன், ஒரு சில பாத்திரங்கள், அங்கு நடக்கும் பரபரப்பு திருப்பங்கள், என ஹாலிவுட் பாணி திரைக்கதையை முதல் படத்தில் முயன்று இருக்கிறார்.…
Read More
நந்தன் திரை விமர்சனம் !!

நந்தன் திரை விமர்சனம் !!

  நடிகர்கள் : எம்.சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, எஸ்.மாதேஷ், மிதுன் போஸ், பாலாஜி சக்திவேல், இசை : ஜிப்ரான் இயக்கம் : இரா சரவணன் நம்  நாட்டில் ஆதி காலத்திலிருந்தே  தலித்திய ஒடுக்குமுறை நிகழ்ந்து  வருகிறது.  இப்போதைய காலகட்டத்தில் அது இல்லை என்று பேசப்பட்டாலும், இன்றும் கிராமப்புறங்களில் ஜாதிக்கொடுமை வலுவாகவே இருக்கிறது. நம் அரசியல் அமைப்பு தலித்துக்களுக்கான உரிமையை தந்தாலும், சமூகம் அதைத் தரவில்லை. கீரிப்பட்டி,  பாப்பாட்டி பற்றி நாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். ஆனால் அதை அப்படியே அருகில் இருந்து பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஆம் அங்கு என்ன நடந்திருக்கும் என்பது தான் இந்தப்படம் வணங்காமுடி என்ற கிராமத்தில் உயர்சாதியை சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) குடும்பம் தான் தலைமுறை தலைமுறையாக தலைவர் பதவியில் இருந்து வருகிறார்கள். தலைவர் பதவியைத் தனக்கான மரியாதையாகவும் பார்க்கும் பாலாஜி சக்திவேல், தன்னை எதிர்த்து யாரும் தலைவராக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். திடீரென அந்த…
Read More
‘அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’ (ARM) விமர்சனம் !!

‘அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’ (ARM) விமர்சனம் !!

டொவினோ தாமஸ் நடிப்பில் 50 வது படமாக வெளியாகியுள்ள திரைப்படம் 'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்' (ARM) சின்ன சின்ன வேடங்களில் நடித்து, நாயகனாக உயர்ந்து, வித்தியாசமான படங்கள் மூலமாக மக்கள் மனங்களை கவர்ந்த, டொவினோ தாமஸின் ஐம்பதாவது படம் இது. ஐம்பாதவது திரைப்படம் என்பதால் பெரிய பட்ஜெட் , வரலாற்று கதைக்களம் என வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.   பாரம்பரியமாக வீரனாக வாழ்ந்து வந்த பரம்பரை திருட்டு பட்டம் கட்டப்பட்டு வாழ்கிறது. நாயகனை நல்லவன் என்றாலும் கள்வன் என மக்கள் பழிக்கிறார்கள். கிராமத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த சிலை ஒன்று களவுபோக, அதனை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்குகிறார் நாயகன் அஜயன். அந்த சிலையின் பின்னணி என்ன? அதனை கதாநாயகன் அஜயன் எப்படி கண்டுபிடித்தார்? அவருக்கும் மூதாதையருக்கும் என்ன சம்பந்தம் என்பதே படத்தின் கதை. 1900களில் ஹரிபுரம் என்ற ஊரில் விண்கல் ஒன்று விழுகிறது. அதனை அறிந்த அரசர் தனது சமஸ்தானத்திற்கு எடுத்துச்…
Read More