நடிப்பு : விஜய் சத்யா, ஷெரின், ஏ.வெங்கடேஷ், வனிதா விஜயகுமார், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா, ஞானசமந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், முக்குத்தி முருகன்
இயக்கம் : ஏ.வெங்கடேஷ்
இசை: அம்ரிஷ்
தயாரிப்பு: கோல்டன் ஈகிள் ஸ்டுடியோ – கோவை பாலசுப்ரமணியம்
பல முன்னணி ஹீரோக்களை வைத்து கமர்ஷியல் படம் தந்த ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தில் ராஜூ
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, மனைவி மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது, எதிர்பாராத பிரச்சனை ஒன்று அவர்களை துரத்துகிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக விஜய் சத்யா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையால், அவர் மட்டும் இன்றி அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இதனால், ஒரு பக்கம் வில்லன் கோஷ்ட்டி மறுபக்கம் காவல்துறை துரத்த, குடும்பத்துடன் வாழ்வா…சாவா…!, என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சத்யா, அதில் இருந்து எப்படி மீள்கிறார்? என்பதை கமர்ஷியலாகவும், திரில்லராகவும் சொல்வது தான் ‘தில் ராஜா’.
தமிழ் சினிமாவுக்கென்று அளவு எடுத்து தைத்த சட்டை மாதியான கதை அதை கரம் மசாலா தூவி தந்திருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ். ஒரு கம்ர்ஷியல் படமாக மட்டுமில்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் தந்திருக்கிறார்.
புதுமுகம் விஜய் சத்யா ஆஜானுபாகுவான தோற்றத்துடன் தமிழ் சினிமா ஹீரோவுக்கு தேவையான அத்தனை மசங்களுடன் உள்ளார். நன்றாக டான்ஸ் வருகிறது, ஆக்சன் வருகிறது, நடிக்கவும் வருகிறது.
விஜய் சத்யாவின் மனைவியாக ஷெரின், பாடல்களுக்கு மட்டும் பயன்படும் நாயகியாக அல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் நாயகியாக வலம் வருகிறார்.
அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நடித்திருக்கிறார். வில்லனாக பல இடங்களில் மிரட்டுகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமாருக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரோல் இல்லை.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சம்யுக்தா ஓகே, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜய் டிவி பாலாவின் வசனங்களில் சிரிக்க வைக்கிறார்.
இமான் அண்ணாச்சி, கு.ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் முகம் காட்டும் வேலையை மட்டும்செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோ வி.நாராயணாவின் கேமரா சேசிங் காட்சிகளை வேகமாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ஆக்ஷன் காட்சிகளை அமர்க்களமாகவும் படமாக்கியிருக்கிறது. அம்ரீஷ் இசை கமர்ஷியல் படத்திற்கு தேவையானதை செய்கிறது.
ஒரு கம்ர்ஷியல் படத்திற்கு தேவையான அத்தனையும் படத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது, இந்த மாத்ரியான கமர்ஷியல் படங்கல் தேவழக்காக மாறி வருகிறது, இளைஞர்களின் ரசனையும் மாறி வருகிறது. ஆனாலும் தில் ராஜு படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.