சட்டம் என் கையில் திரை விமர்சனம்!

சீட்ஸ் என்டர்டைன்மண்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாச்சி இயக்கத்தில், நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சட்டம் என் கையில்.

மது போதையில் கார் ஓட்டி செல்லும் ஒரு இளைஞன், தெரியாமல் ஒரு விபத்தை ஏற்படுத்தி விடுகிறான். அந்த விபத்தில் ஒருவன் மரணம் அடைந்து விட, அவனை தூக்கி டிக்கியில் போட்டுக் கொண்டு செல்லும்போது, போலீஸ் செக்கிங் கில் மாட்டிக் கொள்கிறான். வேறொரு இடத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருக்க, அதை விசாரிக்கும் போலீஸ், இவன் இடித்து சாகடித்தவனிடம் வருகிறது. இந்த கொலை குற்றங்களை எல்லாம் அவன் மேல் போட்டு, அவனை குற்றவாளியாக்க போலீஸ் திட்டமிடுகிறது. அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதுதான் இந்தப் படம்.

ஓர் இரவு மலைமுகட்டில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன், ஒரு சில பாத்திரங்கள், அங்கு நடக்கும் பரபரப்பு திருப்பங்கள், என ஹாலிவுட் பாணி திரைக்கதையை முதல் படத்தில் முயன்று இருக்கிறார். முதல் பாதியில் தடுமாறினாலும் இரண்டாம் பாதியில் கதை முடிச்சுகள் அவிழும் பொழுது ஒரு நல்ல திரில்லர் படத்தின் பாதிப்பை உணர முடிகிறது.


நகைச்சுவை நடிகராக இருந்த சதீஷ் முழு நேர ஹீரோவாக மாறி இருக்கிறார் இந்த படத்தில் காமெடி ஜானகிரிலிருந்து முழுக்க ஒரு பரபர திரளானது திரில்லர் ஜானருக்கு மாறி இருக்கிறார் கடவுளுக்கு அவர் சீரியஸாக நடிக்க வேண்டும் ஆனால் அவர் சீரியஸாக நடிப்பதை நம்மால் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அஜய் ராஜ், பாவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவும் இசையும் ஏற்காட்டின் இரவை திரையில் கொண்டு வந்துள்ளது.

ஒரு போலீஸ் ஸ்டேஷன் எப்படி இருக்கும், அதில் உள்ள காவல் அதிகாரிகள் எப்படி ஒரு கேசை கையாள்வார்கள், அப்பாவிகள் எப்படி சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பது தான் கதை மையம். அதை மிக நுணுக்கமாக திரைக்கதை ஆக்கி இருக்கிறார் இயக்குநர். ஆனால் படத்தில் பரபரப்பாக சம்பவங்கள் நடந்தாலும் படத்தின் உருவாக்கம் நம்மை கொஞ்சம் தள்ளியே வைக்கிறது. முதல் படத்தின் தடுமாற்றம் படத்தில் தெரிகிறது.

சட்டம் என் கையில் ஒரு நார்மாலான திரில்லர் படம்.