ஒரிஜினல் தெலுங்கு, தமிழ்ல டப்பிங்..
ஆனா கதை நடக்குறது மும்பையில …
Sweet Surprise
இந்த குழப்பங்கள் இல்லாம.. எளிமையான மனிதனோட குடும்பக்கதையா.. இத புரிய வச்சது தான் இந்தப்படத்தோட வெற்றி.
இந்த டிரெய்லர் பார்த்தப்பவே படத்த எதிர்பார்த்தேன்… ஏன்னா Con man அது சம்பந்தமான படங்கள் எனக்குப் பிடிக்கும், அதுவும் மக்கள ஏமாத்தாம.. அரசாங்கத்த ஏமாத்துற Con man Story இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்.
Wolf of Wall Street ஆரம்பிச்சு, Scam 93 வரைக்கும் நிறைய ஹிட் சினிமாக்கள் இருக்கு..,
இந்தப்படமும் அதே டெம்ப்ளேட் தான்,
என்னதான் பேங்ல வேலை பார்த்தாலும், கஷ்டபடுற குடும்பத்துல, மாச சம்பளத்த தாண்டி செலவு இருக்குற குடும்பத்துல.. இருக்க ஒருத்தன், பணத்துக்கா மானம், மரியாதை எல்லாமே போற இடத்துல….
நேர்மைய தூக்கி கடாசிட்டு… துணிஞ்சு ஸ்கேம்ல இறங்கி சம்பாதிக்க ஆரம்பிக்க,,, கோடி கோடியா கொட்டுது…. அந்த ஸ்கேம அவன் எப்படி பண்றான்? அந்த சுழலுக்குள்ள சிக்கி எப்படி வெளில வர்றாங்கிறது தான் கதை..
செம்ம ஒன்லைன்.. படத்துல பிடிச்சிது நேர்கோட்டு கதை, பத்து நிமிசத்துக் ஒரு தரம் படத்துல ஒரு பிரச்சனை முடிஞ்சு, ஹீரோவுக்கு அடுத்த பிரச்சனை மாறி மாறி வந்துட்டே இருக்கு.. அத செம்ம சுவராஸ்யமாவும் சொல்லிருக்காங்க.. க்ளைமாக்ஸ் வரைக்கும் எங்கயும் எந்த தொய்வும் இல்லாம படம் பறக்குது.
அதவிட முக்கியமா பேங்க், ஷேர் மார்க்கெட், இம்போர்ட்னு எல்லா ஸ்கேமையும் எளிமையா புரிய வச்சுருக்காங்க..
துல்கர் சல்மான் தெலுங்குல நடிச்சாலே பிளாக்பஸ்டர் தான் போல..
Mukundan Unni Associates மலையாளப்படம் பார்த்திருக்கீங்களா? கிட்டதட்ட அந்த மாதிரி ஒரு கேரக்டர், மொத்த படத்தையும் தாங்கிருக்காரு.. வேறு யார் பக்கமும் படம் திரும்பல.. திருப்பவும் விடல.,, போரடிக்காம பார்த்துக்கிறாரு..
மீனாக்ஷி சௌத்திரி காதல் மனைவி, அழகான குடும்ப பொண்ணு… நல்லாவே பண்ணிருக்காஙக..
பேங்ல, வீட்ல, தெருவுல, ஸ்கேம் பார்ட்னர் ராம்கி இப்படி எக்கசக்க கேரக்டர் இருக்காங்க ஆனா எல்லாரையும் லாஜிக்கோட கோர்த்தது அழகு.
சின்ன சின்ன விசயங்கள முன்னாடி சொல்லிட்டு அத பின்னாடி இணைச்சது அழகு..
கொஞ்சம் உஷாரானா நிறைய லாஜிக் ஓட்டை தெரியும் 80 கள்ல கதைய அமைச்சதுல ஆரம்பிச்சு.. அத சரியா நமக்கு தெரியாம அடைச்சிட்டாங்க..
வாத்திங்கற மொக்க படத்துக்கப்புறம் வெங்கி அட்லூரி உண்மையாவே சர்ப்ரைஸ் பண்ணிருக்காரு!
படத்துல மும்பை செட் அமைச்ச ஆர்ட் டைரக்ரட தனியா பராட்டனும் அந்த பேங்க் செட்னு யாருமே சொல்ல மாட்டாங்க அவ்வளவு தத்ரூபம் வாழ்த்துக்கள்.
தீபாவளிக்கு Confirm winner
சரி இப்ப மேட்டருக்கு வருவோம்
பணத்துக்கு கஷ்டபடுற ஒருத்தன், ஒரு டீமோட தன் மூளைய பயன்படுத்தி, ஸ்கேம் பண்ண ஆரம்பிச்சு, பணத்தோட ஆசையில தொலைஞ்சி போய், பின்னாடி என்னதான் இருந்தாலும் உறவுகள், வழக்கை முக்கியம்னு புரிஞ்சு, திருந்தி ஜெயிக்கிறான்.
இது தான் இந்தப்படத்தோட கதை ..
இல்ல இல்ல..
2010 ல ஷாகித் கபூர் நடிப்புல வந்த
Badmaash Company இந்தி
படத்தோட கதை,
அப்படியே உருவிருந்தாலும் திரைக்கதைய முழுசா மாத்தி, சூப்பரா பிரசண்ட் பண்ணிருக்காங்க.., கண்டிப்பா அந்தப்படம்னு சொல்லவே முடியாது.
மிஸ் பண்ணாம தியேட்டர்ல பார்த்து என்ஞாய் பண்ணுங்க
Related posts:
கே.ஆர்.ஜி. (KRG) ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் (TVF) மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணையப்போகிற...July 22, 2023
"புளூ ஸ்டார்" ஃபேமிலி எண்டர்டெயினர் !!January 13, 2024
விமர்சனம் செய்ய அனுமதியுங்கள்.. 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' பட தயாரிப்பாளர் கோரிக்கை!December 7, 2024
கார்த்தி கிரேட் மேன் - நிகிலா விமல் நெகிழ்ச்சி!December 12, 2019
வி3 என்ன சொல்ல வருது?January 7, 2023