கீர்த்தி சுரேஷு ஆரம்பித்த புதிய பிஸினஸ் !

கீர்த்தி சுரேஷு ஆரம்பித்த புதிய பிஸினஸ் !

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையான இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகையான இவர், தற்போது தமிழ், தெலுங்கில் என பலமொழிகளில் பிசியா நடிச்சு வருகிறார். தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வரும் அவர், செல்வராகவனுடன் இணைந்து ‘சாணிக் காயிதம்’ படத்திலும், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள கீர்த்தி சுரேஷ், டொவினோ கதாநாயனாக நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார். இதற்கிடையே திரைப்பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனல் ஆரம்பித்து, தங்களது வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷும் புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், வீடியோ லிங்க் ஒன்றை இணைந்துள்ளார்.…
Read More
ப்ரணவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹ்ருதயம்’ படத்துக்கு சென்னையில் பலத்த வரவேற்பு !

ப்ரணவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹ்ருதயம்’ படத்துக்கு சென்னையில் பலத்த வரவேற்பு !

  மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலின் மகன்தான் ப்ரணவ். பாபநாசம், லைப் ஆப் ஜோசுட்டி ஆகிய படங்களில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு ‘ஆதி’ என்ற படத்தின் ஹீரோவாக அறிமுகமான இவர், தற்போது ஹ்ருதயம் என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார் சென்னை கல்லூரியில் படிக்கும் மலையாள மாணவனின் வாழ்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு சென்னையில் பலமான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தை வினித் ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார். ஒரு இளைஞனின் கல்லூரி முதல் திருமணம் வரையான நிகழ்வுகளை வைத்து இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 21-ஆம் தேதி ரிலீஸானது. சென்னையில் அனைத்து மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களிலும் இப்படத்துக்கு ஏக வரவேற்பு கிடைத்திருக்கிறது தமிழ் படங்களுக்கு வரவேற்பு இல்லாத நிலையில் இப்படத்திற்கு பெரும்பாலும் ஹவுஸ்…
Read More
ஹிருதயம் மலையாள படம் எப்படி இருக்கிறது ?

ஹிருதயம் மலையாள படம் எப்படி இருக்கிறது ?

வினித் சீனிவாசனின் ஹிருதயம் ஒரு அட்டகாசமான காலேஜ் சினிமா ! ஒரு இளைஞனின் வாழ்வில் காலேஜ் முதல் வருடம் முதல், அவன் கல்யாணம் ஆகி செட்டில் ஆவது வரையிலான 10 வருட கால பயணம் தான் இந்தப்படம். ஈசிஆரில் இருக்கும் ஒரு கல்லூரியில் நிறைய மலையாளிகள் படிக்கிறார்கள் அப்படி 2010 காலகட்டத்தில் படிக்க வரும் பிரனவ் உடைய வாழ்வு தான் கதை ஒரு காலேஜ் ஃலைப்பில் என்ன நடக்கும் ராக்கிங், படிப்பு, நண்பர்கள், சண்டை, குடி, ஊர் சுற்றல், நண்பன் மரணம், காதல், காதல் தோல்வி, என வாழ்வின் தருணங்கள் அத்தனையும் படத்தில் அப்படியே வந்து போகிறது. எந்த பரபரப்பும் இல்லாத திரைக்கதை ஆனால் நம் கல்லூரி வாழ்வை, நாம் எப்படி நம் வாழ்வை கடந்து வந்தோம் என்பதை, அப்படியே கண்முன் கடை விரிக்கிறது. எப்படி இதையெல்லாம் திரைக்கதையாய் யோசிக்கிறார்கள் என, மலையாள சினிமா மீண்டும் மீண்டும் ஆச்சர்யப்படுத்தி கொண்டே இருக்கிறது.…
Read More
துல்கர் சல்மானுக்கு கொரோனா !

துல்கர் சல்மானுக்கு கொரோனா !

கொரோனா இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், தற்போது பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது இதில் இப்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் மலையாள முன்னணி நடிகர் துல்கர் சல்மான். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவு: "சற்று முன்னர் தான் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் தனிமையில் உள்ளேன். காய்ச்சலுக்கான லேசான அறிகுறிகள் உள்ளது. மற்றபடி நான் நலமாக இருக்கிறேன். கடந்த சில நாட்களாக படப்பிடிப்பின் போது என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டு மேலும் அறிகுறிகள் தெரிந்தால் சோதனை செய்து கொள்ளுங்கள். இந்த பெருந்தொற்று காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்"
Read More
அமலா பால் தயாரித்து நடிக்கும் “கடாவர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

அமலா பால் தயாரித்து நடிக்கும் “கடாவர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மிகப்பிரபலமான பொன்மொழி ஒன்று உண்டு ‘ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத கதைகளை ஒரு புகைப்படம் சொல்லிவிடும்’ அது சினிமாவுக்கு அப்படியே பொருந்தும். அதிலும் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்பது ரசிகர்களை படத்தின்பால் ஈர்க்கும் மிக முக்கிய கருவி ஆகும். ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் முதல் அம்சமாக அமைவதால், ஒரு படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எனும் நிகழ்வு, மிக முக்கியமானதாகிவிடுகிறது. அந்த வகையில் ரசிகர்களின் பேரார்வத்தை தூண்டும் வகையில், தயாரிப்பாளர், நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள “கடாவர்” படத்தின் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளன்று  (26.10.2021) வெளியாகியுள்ளது. “கடாவர்” படம் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே, ரசிகர்களின் பேரார்வர்த்தை தூண்டி வருகிறது. இப்படம் இந்தியாவில் முதல் முறையாக, ஒரு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் (ஃபோரன்ஸிக் சர்ஜன்) விசாரணை அதிகாரியாக அழைத்து வரப்படும் கதையினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. வித்தியாசமான இவ்வேடத்திற் காக, நடிகை அமலா பால்…
Read More
`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபி க்கு கிடைத்த பெருமை

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபி க்கு கிடைத்த பெருமை

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னனி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜுனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சென்ற வருடம் இவர் நடன இயக்குனராக பணியாற்றிய  `சுஃபியும் சுஜாதாயும்' மலையாள திரைப்படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டை பெற்றது. நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்'…
Read More
துல்கர் சல்மான் வெளியிட்ட “ஹனு-மான்”  முதல் பார்வை

துல்கர் சல்மான் வெளியிட்ட “ஹனு-மான்” முதல் பார்வை

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் ஹனு-மான் முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார் இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள், அவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள். தனித்துவமான உள்ளடக்கத்தைக் கொண்ட வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவது இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் தனிச்சிறப்பாகும். அதன் தொடர்ச்சியாக,  அவரது அடுத்த திரைப்படமான ஹனு-மான் இந்தியத் திரையில் புதுமையான முயற்சியாக இருக்கும். முதல் அனைத்திந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மானுக்காக  சோம்பி ரெட்டி கூட்டணி மீண்டும் இணைகிறது. ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகும் ஹனு-மானுக்காக இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுடன் பிரசாந்த் வர்மா கைகோர்த்துள்ளார். ஏற்கனவே கூறியபடி, முதல் பார்வை போஸ்டரையும் அஞ்சனாத்ரி உலகத்திலிருந்து ஹனுமந்துவை அறிமுகப்படுத்தும் 65 வினாடிகள் காணொலியையும் படத்தின் குழு வெளியிட்டுள்ளது. நடிகர்…
Read More
ரஹ்மான் ஹீரோவாக நடிக்கும் மலையாள படம் “சமரா”!

ரஹ்மான் ஹீரோவாக நடிக்கும் மலையாள படம் “சமரா”!

1983 ஆம் ஆண்டில் மலையாள படம் மூலம் திரைக்கு அறிமுகமான நடிகர் ரஹ்மான் 37 வருடங்களை கடந்து, இன்றும் ஓயிவில்லாத வகையில் தமிழ், மமலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து பாத்திரங்களிலும் அற்புத நடிப்பை தரும் வல்லமை கொண்டவர் நடிகர் ரஹ்மான். தமிழில் ஹீரோவாக கலக்கியவர் தற்போது ஹீரோவாகவும், குணசித்திர பாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் “சமரா” படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று குலுமணாலியில் துவக்கப்பட்டது. மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படைப்பான “பொன்னியின் செல்வன்” படத்தில் ஐதராபாத்தில் நடித்துகொண்டிருக்கும் நடிகர் ரஹ்மான், இன்று குலுமணாலியில் “சமரா” படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். திரில்லர் பாணி க்ரைம் படமாக இப்படம் உருவாகிறது. 15 நாட்கள் நடித்து விட்டு “பொன்னியின் செல்வன்” - ல் கலந்து கொள்கிறார். இது தவிர தமிழில் இயக்குனர்…
Read More
“தி கிரேட் இந்தியன்  கிச்சன்” – விமர்சனம்!

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” – விமர்சனம்!

மலையாளத்தில் வெளிவந்த இப்படத்தை பற்றிய நண்பரின் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டியது. இந்திய பெரும்பான்மைப் பெண்களின் நிலையை எதார்த்தமாய் விளக்கியுள்ளது இப்படம். சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்காத, சாப்பிட்ட எச்சிலை மேசை மீது போடும் ஆண்கள் உள்ளவீட்டில் திருமணம் முடித்து செல்கிறாள் பெண்ணொருத்தி...! மூன்று நேரமும் சமைப்பதும், பாத்திரங்களை கழுவுவதுமாகவே செல்கிறது அவள் வாழ்க்கை. அவ்வாழ்க்கையை விடுத்து அவள் சுயத்திற்கானத் தேடலின் முடிவை நோக்கி நகர்கிறது கதை.. இப்படத்தில் வரும் அவளது வாழ்க்கை மட்டுமல்ல, நிறையப் பெண்களின், வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை கூட இப்படித்தான் நகர்கிறது. ஒருநாளில், சமைய லுக்கென ஒருபெண் குறைந்தபட்சம் 5 மணி நேரம் செலவு செய்தால் கூட தன் வாழ் நாளில் மூன்றில் ஒரு பகுதியை சமையலறையில் கழிக்கவேண்டியதாய் இருக்கிறது. பெண்களின் ரத்தத்தை வியர்வையாய் உறிஞ்சுகிறது "தி கிரேட் இந்தியன் கிச்சன்"... சமைப்பது பெண்களின் வேலையா? ஆண்களின் வேலையா? என்றால் அது இருவரின் வேலையும் தான்.…
Read More
பிருத்விராஜ் தயாரிச்சு, நடிக்கும் ’குருதி’ ஷூட்டிங் ஆரம்பமாகப் போகுது!

பிருத்விராஜ் தயாரிச்சு, நடிக்கும் ’குருதி’ ஷூட்டிங் ஆரம்பமாகப் போகுது!

மலையாளத் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பணிபுரிந்து வருபவர் பிரித்விராஜ். இவருடைய தயாரிப்பில் '9' மற்றும் 'டிரைவிங் லைசன்ஸ்' ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. தற்போது தனது மூன்றாவது தயாரிப்பான ’குருதி’ ஷூட் நாளை தொடங்குமென அறிவிச்சிருக்கார். இப்படத்தை மனு வாரியர் டைரக்ட் செய்யப் போறார். ஹிந்தியில் 'காஃபி ப்ளூம்' என்ற படத்தை இயக்கியவர், 'குருதி' படத்தின் மூலம் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் முரளி கோபி, ரோஷன் மேத்யூ, ஸ்ரீண்டா, நவாஸ் வள்ளிக்குன்னு உள்ளிட்ட பலர் பிரித்விராஜுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்காங்க. அனுஷ் பல்யால் எழுதியுள்ள இக்கதைக்கு அபிநந்தன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். நாளை -டிசம்பர் 9-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக ஜனவரி 2-ம் வாரத்துக்குள் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டிருக்காய்ங்க
Read More