ப்ரணவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹ்ருதயம்’ படத்துக்கு சென்னையில் பலத்த வரவேற்பு !

0
162

 

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலின் மகன்தான் ப்ரணவ். பாபநாசம், லைப் ஆப் ஜோசுட்டி ஆகிய படங்களில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு ‘ஆதி’ என்ற படத்தின் ஹீரோவாக அறிமுகமான இவர், தற்போது ஹ்ருதயம் என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார்

சென்னை கல்லூரியில் படிக்கும் மலையாள மாணவனின் வாழ்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு சென்னையில் பலமான வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தை வினித் ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார். ஒரு இளைஞனின் கல்லூரி முதல் திருமணம் வரையான நிகழ்வுகளை வைத்து இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 21-ஆம் தேதி ரிலீஸானது. சென்னையில் அனைத்து மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களிலும் இப்படத்துக்கு ஏக வரவேற்பு கிடைத்திருக்கிறது

தமிழ் படங்களுக்கு வரவேற்பு இல்லாத நிலையில் இப்படத்திற்கு பெரும்பாலும் ஹவுஸ் புல் ஆகியுள்ளது இந்த டிமாண்டைப் பார்த்து சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்காரங்களும் இப்படத்தை ரிலீஸ் செய்யக் கேட்டு வருகிறார்கள்