‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு  46 நாட்களில் முடிவடைந்தது!

‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு 46 நாட்களில் முடிவடைந்தது!

ஒரு படத்தின் ஷூட்டிங் என்றால் மினிமம் 90 நாள் என்று சொல்லி வந்த சூழலில் 46 நாட்களில் ஒட்டுமொத்த 'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. 2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 'த்ரிஷ்யம்' படத்துக்குப் பிறகு மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி 'ராம்' படத்தில் இணைந்து பணிபுரிந்தது. கொரோனா ஊரடங்கில் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடர முடியவில்லை. ஆகையால், மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி 'த்ரிஷ்யம் 2' படத்தின் பணிகளைக் கேரளாவில் தொடங்கினார்கள். செப்டம்பர் 21ஆம் தேதி படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 56 நாட்கள் திட்டமிட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், 46 நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு மோகன்லால், மீனா உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்பே காரணம்…
Read More
மோகன்லால் & மீனா நடிக்கும் த்ரிஷ்யம் 2-க்கு பூஜை போட்டாச்சு!

மோகன்லால் & மீனா நடிக்கும் த்ரிஷ்யம் 2-க்கு பூஜை போட்டாச்சு!

மோகன்லால் மீனா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதோடு தமிழில் கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் ரீமேக் ஆனது என்றும் இந்த ரீமேக் படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகள் அனைத்திலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை முதல் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது . மோகன்லால் & மீனா மீண்டும் இணைய உள்ள இந்த படத்தை அதே ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார் என்றும் படக்குழுவினர் அனைவரும் கடந்த 15 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அவர்களுக்கு நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டதால் இன்று படப்பிடிப்பு தொடங்கியதாக்கும்
Read More
லவ் ஆக்ஷன் ட்ராமா  படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்த பிரஜின்.

லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்த பிரஜின்.

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின். நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் ஓணம் பண்டிகை ரிலீசாக வெளியான படங்களிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி, இந்தப்படத்தில் நடித்த அனுபவங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பிரஜின். மலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 படங்களில் நடித்துள்ளேன்,, சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் டைரக்ஷனில் மலையாளத்தில் ‘டோர்னமெண்ட்’ என்கிற படத்தில் வில்லனாக நடித்தபோது அந்த படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், எனது நடிப்பை மனதார பாராட்டினார்.. அப்போது தான் அவரும் மலர்வாடி ஆர்ட்ஸ்…
Read More
ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் “காயன்குளம் கொச்சுன்னி” !

ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் “காயன்குளம் கொச்சுன்னி” !

ஆஸ்கார் விருதுகளுக்கான மரியாதை இந்தியர்கள் மத்தியில் சற்றே அதிகம் தான்.அதிலும் குறிப்பாக இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் விருது வென்றதற்கு பிறகு ஆஸ்கருக்கு மவுசு அதிகம்.. லகான், சலாம் பாம்பே, மதர் இந்தியா ஆகிய படங்கள் சிறந்த வெளி நாட்டு படங்கள் வரிசையில்  விருது பெற்றது இந்திய தேசத்துக்கு பெருமை தான். பிரபல நடிகர் நிவின் பாலி நடிப்பில் , மிகுந்த பொருட்செலவில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் திரு கோகுலம் கோபாலன் தயாரிப்பில்,பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரயூஸ்  இயக்கத்தில்  உருவான "காயன்குளம் கொச்சுன்னி" படம் மலையாள திரை உலகில் 100 கோடிக்கும் மேல் வாசூல் சாதனை புரிந்த படம். தற்போது இந்த படம் சர்வதேச ரசிகர்களையும்  சென்று அடைய உள்ளது. ஆம்.. 91 ஆவது அகாடமி விருது ஆகிய இந்த வருடத்தில் வெகு சில தென்னிந்திய படங்களே தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி…
Read More
‘இந்தியாவின் முதல் மூவி மராத்தான்’ – காயம்குளம் கொச்சூன்னி

‘இந்தியாவின் முதல் மூவி மராத்தான்’ – காயம்குளம் கொச்சூன்னி

கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து ஒரு வெளியாக இருக்கும் ஒரு எபிக் திரைப்படம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மொழி எல்லைகளை கடந்து படம், எப்போது வெளியாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது 'காயம்குளம் கொச்சூன்னி'. இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், நிவின் பாலி, மோகன்லால் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட மொத்த குழுவும் கொண்டாட்டத்தின் அளவை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம், இந்தியாவின் மிகப்பெரிய மல்ட்டிபிளெக்ஸ் ப்ராண்டான கார்னிவல் சினிமாஸை மல்ட்டிபிளெக்ஸ் பார்ட்னராக இணைத்துக் கொண்டுள்ளது. ஆம், காயம்குளம் கொச்சூன்னி 24 மணி நேரம் தொடர்ச்சியாக 19 இடங்களில் 52 திரைகளில் 200க்கும் மேற்பட்ட காட்சிகள் மூலம் 'இந்தியாவின் முதல் மூவி மராத்தான்' என்ற சிறப்பை பெறுகிறது. இது குறித்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன் கூறும்போது, "ஒரு தயாரிப்பாளராக என்னுடைய திரைப்படம் அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதை…
Read More
நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் நடிக்க உள்ள படம் “லவ் ஆக்சன் டிராமா

நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் நடிக்க உள்ள படம் “லவ் ஆக்சன் டிராமா

புதிய நியமம் படத்திற்கு பிறகு நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் நடிக்க உள்ள படம் "லவ் ஆக்சன் டிராமா". இந்த படத்தில் நாயகனாக நிவின் பாலி நடிக்க உள்ளார். காயம் குளம் கொச்சுண்ணி படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதத்திலே இந்த படத்தின் படப்பிடிப்பும் துவங்க இருந்தது. ஆனால் நிவின் பாலிக்கு காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகி தற்போது துவங்கியுள்ளது. மலையாள படமான இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பை சென்னையில் நிகழ்த்த உள்ளனர். மீதமுள்ள படப்பிடிப்பு  மட்டும் கேரளாவில் நடக்க உள்ளது. இந்த படத்தை முன்னணி இயக்குனரான வினீத் சீனிவாசனின் தம்பியான தயன் சீனிவாசன் என்பவர் இயக்க உள்ளார். மலையாள நடிகரான இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். வழக்கம் போல இந்த கூட்டணியில் காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது தவிர நடிகராக மட்டுமல்லாமல் இந்த…
Read More
சோலோ -படத்தைச் சாகடிக்காதீர்கள்! – துல்கர் சல்மான் வேண்டுகோள்!

சோலோ -படத்தைச் சாகடிக்காதீர்கள்! – துல்கர் சல்மான் வேண்டுகோள்!

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், தன்ஷிகா, நேகா சர்மா, ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிய படம் சோலோ. மாறுபட்ட விமர்சனங்களை பெற்று வரும் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படம் வெளியான பிறகு மாற்றப்பட்டது. இந்நிலையில், 'சோலோ'வை கொன்றுவிடாதீர்கள். கெஞ்சிக் கேட்கிறேன் என்று துல்கர் சல்மான் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது இதோ: கடுமையான வேலைகளுக்கு மத்தியில் நான் நடித்த சோலோ படத்தை பார்த்தேன். நான் நினைத்துப் பார்த்ததைவிட படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன். ஒரே நேரத்தில் இரு மொழியில் எடுக்கப்பட்டதால் இங்கும், அங்கும் வசன ரீதியாக சில பிரச்னைகள் இருப்பதை உணர்கிறேன். அதுமட்டுமின்றி 'சேகர்' பாகத்தை கொஞ்சம் நீட்டித்தி ருக்கலாம். எனினும் எனக்கு சோலோ ரொம்ப பிடித்திருக்கிறது. இதுவே உண்மையான வெர்சன். பிஜாய் நம்பியார் மனதில் நினைத்ததை…
Read More
சக்தி -படத்தில் வரலட்சுமியுடன் சரத் இளைய மகள் பூஜாவும் இணைந்தார்!

சக்தி -படத்தில் வரலட்சுமியுடன் சரத் இளைய மகள் பூஜாவும் இணைந்தார்!

தமிழ் நடிகர் சங்கத்தலைவராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்தவர் சரத்குமார். இவர் தற்போது ஹீரோவாக மட்டுமில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இணை கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் இவரது மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ், கன்னட, மலையாள சினிமாக்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ‘போடா போடி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படம் அதிரடி, மர்மம் கொண்ட ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி களில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராணா டகுபதி, துல்கர் சல்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டனர். சாம்.சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தை பேப்பர் லேட் பிக்சர்ஸ் சார்பில் ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ் தயாரிக்கிறார். வருகிற…
Read More
‘ப்ரேமம்’ கூட்டணியின் அடுத்த அசத்தல் !

‘ப்ரேமம்’ கூட்டணியின் அடுத்த அசத்தல் !

'ப்ரேமம்' படத்தில் நண்பர்களாகவே வாழ்ந்த நிவின் பாலியும் அல்தாப் சலீமும் இணைந்து நடித்துள்ள 'ஜண்டுகளூடே நட்டில் ஓரிடவேளா' இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. வரும் ஓணம் திருநாளானன்று வெளி ஆகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. கேரளாவை தாண்டியும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் நிவின் பாலியே இப்படத்தை தயாரித்துள்ளார்.பெரும் வெற்றி பெற்ற 'ஆக்ஷன் பிஜு' படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது தான். இப் படத்தின் டீசரும், 'எந்தாவூ' பாடலும் ஏற்கனவே வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக  புது முக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். முன்னாள் பிரபல நடிகை ஷாந்தி கிருஷ்ணன் இப்படத்தின் மூலம் நடிப்பில் மீண்டும் பலவருடங்கள் கழித்து களமிறங்கியுள்ளார் . இவரின் வருகையாலும் 'ப்ரேமம்' நடிகர்களின் கூட்டணியாலும்  இந்த ஜனரஞ்சகமான குடும்பப்படம் அனைவராலும் ரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1 அன்று  உலகெங்கும் வெளி வர உள்ள இப்படம்…
Read More
மம்முட்டியின்  ‘ சி.பி.ஐ. டைரிக் குறிப்பு- பாகம் 5 தயாராகப் போவது உறுதி!

மம்முட்டியின் ‘ சி.பி.ஐ. டைரிக் குறிப்பு- பாகம் 5 தயாராகப் போவது உறுதி!

இந்திய மொழிகளில் ஒரு படம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்கு முறை எடுக்கப்பட்டு அத்தனையும் ஹிட் அடித்தது என்றால் அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு படம் மட்டும்தான். இந்தப்படத்தில் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் வழக்கத்திற்கு மாறான மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி. சொல்லப்போனால் மம்முட்டியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு தமிழ்சினிமாவிலும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுத்தது இந்தப்படம்தான். இதன் அடுத்த தொடரான ஜகார்த்தா 1989ல் வெளியானது. அதன்பிறகு இதன் அடுத்தடுத்த பாகங்களாக 2004ல் சேதுராமையர் சி.பி.ஐயும் 2005ல் நேரறியான் சி.பி.ஐயும் வெளியாகின. ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொருவிதமான வழக்கை டீல் செய்வார் மம்முட்டி இதன் ஒவ்வொரு பாகங்களிலும் மம்முட்டியின் சேதுராமையர் காதாபாத்திரமும் மாறவில்லை. அவரது கெட்டப்பும் முதல் படத்தில் பார்த்த்துபோலவே தொடர்ந்தது இந்த நான்கு படங்களுக்குமே பல ஆச்சரியமான ஒற்றுமைகள் உண்டு. இந்த நான்கு படங்களின் கதையையும் எழுதியவர் பிரபல…
Read More