நாய் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ள மலையாள நட்சத்திரங்கள்! வளட்டி-ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் படத்தில் இப்படி ஒரு சிறப்பு!

நாய் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ள மலையாள நட்சத்திரங்கள்! வளட்டி-ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் படத்தில் இப்படி ஒரு சிறப்பு!

நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் இணைந்து ஒரு சாகச பயணத்தில் ஈடுபடும் கதையைச் சொல்லும், இதயம் வருடும் அருமையான படைப்பு வளட்டி -  '' ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் '' . இந்த அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படத்தில்,  பிரபல மலையாள நடிகர்களான ரோஷன் மேத்யூ, சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ், சன்னி வெய்ன், சைஜு குருப் மற்றும்  பல முன்னணி நட்சத்திரங்கள் நாய் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர். இந்திய சினிமாவில் முறையாக  வீட்டுச் செல்லப்பிராணிகள், தங்கள் உலகிற்குள் மனிதர்களை அழைத்துச் செல்லும் அற்புதமான நிகழ்வாகும். KRG Studios, நிறுவனர் கார்த்திக் கவுடா, இத்திரைப்படம் குறித்துக் கூறும்பொழுது.. புதுமையான கதைசொல்லல் மூலம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். இப்படத்திற்காகப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் கைகோர்த்துள்ளேன், அவர் தெலுங்கில் படத்தை வழங்கவுள்ளார், அனில் ததானி இந்தியில் படத்தை விநியோகம் செய்யவுள்ளார்.…
Read More
மலையாளத்தில் வெளியான படத்தை சில மாற்றங்களுடன் மீண்டும் தமிழில் வெளியிடுகின்றனர்!

மலையாளத்தில் வெளியான படத்தை சில மாற்றங்களுடன் மீண்டும் தமிழில் வெளியிடுகின்றனர்!

ஊர்வசி, கலையரசன் மற்றும் குரு சோமசுந்தரம் இணைந்து நடித்து மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தற்போது தமிழில் வெளியாகிறது அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்'. இதில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. வி. சுப்பிரமணியன் மற்றும் அசோக் பொன்னப்பன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரித்திருக்கிறார். ஜுன் 16 அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது ,   இந்த நிகழ்வில் நடிகர் குரு சோமசுந்தரம் பேசுகையில்,…
Read More
“கட்டிஸ் கேங்”படக்குழுவினர் உலக சுற்றுச்சூழல் தினத்தை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்

“கட்டிஸ் கேங்”படக்குழுவினர் உலக சுற்றுச்சூழல் தினத்தை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்

தென் தமிழக படங்களில் அதிகம் பேசப்படும் குணச்சித்திர நடிகர் சௌந்தரராஜா ,  சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் . இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் நடித்திருந்தார். தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார். ஓசியானிக் மூவிஸ் (Oceanic movies) சார்பில் சுபாஸ் ரகுராம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக உன்னி லால் மற்றும் கதாநாயகியாக விஷ்மயா நடிக்கின்றனர். ராஜ் கார்த்திக் எழுத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு நிகில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் சௌந்தரராஜா மரங்கள் நடுவது பற்றியும் அதனை பாதுகாப்பது பற்றியும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக…
Read More
மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது

மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது

  திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான "ஃபுட்டேஜ்' படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது. "அஞ்சம் பாதிரா", "கும்பளங்கி நைட்ஸ்," மற்றும் "மஹேஷின்டே பிரதிகாரம்" போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தியத் திரையுலகின் மிகப்பிரபலமான ஆளுமையாக விளங்கும் நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன் விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர். மூவி பக்கெட், காஸ்ட் அண்ட் கோ மற்றும் பேல் ப்ளூ டாட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், பினீஷ் சந்திரன் மற்றும் சைஜு…
Read More
மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் ‘ஓம் சாந்தி ஓஷானா’ கூட்டணி

மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் ‘ஓம் சாந்தி ஓஷானா’ கூட்டணி

  அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் '2018 'படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். 'ஓம் சாந்தி ஓஷானா' படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி கதையின் நாயகனாக இணைந்துள்ளார். இந்த திரைப்படம் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் கனவு படைப்பாக இருக்கும் என தெரிய வருகிறது. இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் அவருடைய முதல் படத்திற்கு பிறகு மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. மேலும் இருவரும் இணைந்த 'ஓம் சாந்தி ஓஷானா' படத்தின் வெற்றியை, இப்படம் மீண்டும் சாத்தியப்படுத்தும் என திரையுலகம் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய வேறு எந்த தகவலும் கூடுதலாக வெளியாகவில்லை. '2018' படத்தின் வெற்றிக்குப் பிறகு நிவின் பாலியுடன் இணைந்து ஒரு மசாலா படைப்பை வழங்கி வெற்றி பெறுவதற்காக இயக்குநர்…
Read More
படவெட்டு மலையாள திரைப்பட விமர்சனம் !!!

படவெட்டு மலையாள திரைப்பட விமர்சனம் !!!

  இயக்கம் - லிஜு கிருஷ்ணா நடிப்பு - நிவின் பாலி, அதிதி பாலன் இசை - கோவிந்த் வசந்தா கதை - காலம் காலமாக எளிய மக்களின் நிலம் பறிக்கப்படுவதும் அதற்கெதிராக அவர்கள் பொங்க ஆரம்பிப்பதுமே கதை. நிவின் பாலி ஒரு அத்தலெட் அவருக்கு ஒரு ஆக்ஸிடெண்டில் கால் அடிபட எதுவும் செய்ய முடியாமல் வீட்டில் முடங்குகிறார். மலை கிராமத்தில் அவருக்கு வீட்டை சுற்றிய இடம் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதற்கெதிராக அவர் என்ன செய்கிறார் கிரம மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுமையாக சொல்லியிருக்கிறார்கள். மலையாள படங்களுக்கு என இருக்கும் வழமையான திரைக்கதை மிக மெதுவாக நகரும் காட்சிகள், மனிதர்களின் இயல்பான வாழ்க்கை அதனூடே சொல்லப்படும் பிரச்சனை என கொஞ்சம் 80 களின் படங்களின் ஞாபகத்தை தூண்டுகிறது. படத்தில் அதிகம் தெரிந்த நடிகர்கள் நிவின் பாலி அதிதி பாலன். அதிதி பாலனுக்கு அதிகம் வேலையில்லை. வந்து போகிறார் அவ்வளவே. நிவின்பாலி…
Read More
‘பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்’ – அறிமுக நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை

‘பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்’ – அறிமுக நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை

  ''இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். 'பனாரஸ்' படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்'' என 'பனாரஸ்' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஜையீத் கான் தெரிவித்துள்ளார். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'பனாரஸ்'. பட வெளியீட்டிற்கு முன் ரசிகர்களின் முன்னிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கன்னட திரை உலகத்தின் 'சேலஞ்சிங் ஸ்டார்' தர்ஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன் 'பனாரஸ்' படத்தில் இடம்பெற்ற பாடல்களும், படத்தின் முன்னோட்டமும் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டன. நடிகர் தர்ஷன் பேசுகையில், '' பனாரஸ் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். படத்தின் நாயகனும், நண்பருமான ஜையீத்…
Read More
கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட போஸ்டர் !!

கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட போஸ்டர் !!

  ‘பாகுபலி’ படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 'ஆதி புருஷ்' பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னணி தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. கடின உழைப்பாளியும், விடா முயற்சியும் உள்ள நடிகரான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். ராமாயண காவியத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரபாஸை போற்றும் வகையில், அவர் ராமராக தோன்றும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபாஸ் - 'ஆதி புருஷ்' படக் குழு. நடிகர் பிரபாஸின் ராம அவதார உருவப்படம், தெய்வீகம் ததும்பும்…
Read More
ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர்

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர்

  கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் 'கப்ஜா' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும்…
Read More
நடிகர் நிவின் பாலி நடிப்பில் “மஹாவீர்யார்” படத்தின் டீசர் வெளியானது.

நடிகர் நிவின் பாலி நடிப்பில் “மஹாவீர்யார்” படத்தின் டீசர் வெளியானது.

நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை Pauly Jr Pictures மற்றும் Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா P அம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையை தழுவி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். 1983 மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அப்ரித் ஷைனியும், நிவின் பாலியும் இணைந்து இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். மஹாவீர்யார் திரைப்படம் டைம் டிராவல், ஃபேண்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை…
Read More