பாட்டுக் கோட்டை கட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!

பாட்டுக் கோட்டை கட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!

ஒருமுறை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் அவரது சகோதரர் கணபதி சுந்தரமும் பெண்பார்க்க, பக்கத்து கிராமமான ஆத்திக்கோட்டைக்கு சென்றிருக்கிறார்கள். கிராம வழக்கப்படி பெண் பார்த்து முடித்துவிட்டு தம்பியும் தமையனும் குதிரை வண்டியில் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள். வரும் வழியில், கவிஞரின் தமையனார், தம்பி பெண் நன்றாயி ருக்கிறாளா?  என்று வினைவியிருக்கிறார். அதற்குக் கவிஞர், அழகான பெண்ணண்ணே என்றிருக்கிறார். வீட்டுக்கு வந்ததும், தம்பி பெண் எனக்கல்ல உனக்குத் தான் என்றிருக்கிறார் கவிஞரின் தமையனார். உடனே கவிஞர் சந்தோஷ மிகுதியால் ஏட்டில் ஒரு நான்கு வரிகளை எழுதி வைத்துக் கொண்டார். அவர் அவ்வாறு எழுதி வைத்திருந்த வரிகளைத் தான் பிறகு அமுதவல்லி திரைப்படத்துக்குப் பாடலாக வழங்கினார். அந்தப் பாடல், “ஆடை கட்டி வந்த நிலலோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ!” முதலில்…
Read More
வி.சி. கணேசன் என்ற இளைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆனதெப்படி தெரியுமோ?

வி.சி. கணேசன் என்ற இளைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆனதெப்படி தெரியுமோ?

திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். மாநாட்டில் நடிப்பதற்காக “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார். இந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:-சிவாஜி பெரிய மாவீரன். சாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன். அந்நியர் ஆட்சியை எதிர்த்தவன். மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி! இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன் பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள். இப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாகஎம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில்டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது. இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு…
Read More
பெரியாரின் போர் வாளாகவும், நடிகவேளாகவும் விளங்கிய  எம்.ஆர்., ராதா!

பெரியாரின் போர் வாளாகவும், நடிகவேளாகவும் விளங்கிய எம்.ஆர்., ராதா!

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின் கூரிய போர் வாளாகவும், மாபெரும் நடிகனாகவும் மிளிர்ந்த நடிகவேள் என போற்றி புகழப்பட்ட எம்.ஆர்.ராதா குறித்து இன்றைய இளம் பெரியாரிய சிந்தனைவாதிகள் பலரும் மறந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. பெரியாரின் தலையாய தொண்டராக இருந்த எம்.ஆர்.ராதா, பெரியாரின் மறைவுக்கு பின் ஆறு ஆண்டுகள் கழித்து பெரியார் பிறந்த இதே செப்டம்பர் 17இல் உயிர் துறந்தார். கரகரப்பான குரலுக்கு சொந்தக் காரரான ராதா போன்ற ஒரு அறிவார்ந்த பகுத்தறிவுவாதியை தமிழ் சினிமா உலகம் இதுவரை கண்டது இல்லை. அவருக்குப் பிறகும் அந்த இடத்தை நிரப்ப இன்று வரை யாரும் பிறக்கவில்லை என்பதே உண்மை. ஆம்.. கட்டியம்கூற தேவையில்லாத காவியக்கலைஞன். நடிகன் என்பவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற இலக்கணத்தை உடைத்தெறிந்த மாமனிதன்.. மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்கிற எம்.ஆர்.ராதா. இன்று அந்த மாபெரும் கலைஞனின் நினைவுநாளையொட்டிய பதிவிது. எம்.ஆர்.ராதா பிறந்தது சென்னையில்தான்.. சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திய…
Read More
திறந்த புத்தகமாக திகழ்ந்த மர்லின் மன்றோ!

திறந்த புத்தகமாக திகழ்ந்த மர்லின் மன்றோ!

மர்லின் மன்றோ ஹாலிவுட் நடிகை. 1945 முதல் 1962 வரை திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். சிறந்த கவர்ச்சி மங்கையாக பல பத்திரிகைகள் தேர்வு செய்த இவரது அழகில் பல இளைஞர்கள் கிறங்கியிருந்தார்கள். 1953-ல் தொடங்கப்பட்ட ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தந்தை இல்லை. தாய்க்கோ மன நலப் பிரச்சினைகள். ஆகையால், அநாதை இல்லங்களில் வளர்ந்தார். 16 வயதி லேயே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்தார். நடிகையான பிறகு இரண்டு திருமணங்கள். இரண்டும் தோல்வி. மீண்டும் மீண்டும் விவாக ரத்துகள். குழந்தை இல்லை. தனிமை யான வாழ்க்கை.மர்லின் மன்றோ கல்லூரியில் படிக்காதவர். ஆனால், புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவர். வீட்டில் தனி லைப்ரரியே வைத்திருந்தவர். கவிதைகள் எழுதுவார். இசை பிடிக்கும். லிப்ஸ்டிக், மஸ்காரா மிகமிகப் பிடிக்கும். நகைகளில் ஆர்வமே இல்லை. நாய்கள் பிடிக்கும். சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர். அவருடைய கருத்துகள் எல்லாமே…
Read More
ஜனாதிபதி மடியில் அமர்ந்து  ‘டா’ போட்டு பேசிய சந்திரபாபு!

ஜனாதிபதி மடியில் அமர்ந்து ‘டா’ போட்டு பேசிய சந்திரபாபு!

தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜோசப் ராட்சிக் என்பவரின் மகன் தான் சந்திரபாபு. அவர் (இதே ஆகஸ்ட் 5ம் தேதி) பிறந்து சில நாட்களிலேயே விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். குழந்தை தப்புமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தாயும் தகப்பனும், "ஏசுவே இந்தக் குழந்தை நீர் எமக்குக் கொடுத்த பிச்சை, குழந்தையை உயிர் பிழைக்கச் செய்தருளும், குழந்தைக்குப் பிச்சை எனப் பெயரிடுகிறோம்' என்று முழந்தாளிட்டு இயேசுவிடம் மன்றாடினர். அந்த மன்றாட்டத்தினால் தப்பிப் பிழைத்த குழந்தைக்கு ஜோசப்பிச்சை எனப் பெயரிட்டனர். சந்திர பாபுவுக்கு முன்னால் ஜோசப் பிச்சையின் முதல் எழுத்துக்கள் ஒட்டிக் கொண்டதால் ஜே.பி. சந்திரபாபு ஆனார். திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் சினிமா கம்பனிகளில் ஏறி இறங்கிய இளைஞர்களில் ஜே.பி. சந்திரபாபுவும் ஒருவர். ஓர் இடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஸ்ரூடியோவை நோக்கிச் சென்று தமது சந்தர்ப்பத்தைத் தேடிக் கொள்ளாமல். விதி விலக்காக தற்கொலைக்கு முயன்றார் ஜே.பி. சந்திரபாபு. 1947 ஆம்…
Read More
தமிழ் & தெலுங்கு பட உலகில் தனி ஆட்சி நடத்திய இயக்குநர் பி.ஆர். பந்துலு!

தமிழ் & தெலுங்கு பட உலகில் தனி ஆட்சி நடத்திய இயக்குநர் பி.ஆர். பந்துலு!

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ், கன்னட, தெலுங்கு பட உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டைரக்டர் பி.ஆர்.பந்துலு. பிரம்மாண்டமான படங்கள் என்றால் அது பந்துலுவால் மட்டுமே முடியும் என்று அளவுக்கு, தான் தயாரித்து இயக்கிய படங்கள் அனைத்தையும் சிறந்த கருத்துச்செறிவும், கலையம்சமும் கொண்ட அரிய படைப்புகளாக அளித்தவர்.ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களாய் இன்றும் சொல்லப்படும் செசில் பி டெமிலியின் "டென் கமாண்ட்மென்ட்ஸ்' வில்லியம் வைலரின் "பென்ஹர்' போல் தமிழில் படங்கள் தயாரிக்கப்படவில்லையே என்ற குறையை ஓரளவுக்குத் தீர்த்து வைத்தவர் பி.ஆர். பந்துலு. பொதுவாக சினிமா இயக்குநர்கள் பலரும் தங்களுக்கு எந்தக் கதையில் சுலபமாக வெற்றி கொடுக்கிறதோ அது தற்காலிகமாக இருந்தாலும், மக்கள் சலிப்படையும் வகையில் அதிலேயே சுற்றிச் சுற்றி வருவார்கள்.ஒருவருக்குக் குடும்பக் கதைகளே கைகொடுக்கும், அடுத்தவர் கிராமியப் பாடல்களிலேயே திறமை காட்டுவார். மற்றவர் மசாலாப்படங்களிலேயே வெற்றிகளை குவிப்பார். இன்னொருவர் காதல் கதைகளில்தான் சோபிப்பார். இப்படி ஒருவழிப்பாதையிலேயே வெற்றி காண்பவர்கள் மற்ற புதிய…
Read More
“நோ ஒன் கேன் ரீபிளேஸ் டி.எஸ்.பாலையா!

“நோ ஒன் கேன் ரீபிளேஸ் டி.எஸ்.பாலையா!

கோலிவு-ட்டுன்னு இப்ப ஷார்ட்டா சொல்ற நம்ம தமிழ்த் திரையில் உலகத்தரமான நடிகர்களுக்கு இடமிருக்கிறதா? கண்டிப்பாக இருக்கிறது. அந்தப் பட்டியலில் இடம்பெறும் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர்தான் "நோ ஒன் கேன் ரீபிளேஸ் பாலையா" என்று 85 வயது வயது நிரம்பிய முதியவராக கடந்த 1990ஆம் சென்னை வந்தபோது தமிழ்சினிமாவின் முதுபெரும் இயக்குநர் எல்லிஸ் ஆர் டங்கன் சொன்னார். அவர் இயக்கிய வேறு எந்த நட்சத்திரத்துக்கும் இந்தப் பெருமையை அவர் கொடுக்கவில்லை. யார் இந்த பாலையா? என்ற கேள்விக்கு நம்ம கட்டிங் கண்ணையா வழங்கிய பேப்பர் கட்டிங்கில் இடம் பெற்ற கொஞ்சம் விரிவான ஆனால சுவையான தகவல் இது - இன்று வடிவேலு, கவுண்ட மணி, சந்தானம், சூரி நகைச்சுவை இணையாக டி.எஸ்.பாலையாவின் நகைச்சுவை காட்சிகள் தமிழ்தொலைகாட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருவதே அவர் காலம் கடந்த கலைஞர் என்பதற்கு சாட்சி. அவரது வாழ்க்கை இன்றைய தூத்துக்குடி மாவட்டம் சுண்டாங்கோட்டை என்ற…
Read More
‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ டி.ஆர்.சுந்தரம்!

‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ டி.ஆர்.சுந்தரம்!

டி.ஆர். சுந்தரம், தனது எந்த சினிமா தயாரிப்புக்கும் வெளியிலிருந்து பணம் கடனாக வாங்கு வதில்லை. தானே படத்திற்கான பட்ஜெட்டை தயாரித்து, குறித்த தேதியில் படப்பிடிப்பைத் தொடங்கி, குறித்த நேரத்தில் படத்தை வெளியிடுவார். தமிழ் நாட்டிலேயே வெளியிலிருந்து கடன் பெறாமல் சொந்தப் பணத்திலேயே படம் தயாரித்த ஒரே நிறுவனம், மாடர்ன் தியேட்டர்ஸ் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பட தயாரிப்பிற்காக அல்லாமல் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தை வளர்ப்பதற்காக, சுந்தரம் 100 ரூபாய் மதிப்பில் 5000 பங்கு பத்திரங்களை வெளியிட்டு, அந்த காலத்திலேயே ஐந்து லட்சத்தை திரட்டினார். இப்பங்குகள் மாடர்ன் தியேட்டர்ஸ் பெயரில் வெளியிடப்பட்டன. படத் தயாரிப்பிற்காக தனது ஸ்டுடீயோ வில் நடிகர், நடிகைகள், மற்ற கலைஞர்கள் தங்கி பணிபுரிய, தனி குடியிருப்பு கட்டிக்கொடுத்தார். படப்பிடிப்பின்போது கறாரான மனிதராக தோற்றம் காட்டும் டி.ஆர்.எஸ், மற்ற விதங்களில் கலைஞர் களோடு சுமூகமான தயாரிப்பாளராக விளங்கினார். கலைஞர்கள் அவரை முதலாளி என்று அழைத்தனர். இன்றளவும் சினிமா உலகில் முதலாளி…
Read More
பி யூ சின்னப்பா காலமான நாளின்று!

பி யூ சின்னப்பா காலமான நாளின்று!

"நடிக மன்னன்" என்று புகழ் பெற்றவரும், வீர தீரச் செயல்கள் செய்வதில் இணையற்ற வருமான பி.யு.சின்னப்பா, யாரும் எதிர்பாராத வகையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார். அப்போது, அவருக்கு வயது 35. சின்னப்பா மிகவும் சிக்கனமானவர். பீடிதான் குடிப்பார்; சாராயம்தான் அருந்துவார். சினிமா மூலம் கிடைத்த வருமானத்தை வீணாக்காமல், புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கிக் குவித்தார். எங்கு பார்த்தாலும், சின்னப்பாவின் வீடுகள். இதுபற்றி புதுக்கோட்டை மன்னருக்கு தகவல் போயிற்று. "இனிமேல் சின்னப்பா வீடு வாங்கக்கூடாது" என்று தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்னையில் வீடுகள் வாங்கினார். 1951ல் "வனசுந்தரி" என்ற படத்தில் சின்னப்பா நடித்தார். ஜோடி டி.ஆர்.ராஜகுமாரி. படம் சுமார் ரகம். இந்த சமயத்தில், தமிழ்ப்பட உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பின்னணி பாடும் முறை வந்துவிட்டது. எனவே, கதாநாயகனாக நடிப்பவர்கள் சொந்தமாகப் பாடும் திறமை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 1946ல் வெளிவந்த "ஸ்ரீவள்ளி" மூலம்,…
Read More
தமிழ் சினிமாவின் தந்தை – சாமிக்கண்ணு வின்சென்ட்!

தமிழ் சினிமாவின் தந்தை – சாமிக்கண்ணு வின்சென்ட்!

இன்று சினிமாவில் கமல், ரஜினி படம் வெளிவருகிறது என்றால் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். காரணம், போட்ட பணத்தை ஒரு வாரத்தில் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை. ஆனால், சினிமா என்பது வியாபாரமாக இல்லாத காலத்தில், வியாபாரம் தெரியாதவர்கள் மத்தியில் மக்களிடம் எப்படி சினிமாவை கொண்டு சென்று இருப்பார்கள் என்பதை ஆராய வேண்டிய ஒன்று. 3டி, அரோ 3டி, டிஜிட்டல் என்று பல வகை திரையரங்குகள் இருக்கிறது. ஆனால், ஆரம்பக்காலத்தில் படங்கள் ஓடியது டென்ட் திரையரங்குகளில் தான். அந்த டென்ட் கொட்டையில் படங்களை எடுத்து மக்களுக்கு கொண்டு சேர்த்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள். ஒவ்வொரு மொழியின் திரைப்படங்களுக்கு ஒரு தந்தையிருக்கிறார். ஆனால், தென்னிந்தியாவில் சினிமாவை திரையரங்கு மூலம் கொண்டு சேர்த்த ஒரு தந்தை இருக்கிறார். அவர் தான் ”சாமிகண்ணு வின்செண்ட்”.  அன்றைய காலத்தில் சினிமாவின் முக்கிய இடமாக கோவை நகரம் இருந்தது. 1905ல் ரயில்வே…
Read More