07
Jul
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் படமான ‘த லயன் கிங்’ வரும் ஜூலை 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்னியின் த லயன் கிங் திரைப்படம் கார்ட்டூன் அனிமேஷனில் வெளியாகி உலகமெங்கும் பிரபலமானது. தான் வாழும் பரந்த நிலப்பரப்பை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் .ராஜா சிங்கம் முபாசா. அவரை வீழ்த்தி தான் ராஜாவாக திட்டம் தீட்டி வருகிறார் அவரது தம்பி சிங்கம் ஸ்கார். இந்நிலையில் முபாசாவுக்கு அழகிய ஆண்குழந்தையாக குட்டிசிங்கம் சிம்பா பிறக்கிறான். அவனை அடுத்த ராஜாவாக அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்நிலையில் முபாசாவை கொன்று குட்டி சிம்பாவை துரத்திவிட்டு தான் ராஜாவாகி கொடூர ஆட்சி செய்கிறான் ஸ்கார். இதையடுத்து சிம்பா பெரியவனாக வளர்ந்து தனது தந்தையின் காட்டை ஸ்காரிடமிருந்து, எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை. ஒரு சிறந்த தந்தை மகன் உறவுக்கான கதாபாத்திரங்களாக முபாசா-சிம்பா கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.…
