உலக சினிமா வரலாற்றில் நீளமான படம் – ‘ஆம்பியன்ஸ்’!

உலக சினிமா வரலாற்றில் நீளமான படம் – ‘ஆம்பியன்ஸ்’!

ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்ட்ரூ வெப்பர்க் என்பவர் சோதனை முயற்சியாக 720 மணி நேரம் ஓடக்கூடிய ஆம்பியன்ஸ் என்னும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் 30 நாட்கள் ஓடக்கூடிய அளவிற்கு எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து ஆண்ட்ரூ வெப்பர்க் கூறும்போது இந்தப்படம் எனது கடைசி படம் எனவும் இனி படங்களை இயக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். 72 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தின் டீசர் 2014ம் ஆண்டு ரிலீசானது. அடுத்து 72 மணி நேரம் ஓடக்கூடிய ட்ரெய்லர் 2018ம் ஆண்டு ரிலீசாக இருக்கிறது. ஆக, நீண்ட நேரம் ஓடக்கூடிய டீசர், ட்ரெய்லர் என்கிற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. ஆண்ட்ரூ வெப்பரின் வாழ்நாள் கனவான ஆம்பியன்ஸ் படம் 2020ஆம் ஆண்டு ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே இதே போன்று 240 மணிநேரம், அதாவது பத்து நாட்கள் ஓடக்கூடிய மாடர்ன் டைம்ஸ் ஃபாரெவர் என்ற படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தின் சாதனையை ஆம்பியன்ஸ் படம்…
Read More
தனுஷ் நடிச்சு வந்த ஹாலிவுட் பட ஷூட்டிங் ஓவர்!

தனுஷ் நடிச்சு வந்த ஹாலிவுட் பட ஷூட்டிங் ஓவர்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பெல்ஜியம், பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தனது முதல் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்றுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். "படப்பிடிப்பு முடிந்தது. ஃபகீரின் பயணம் முடிகிறது. அற்புதமாகத்தான் இருந்தது. என் மொத்த குழுவுக்கும் அன்பும், நன்றிகளும். கண்டிப்பாக உங்களை நினைவில் வைத்திருப்பேன். அடுத்த நிறுத்தம், வீடு !" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தனுஷ். பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன்…
Read More
’ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்’ திரைப்படம் சர்வதேச அளவில் 257 மில்லியன் டாலர்கள்  வசூல்!

’ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்’ திரைப்படம் சர்வதேச அளவில் 257 மில்லியன் டாலர்கள் வசூல்!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான புதிய ஸ்பைடர்மேன் திரைப்படம் உலகளவில் 257 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இப்படம் முதல் மூன்று நாட்களில் 117 மில்லியன் டாலர்களை வசூலித்தது.ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் நடித்து மறு துவக்கம் (reboot) செய்யப் பட்ட ஸ்பைடர்மேன் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்காததால் அந்த கதாபாத்திரத்துக்கு புதிய பரிணாமம் கிடைக்க ஏற்கனவே பிரபலமான மார்வல் சினிமாடிக் உலகில் மற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களுடன் ஸ்பைடர்மேனும் இணைக்கப்பட்டது. கடந்த வருடம் 'கேப்டன் அமெரிக்கா சிவில் வார்' படத்தில், ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் மார்வல் சினிமாட்டிக் உலகில் ஒரு அங்கமாக அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அதன் 2வது மறுதுவக்கத்தின் முதல் படமாக 'ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்' திட்டமிடப் பட்டது. முந்தையப் படங்களைப் போல அல்லாமல், இந்தத் திரைப்படத்தில் ஸ்பைடர்மேனாக மாறும் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரம் 15 வயது பள்ளி சிறுவனாக சித்தரிக்கப்பட்டிருந்தது. ஸ்பைடர்மே னாக இளம் நடிகர் டாம் ஹாலண்ட் நடித்திருந்தார் மேலும்…
Read More
“லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா” இந்தியாவில்  ரிலீஸாகப் போகுது!

“லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா” இந்தியாவில் ரிலீஸாகப் போகுது!

தி டர்ட்டி பிக்சர், உத்தா பஞ்சாப் ஆகிய சர்ச்சைக்குரிய படங்களை தயாரித்த பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த சர்ச்சைக்குரிய படம் "லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா". சுதந்திரத்தை தேடி அலையும் நான்கு பெண்களின் சமூக வாழ்க்கை மற்றும் பிரைவேட் வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசும் இப்படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை குழுவினர் தடை விதித்தனர். கெங்கனா சென் ஷர்மா, ரத்னா பதாக் ஷா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ள அந்த இந்திப்படத்தை இயக்கியவர் அலன்க்ரிதா ஸ்ரீவட்சவா எனும் பெண் இயக்குனர். 18ல் இருந்து 55 வயது உடைய நான்கு பெண்கள்தான் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். புர்கா அணிந்த கல்லூரிப் பெண், ஒரு இளம் அழகுக் கலை நிபுணர், மூன்று குழந்தைகளின் தாய், வயதான விதவை என அந்த நான்கு பெண்களின் உணர்வுகளைத்தான் இந்தப் படம் சொல்கிறது. அவர்கள் ரகசியமாக லிப்ஸ்டிக் பூசிக் கொள்கிறார்கள். காண்டம் பற்றி உரையாடுகிறார்கள். சிகரெட் குடித்துப்…
Read More
“ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷன்” தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான்

“ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷன்” தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்" என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள "ஒன் ஹார்ட்" இசைத்திரைப்படம் பிப்ரவரி 5ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. "ஒன் ஹார்ட்" இசை படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், மிகவும் ரசித்து பார்த்ததாகவும் கூறினர். "ஒன் ஹார்ட்"…
Read More
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஒன் ஹார்ட்” – இசைத் திரைப்படம்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஒன் ஹார்ட்” – இசைத் திரைப்படம்!

இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹமான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைவாயிலாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்" என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள "ஒன் ஹார்ட்" இசைத்திரைப்படம் பிப்ரவரி 5ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. "ஒன் ஹார்ட்" என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத்திரைப்படத்தில் அமேரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹமான் தலைமையிலான இசை சுற்றுபயணம், இசை நிகழ்ச்சி,…
Read More