சிங்கிளா இருப்பது ரொம்ப கஷ்டம்!- ஏஞ்சலினா பீலிங்!

ஏஞ்சலினா தன் கணவரும் நடிகருமான பிராட் பிட்டுடனான உறவை முறித்துக்கொள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக விண்ணப்பித்திருந்தார். விவாகரத்திற்கு முன்பு ஒரு வருடம் கணவன் மனைவி பிரிந்து வாழவேண்டுமென்பதால், நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை ஒரு வருட காலமாக தன் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவருகிறார்.

இந்நிலையில், பிராட் பிட் புதிய படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார். இதனிடையே பிராட் பிட்டுடனான பிரிவுக்கு பிறகு சிங்கிளாக வாழ்வதால் வாழ்க்கை கடினமாக இருப்பதாக ஜோலி கூறியிருக்கிறார்.

இது குறித்து அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சிங்களாக இருப்பது மகிழ்ச்சியாக இல்லை. இது போன்று என் வாழ்க்கை அமைய விரும்பவில்லை. மிகவும் கடினமாக நாட்கள் செல்கின்றன. 12 ஆண்டுகால உறவை பிரிந்தது உணர்வுப்பூர்வமாக உள்ளது.கடினமாக ஒரு ஆண்டு காலத்தை கடந்துள்ளேன்.தற்போது உடல் ரீதியாக எனக்கு சில பிரச்னைகள் உள்ளன. எனவே உடல் நிலையையும் கண்காணிக்க வேண்டும்” என்று ஏஞ்சலினா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ஏஞ்சலினா, தற்போது 1975 இல் கம்போடியாவில் நடந்த கிளர்ச்சிப்படை தாக்குதலை மையமாக வைத்து ‘They Killed My Father’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை பிவர்ல்லி மலைத் தொடரில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க்து.