மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த டோவினோ தாமஸின் “ARM” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த டோவினோ தாமஸின் “ARM” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

"மின்னல் முரளி" மற்றும் "2018" ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமா தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடமும் கவனத்தை ஈர்த்தார் டோவினோ தாமஸ். அவரின் அடுத்த படமான "ARM" ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது. மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் தயாராகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கி உள்ளார். "ARM" படம் முழுக்க முழுக்க 3Dயில் தயாராகி, மலையாள சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படமாக மாறி உள்ளது. இந்த படம் பற்றி அறிவிப்பு வெளியானதிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் இருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக வெளியிடப்பட்ட டிரெய்லர் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த ட்ரெய்லரில் பூமியை ஒரு எரியும் சிறுகோள்…
Read More
தமிழ் சினிமா இயக்குநர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்கள்!- ‘கொட்டுக்காளி’ தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமா இயக்குநர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்கள்!- ‘கொட்டுக்காளி’ தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “’கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்தேன். இயக்குநர் வினோத்ராஜ் என்னை செருப்பால் அடித்தது போல இந்தப் படம் இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகன் நான். அவரது காலில் விழுந்து முத்தமிட தயாராக இருக்கிறேன். அதற்கடுத்து வினோத்தின் காலில் விழத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தை புரோமோட் செய்ய நிர்வாணமாக நடனம் ஆட வேண்டும் என்றாலும் தயார். சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. ’கொட்டுக்காளி’ படம் அவனுக்கு மற்றுமொரு குழந்தை. விஜய்சேதுபதியை வைத்து ‘டிரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். விஜய்சேதுபதியை அடுத்து சூரியின் நடிப்பைப் பார்த்து மிரண்டு விட்டேன். காமெடியனாக இருந்து அசுர நாயகனாக வளர்ந்து…
Read More
கொட்டுக்காளி டிரைலர்!

கொட்டுக்காளி டிரைலர்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், 'கூழாங்கல்' புகழ் வினோத் ராஜ் இயக்கத்தில்  நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் 'கொட்டுக்காளி'. ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. https://www.youtube.com/watch?v=FwIScvUQwIk
Read More
என் ஊர் மெட்ராஸ் என்பதால் உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன்- கலையரசன்!

என் ஊர் மெட்ராஸ் என்பதால் உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன்- கலையரசன்!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகர் கலையரசன் பேசியதாவது... மெட்ராஸ்காரன், என் ஊர் மெட்ராஸ் ஆனால் இந்தப்படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன்.  ஷேன் நிகாம் மிக அருமையான நடிகன், அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார், மேக்கிங் பிடித்திருந்தது, படத்தின் கதையும் பிடித்தது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் மிக ஆதரவாக இருந்தார். கதையை நம்பி…
Read More
’மின்மினி’ பட டிரெய்லர் & ஆடியோ வெளியீட்டு விழா!

’மின்மினி’ பட டிரெய்லர் & ஆடியோ வெளியீட்டு விழா!

ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்கு தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்" என்றார். ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, "ஆட்டோ சங்கர் எடுத்தபோது என்னைப் பலரும் திட்டினார்கள். ஆனால், அதற்கு பதிலடியாக நிச்சயம் நல்ல படம் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியான ஒரு படமாக…
Read More
என்னுடைய கரியரில் நான் செய்யாத கதாபாத்திரம் இது! ‘கொட்டேஷன் கேங்’ விழாவில் பிரியாமணி!

என்னுடைய கரியரில் நான் செய்யாத கதாபாத்திரம் இது! ‘கொட்டேஷன் கேங்’ விழாவில் பிரியாமணி!

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் , நடிகை ப்ரியாமணி பேசியதாவது, "இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. இவர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் டேக் ஆஃப் ஆகவில்லை. இரண்டாவது சொன்ன இந்த கதை பிடித்துவிட்டது. என்னுடைய கரியரில் காண்ட்ராக்ட் கில்லர் ரோல் இதுவரை செய்ததில்லை. இயக்குநர் விவேக்கின் சகுந்தலா கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றினார்கள். எனக்கும் அக்‌ஷயாவுக்கும்தான் நிறைய காம்பினேஷன் காட்சிகள். அக்‌ஷயா சிறப்பாக செய்திருக்கிறார். சன்னி பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பத்மா கதாபாத்திரம் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். ஜாக்கி ஷெராப் சாரும் எங்களுக்கு சப்போர்ட்டாக…
Read More
இந்தப் படத்துக்காக 70 நாட்கள் கமல் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார்! இந்தியன் 2 விழாவில் ஷங்கர்!

இந்தப் படத்துக்காக 70 நாட்கள் கமல் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார்! இந்தியன் 2 விழாவில் ஷங்கர்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.  தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  "இந்தியன் 2" டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் M.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், நடிகர் சித்தார்த் பேசியதாவது… '21 வருடங்களுக்கு முன்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் சார் எனக்குத் தந்தார். இப்போது 21 வருடங்களுக்குப் பிறகு,…
Read More
”கல்கி 2898 கிபி” யுடன் இணைந்துள்ள “இந்தியன் 2” ! -கமலின் இரண்டு முகங்கள் ஒரே திரையில்!

”கல்கி 2898 கிபி” யுடன் இணைந்துள்ள “இந்தியன் 2” ! -கமலின் இரண்டு முகங்கள் ஒரே திரையில்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இந்தியா முழுக்க, இதுவரை இல்லாத வகையில், படத்தின் விளம்பர புரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ள "கல்கி 2898 கிபி" படத்துடன் "இந்தியன் 2" படத்தின் டிரெய்லரை வெளியிட்டு அசத்தியுள்ளது. இன்று அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் திரையரங்குகளில், வெளியாகியுள்ள கல்கி 2898 கிபி படத்துடன், “இந்தியன் 2” படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை…
Read More
பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல் கம்யூனிகேஷன்…
Read More
“தலைமை செயலகம்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்!

“தலைமை செயலகம்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். 8 கொண்ட பொலிடிகல் சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது. https://www.youtube.com/watch?v=02Hj6VNYJ88&feature=youtu.be தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால்…
Read More