வசூலில் பட்டையை கிளப்பும் மலையாளப் படங்கள் !!

வசூலில் பட்டையை கிளப்பும் மலையாளப் படங்கள் !!

  மொழி எதுவாக இருந்தாலும் சிறந்த படங்கள் வந்தால் நம்ம தமிழ் ரசிகர்கள் கொண்டாட தவறியதே இல்லை. அதிலும் மலையாள திரைப்படங்கள் நன்றாக இருந்துவிட்டால் போதும்.. தலையிலே தூக்கி வைத்து கொண்டாடி விடுவார்கள். இந்த வரிசையில் லேட்டஸ்டா இணைஞ்சுருக்குது மோலிவுட் படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை என்பது தான். குறிப்பாக, குணா குகை பகுதியில் நடந்த சம்பவமிது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’படத்தின் ட்ரெய்லரிலேயே கண்மணி அன்போடு காதலன் பாடலின் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற வரிகளை படத்தில் வரும் இளைஞர்கள் பாடுவதுபோல் வரும். அதோடு, கமலின் குரலிலும் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும். அப்போது, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே எக்கச்செக்கமாக எகிறியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார்கள். டைரக்டர் சிதம்பரம்…
Read More
மலையாள சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் !!

மலையாள சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் !!

மலையாள சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ், வெற்றி இயக்குநர் அகமது கபீரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார். அகமது கபீரின் 'ஜூன்', 'மதுரம்' மற்றும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்' என, அனைத்து படைப்புகளும் பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஹிருதயம்', குஷி, & ஹாய் நானா ஆகிய படங்களில் மாயாஜால இசைக்கு சொந்தக்காரரான ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அற்புதமான இந்த கூட்டணியின் அடுத்தகட்ட தகவல்கள் பற்றி அறியக் காத்திருங்கள்.
Read More
மம்முட்டியின் ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

மம்முட்டியின் ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

  நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பான ‘பிரமயுகம்’ அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரமயுகம்’ ஆகஸ்ட் 17, 2023 முதல் ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட படக்குழு இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக உள்ளது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மிக விரைவில் படத்தின் மார்க்கெட்டிங் பணிகளைத் தீவிரமாக தொடங்கவுள்ளது. 'பிரமயுகம்' மிகவும் எதிர்பார்க்கப்படும் பன்மொழி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மம்முட்டியின் தோற்றம் அடங்கிய போஸ்டர் செப்டம்பரில் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக, மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான 'கண்ணூர் ஸ்காவ்ட்' படம் வெற்றிப் பெற்றதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க…
Read More
பிருத்விராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன் !

பிருத்விராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன் !

  லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் இயக்குநரான பிருத்விராஜ் சுகுமாறனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் பிரம்மாண்டமான பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மலையாள திரையுலகில் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து, நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதால் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த அவரை வெளிநாட்டில் இருக்கும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை…
Read More
மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் படத்தின் வெளியீட்டு தேதி எப்போ?

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் படத்தின் வெளியீட்டு தேதி எப்போ?

விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப் பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நவராத்திரி திருவிழாவின் போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள் ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமாகும். இயக்குநர் நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை நடைபெறுகிறது. " alt="" aria-hidden="true" /> மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்திலிருந்து அவரது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்ட போது… இப்படத்தை…
Read More
மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதியை அரிவித்த படக்குழு!

மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதியை அரிவித்த படக்குழு!

  மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. இந்த திரைப்படத்தை பற்றிய புதிய தகவல்களுக்காக நாடு முழுவதும் உள்ள திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பிறந்த நாளன்று 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் வெளியீட்டு தேதியை நட்சத்திர நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரத்யேக காணொளி, மோகன்லாலின் பிறந்தநாளன்று வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாண்டிச்சேரி, சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 130 நாட்களில் நடைப்பெற்று நிறைவடைந்தது. இப்படத்தின் திரைக்கதையை பி. எஸ். ரஃபீக் எழுதியுள்ளார்.…
Read More
மம்முட்டியுடன் இணைந்து நடிப்பது வாழ்நாள் கனவு! நடிகை ஐஸ்வர்யா மேனன் பேட்டி

மம்முட்டியுடன் இணைந்து நடிப்பது வாழ்நாள் கனவு! நடிகை ஐஸ்வர்யா மேனன் பேட்டி

  ”மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்ற வாழ்நாள் கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று உற்சாகத்தில் துள்ளுகிறார் ஐஸ்வர்யா மேனன். கடந்த மாதம் ரிலீஸான தெலுங்கு மற்றும் பான் இண்டியா படமான ‘ஸ்பை’ சூப்பர் ஹிட் அடித்த வகையில் ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கும் ஐஸ்வர்யா மேனன், கார்த்திகேயா, ‘ஸ்பை’ நாயகன் நிகில் சித்தார்த்தா உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து பிசியாக வலம் வருகிறார். இந்நிலையில் மாபெரும் ஜாக்பாட்டாக மம்முட்டி படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவரது காம்பினேஷனில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இதுகுறித்துப் பேசிய அவர், “நான் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவர் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று கனவு கண்டு காத்திருந்திருக்கிறேன். தற்போது அந்தக் கனவு ‘பஸூகா’ படத்தின் மூலம் நனவாகி கடந்த…
Read More
ஜெயிலர் படத்துக்கு மளையாளத்தில் இப்படி ஒரு சிக்கலா! படத்தின் பெயரே மாற்றப்படுமோ!

ஜெயிலர் படத்துக்கு மளையாளத்தில் இப்படி ஒரு சிக்கலா! படத்தின் பெயரே மாற்றப்படுமோ!

மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாக உள்ளது. அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்துள்ளார். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும் சமயத்தில் கேரளாவில் ரிலீஸாகவிருக்கிறது. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த சக்கீர் மடத்தில், ஜெயிலர் என்ற பெயரில் இரண்டு படங்களும் ரிலீஸானால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே தமிழ் ஜெயிலரின் பெயரை படக்குழு மாற்ற வேண்டும் என இயக்குநர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் பெயரை மாற்றுவதற்கு அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்துக்கு இந்தப் பெயர்தான் கதைக்கு பொருத்தமாக இருப்பதாகவும். எனவே இந்தப் பெயரை மாற்றினால் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். எனவே நிச்சயம் பெயரை படக்குழு மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் இதே பெயரில்தான் கேரளாவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுது. மலையாள…
Read More
மறைந்த மலையாள இயக்குனர் சாச்சியின் கனவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிருத்விராஜுக்கு விபத்து!

மறைந்த மலையாள இயக்குனர் சாச்சியின் கனவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிருத்விராஜுக்கு விபத்து!

மலையால திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிருத்விராஜ் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது விளையாத் புத்தா என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது மறைந்த மலையாள இயக்குனர் சாச்சியின் கனவு திரைப்படமாகும். ஏற்கனவே சாச்சி இயக்கத்தில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடித்திருந்த பிருத்விராஜ், தற்போது அவரின் கனவு திரைப்படமான விளையாத் புத்தா திரைப்படத்தில் நடித்து வருகிறார். விளையாத் புத்தாப் படத்தை ஜெயன் நம்பியார் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மரையூரில் நடைபெற்று வருது. 50 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கில் நடிகர் பிருத்விராஜும் இருந்தார். இந்த நிலையில், 24/06/2023 அன்று வழக்கம்போல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் நடிகர் பிருத்விராஜ்  சண்டையிடுவது போன்ற ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இந்த காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இந்த காட்சியில் டூப் எதுவும் போடாமல் நடிகர் பிருத்விராஜ் ரிஸ்க் எடுத்து…
Read More
நாய் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ள மலையாள நட்சத்திரங்கள்! வளட்டி-ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் படத்தில் இப்படி ஒரு சிறப்பு!

நாய் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ள மலையாள நட்சத்திரங்கள்! வளட்டி-ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் படத்தில் இப்படி ஒரு சிறப்பு!

நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் இணைந்து ஒரு சாகச பயணத்தில் ஈடுபடும் கதையைச் சொல்லும், இதயம் வருடும் அருமையான படைப்பு வளட்டி -  '' ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் '' . இந்த அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படத்தில்,  பிரபல மலையாள நடிகர்களான ரோஷன் மேத்யூ, சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ், சன்னி வெய்ன், சைஜு குருப் மற்றும்  பல முன்னணி நட்சத்திரங்கள் நாய் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர். இந்திய சினிமாவில் முறையாக  வீட்டுச் செல்லப்பிராணிகள், தங்கள் உலகிற்குள் மனிதர்களை அழைத்துச் செல்லும் அற்புதமான நிகழ்வாகும். KRG Studios, நிறுவனர் கார்த்திக் கவுடா, இத்திரைப்படம் குறித்துக் கூறும்பொழுது.. புதுமையான கதைசொல்லல் மூலம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். இப்படத்திற்காகப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் கைகோர்த்துள்ளேன், அவர் தெலுங்கில் படத்தை வழங்கவுள்ளார், அனில் ததானி இந்தியில் படத்தை விநியோகம் செய்யவுள்ளார்.…
Read More