வசூலில் பட்டையை கிளப்பும் மலையாளப் படங்கள் !!

 

மொழி எதுவாக இருந்தாலும் சிறந்த படங்கள் வந்தால் நம்ம தமிழ் ரசிகர்கள் கொண்டாட தவறியதே இல்லை. அதிலும் மலையாள திரைப்படங்கள் நன்றாக இருந்துவிட்டால் போதும்.. தலையிலே தூக்கி வைத்து கொண்டாடி விடுவார்கள்.

இந்த வரிசையில் லேட்டஸ்டா இணைஞ்சுருக்குது மோலிவுட் படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை என்பது தான். குறிப்பாக, குணா குகை பகுதியில் நடந்த சம்பவமிது.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’படத்தின் ட்ரெய்லரிலேயே கண்மணி அன்போடு காதலன் பாடலின் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற வரிகளை படத்தில் வரும் இளைஞர்கள் பாடுவதுபோல் வரும். அதோடு, கமலின் குரலிலும் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும். அப்போது, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே எக்கச்செக்கமாக எகிறியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார்கள்.

டைரக்டர் சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட மலையாளத்தில் சில முன்னணி நடிகர்கள் நடித்திருகிறார்கள். நம் தமிழ் சூழலில் படத்தின் பெரும்பகுதி நடைபெறுவதால் ஜார்ஜ் மரியன், நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு படங்களில் நடித்த ராம சந்திரன் துரைராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

பிப்ரவரி 22 ஆம் தேதி ரிலீசான மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு முதல் இரண்டு நாட்களுக்கு சுமாரான ரெஸ்பான்ஸ்தான் கிடைத்தது. ஆனால், படம் குறித்து பாசிட்டிவ் ஆன மவுத் டாக்ஸ் வைரல் ஆகவே, வார இறுதி நாட்களான 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் திரையரங்கு நிரம்பி வழிய ஆரம்பித்தது.

4 நாட்களில் இந்தப் படம் 36.11 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே தன்னுடைய வலைதளத்தில் ல், “மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்தேன்.. செம்ம படம்! தவறவிடாதீர்கள்! படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்” அப்படீன்னு குறிப்பிட்டு வாழ்த்து சொல்லி இருக்கிறார். மேலும் கடந்த வாரம் வெளியான மம்முட்டியின் பிரமயுகம் மற்றும் புதுமுகங்க நடித்த பிரேமலு போன்ற படங்களும் தமிழகத்தில் வசூலில் அசத்தி வருவது குறிப்பிடதக்கது.