டாடா பட இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் ஜெயம் ரவி!

டாடா பட இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் ஜெயம் ரவி!

'இருட்டு', 'தாராள பிரபு', 'எம்ஜிஆர் மகன்', 'இடியட்', 'சாணி காயிதம்', 'அகிலன்' உள்ளிட்ட வெற்றி படங்களையும் 'மத்தகம்' இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்' திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரதர்' திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது. ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள 'ஜெ ஆர் 34' என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. 'அகிலன்' மற்றும் 'பிரதர்' படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி உடன்…
Read More
பூஜையுடன் தொடங்கியது ‘தி இந்தியா ஹவுஸ்’ படப்பிடிப்பு!

பூஜையுடன் தொடங்கியது ‘தி இந்தியா ஹவுஸ்’ படப்பிடிப்பு!

உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரண் திரையரங்குகளுக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு, திரைப்பட தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார். வி மெகா பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தை, யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பங்குதாரரான விக்ரம் ரெட்டி - 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' , 'கார்த்திகேயா 2' ஆகிய வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது 'தி டெல்லி ஃபைல்ஸ்' எனும் படத்தையும் தயாரித்து வருகிறது. இவர்களுடன் இளமையான மற்றும் திறமையான நட்சத்திர நடிகரான நிகில் சித்தார்த்தா இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே 'கார்த்திகேயா 2' படத்திற்காக தொலைநோக்கு தயாரிப்பாளர் என புகழப்படும் அபிஷேக் அகர்வாலுடன் பணியாற்றியிருக்கிறார். தற்போது உலக அளவில் அறியப்பட்ட.. . இந்தியாவை பெருமைப்படுத்திய ராம்சரணுடன் இணைந்திருக்கிறார். 'தி…
Read More
“என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம்!- “கல்கி 2898 கிபி” பட நாயகர் பிரபாஸ்!

“என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம்!- “கல்கி 2898 கிபி” பட நாயகர் பிரபாஸ்!

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோருடன் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். வீடியோவில் நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் தாங்கள் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவங்களைப் பற்றியும், இப்படத்தினைப் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், “பிரபாஸ் மற்றும் பிரபாஸின் அனைத்து ரசிகர்களும், தயவு செய்து என்னை மன்னிக்கவும், இந்தப்படத்தினை பற்றி தெரியவந்த போது, தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும்…
Read More
கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடித்துள்ள “ஒத்த ஓட்டு முத்தையா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடித்துள்ள “ஒத்த ஓட்டு முத்தையா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

  கவுண்டமணி அவர்கள் அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகிறார் கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த "ஒத்த ஓட்டு முத்தையா" படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது..பூசணிக்காய் உடைக்கப் பட்டது.. கவுண்ட மணி.. யோகி பாபு..சித்ரா லட்சுமணன்..'மொட்டை ராஜேந்திரன்- ரவிமரியா..ஓ ஏ கே சுந்தர்..C.ரங்கநாதன் மற்றும் பலர்- மகிழ்ச்சியாக நடித்து முடித்தனர்.. இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக..நடிகர் சிங்க முத்து அவர்களின் மகன் வாசன்கார்த்தி & பிந்து மயில்சாமி அவர்களின் மகன் அன்பு மயில்சாமி & சாய் தான்யா நாகேஷ் பேரன்- கஜேஷ் & அபர்ணா. கவுண்டமணி மனைவியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்..இது தவிர- சிங்கமுத்து..தாரணி..ரவிமரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகா ஶ்ரீ, மிலிட்டரி கதாபாத்திரத்தில் இயக்குனர்…
Read More
‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

  'சேத்துமான்' என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது. "நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது" என்கிறார் இயக்குநர் தமிழ். 'ஹிருதயம்', 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படப்புகழ் தர்ஷனா ராஜேந்திரன், 'கனா' புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.…
Read More
‘சுயம்பு’ படத்திற்காக இரு கைகளாலும் வாள் சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார் நடிகர் நிகில் !

‘சுயம்பு’ படத்திற்காக இரு கைகளாலும் வாள் சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார் நடிகர் நிகில் !

  ஹீரோ நிகில், பாரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கவுள்ள தனது 20வது படமான 'சுயம்பு' படத்திற்காக வியட்நாமில் கடுமையான பயிற்சிக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியுள்ளார். தாகூர் மது வழங்கும் பிக்சல் ஸ்டுடியோஸின் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் போர் வீரனாக நடிக்க ஆயுதங்கள், தற்காப்புக் கலைகள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் பயிற்சி பெற்று இருக்கிறார் நிகில். இந்தப் படத்தில் சில நம்பமுடியாத சண்டைக் காட்சிகளை திரையில் கொண்டு வர இருக்கிறார் நிகில். இதற்கான பயிற்சியை முடித்த பின்பு இப்போது நிகில் வாள் சண்டையில் நிபுணராகி உள்ளார். இதற்கு காரணம் இவ்வளவு நாட்கள் நிகில் எடுத்த கடுமையான பயிற்சிகள் தான். இப்போது இரண்டு கைகளாலும் வாள் சண்டை பயிற்சி செய்யும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது நடிகர் நிகில் பகிர்ந்துள்ள வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நிகிலின் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப்…
Read More
பிரபாஸின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் ! திருவிழா போல காட்சியளிக்கிறது!

பிரபாஸின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் ! திருவிழா போல காட்சியளிக்கிறது!

  தென்னிந்திய திரையுலகின் டார்லிங் பிரபாஸ் பாகுபலி மூலம் பான் இந்திய அளவில் பிரபலமானார். தற்போதைக்கு இந்திய திரையுலகில் மிகபபெரும் ரசிகர் பட்டாளம் அவருக்கு இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அவரது திரைப்படங்கள் வெளியீட்டுக்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கிறது. இந்திய முழுமைக்கும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரபாஸின் பிறந்த நாளை நேற்று ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். தென்னிந்திய ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நேற்று 23 அக்டோபர் அவரது 44 பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி நேற்று ஹைதராபாத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய அவரது ரசிகர்கள், இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமான கட் அவுட் அமைத்து, கிரேனில் அதற்கு மாலை அணிவித்து, பாலபிஷேகம் செய்து, இனிப்பு விநியோகித்து கொண்டாடினார்கள். எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில் வெகு பிரம்மாண்டமாக, பெரும் கொண்டாட்டமாக நடந்த இந்த நிகழ்வு, பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக, அமைந்தது
Read More
‘நானி 31’ படத்தில் இணைந்துள்ளார் நடிப்பின் அரக்கன் எஸ். ஜே. சூர்யா!

‘நானி 31’ படத்தில் இணைந்துள்ளார் நடிப்பின் அரக்கன் எஸ். ஜே. சூர்யா!

  நேச்சுரல் ஸ்டார் நானியும், 'அந்தே சுந்தரானிகி' போன்ற கல்ட் என்டர்டெய்னரை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா 'நானி 31' படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை 'ஆர் ஆர் ஆர்' போன்ற ஆஸ்கார் விருது பெற்ற படத்தை தயாரித்த  டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ்   சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள். 'நானி 31' தொடர்பாக ஒரு சிறிய அறிவிப்பு வீடியோவை வெளியிடுவதன் மூலம் படக் குழு தங்களின் திட்டத்தையும் விவரித்தது. இதனால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் தங்கள் இரண்டாவது பயணத்தில் இந்த முறை வித்தியாசமான படைப்பை தருவதற்கு முயற்சிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர். தற்போது 'நானி 31' படத்தின் நடிகர்கள் பற்றிய தகவல்களை வெளியிட தொடங்கியுள்ளனர். இப்படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது நடிகர் எஸ். ஜே. சூர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்…
Read More
நேச்சுரல் ஸ்டார் நானியின் 31வது படத்தை வெற்றி இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்க்கவுள்ளார்!

நேச்சுரல் ஸ்டார் நானியின் 31வது படத்தை வெற்றி இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்க்கவுள்ளார்!

  முன்னணி நட்சத்திரமான நேச்சுரல் ஸ்டார் நானியும், அந்தே சுந்தராணிகி எனும் ஒரு கல்ட் எண்டர்டெய்னர் படத்தை வழங்கிய திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயாவும் #Nani31 மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். ஆஸ்கர் விருது வரை அசத்திய RRR படத்தை வழங்கிய DVV தனய்யா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் கல்யாண் தாசரி இருவரும் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்கள். இந்த முறை இந்தக் கூட்டணி, மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை அசத்தப்போகிறார்கள் என்பது, இன்று வெளியான அறிவிப்பு வீடியோவில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. படப்பிடிப்பிற்கு முன்னதான முன் தயாரிப்பு பணிகளைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இந்த சிறிய வீடியோ வழங்குகிறது. வீடியோவில் நானியின் வசீகரமிக்க தீவிரமான கண்கள் இந்த முறை மிக உற்சாகமான விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. இந்த வீடியோவில் வரும் வண்ணங்கள், இசை அனைத்தும் இந்த படைப்பு மிக வித்தியாசமான ஜானரில் இருக்குமென்பதை தெறிவிக்கிறது. வீடியோவின் இறுதியில்,…
Read More
பிருத்விராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன் !

பிருத்விராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன் !

  லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் இயக்குநரான பிருத்விராஜ் சுகுமாறனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் பிரம்மாண்டமான பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மலையாள திரையுலகில் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து, நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதால் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த அவரை வெளிநாட்டில் இருக்கும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை…
Read More