23
Sep
படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு ! தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சண்டை கலைஞர்கள் பங்குகொள்ள, படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகள் மற்றும் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு, எதிர்பாராத சிறப்பு விருந்தினர் வந்து, படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நரசிம்மா நந்தமூரி பாலகிருஷ்ணா படப்பிடிப்பை பார்வையிட்டு குழுவினரை வாழ்த்தியுள்ளார். அவர் நடிக்கும் Akhanda படத்தின் படப்பிடிப்பும் கோவாவுக்கு அருகில் தான் நடைபெற்று வருகிறது. படத்திற்கு போடப்பட்டிருந்த பிரமாண்ட செட்டை…