07
Mar
தமிழ் திரையுலகத்தில் வில்லன் எனும் கதாபாத்திரத்திற்கு முதல் அடித்தளம் இட்டவர் எம்.என்.நம்பியார். திரையில் இவரை பார்க்கும் ரசிகர்கள் அவரை பொல்லாதவனாகவும் அநியாயம் அட்டூழியங்களை செய்யும் அரக்கனாகவும் பார்க்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பால் திரையுலக வரலாற்றில் வில்லன் கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்த பழம் பெரும் வில்லன் நடிகன் அவர். அதிலும் எம்.ஜி.ஆருடன் இவர் சண்டையிடுவதை பார்த்து இவரை அடிக்க பாய்ந்து , சினிமா தியேட்டர்களில் உள்ள திரையைக் கிழித்த ரசிகர்களும் உள்ளனர். அவ்வாறு திரை உலகையே தன்வசப்படுத்தி யிருந்த வில்லன் எம்.என்.நம்பியார். இவர் கடந்த 1919 ம் ஆண்டு இதே மாதம் இதே தேதியில் இந்திய கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பெருவமூர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை கேளு நம்பியார் என்பவராவார் இவர் குடும்பத்தின் கடைசிக் குழந்தையாக பிறந்தார் எம்.என். நம்பியார் எனப்படும் மாஞ்சேரி நாராயணன் நம்பியார். இவரின் 8 வது வயதிலேயே அவரது தந்தை இறந்த நிலையில் அவர்…
