ரஜினியின் 2.0 படம் தயாராகலை: அதனால் ‘காலா’ ரிலீஸ் ?!

ரஜினியின் 2.0 படம் தயாராகலை: அதனால் ‘காலா’ ரிலீஸ் ?!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 400 கோடி பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தியா மட்டுமன்றி உலக அளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. தான் நினைத்தது போன்று கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கவேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ஷங்கர். முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். இந்நிலையில், ஏப்ரல் வெளியீடும் சாத்தியமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை முடித்துள்ள காட்சிகள் அனைத்தையும் படத்தோடு இணைத்து DI பணிகள் உள்ளிட்டவற்றை முடிக்க காலதாமதமாகும். இதனால்தான் வெளியீட்டு தேதியை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது படக்குழு. இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில்…
Read More
லட்சுமி & மா ஷார்ட் பிலிம் டைரக்டரின் படத்தில் கமிட் ஆன நயன்தாரா!

லட்சுமி & மா ஷார்ட் பிலிம் டைரக்டரின் படத்தில் கமிட் ஆன நயன்தாரா!

தமிழில் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ‘லட்சுமி’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் நம்பர் 1 நடிகையாக நயன்தாரா வலம் வருகிறார். இவர் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்துவருகிறார். இவர் நடித்த அறம், டோரா, மாயா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், முற்போக்கான கதைகளத்தையும் கொண்டு குறும்படங்களை இயக்கிய இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறும்பட இயக்குநர் சர்ஜூன் ‘லட்சுமி’ மற்றும் ‘மா’ என்னும் இரண்டு குறும்படங்களை இயக்கி பிரபலமானார். மேலும் லட்சுமி குறும்படத்திற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களும், பாராட்டுக்களும் ஒருசேர கிடைத்தன. சர்ஜூனின் அடுத்த இயக்கத்தில் உருவான ‘மா’ குறும்படத்தையும் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் YouTube-ல் பார்த்துள்ளனர்.…
Read More
ராஜூமுருகன் – ஜீவா –  இணையும் ஜிப்ஸி!

ராஜூமுருகன் – ஜீவா – இணையும் ஜிப்ஸி!

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது.    தற்போது ராஜூமுருகன் பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால் ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார்.    இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார்.    இயக்குனர் ராஜூமுருகன் இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான  சமூக வாழ்வியல் படத்தை கொடுக்கவுள்ளார். இந்த படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ராஜூமுருகன் திட்டமிட்டுள்ளார்.
Read More
“நாகேஷ் திரையரங்கம்”  பாடல்கள் வெளியீடு!

“நாகேஷ் திரையரங்கம்” பாடல்கள் வெளியீடு!

டிரான்ஸ் இண்டியா மீடியா சார்பில், ராஜேந்திர M ராஜன் தயாரிப்பில், தனது முதலாவது திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து, கின்னஸ் சாதனை புரிந்த, இயக்குநர் இசாக் இயக்கத்தில், உருவாகி இருக்கும் திரைப்படம்“நாகேஷ் திரையரங்கம்”. ”நெடுஞ்சாலை” ஆரி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மாசூம் சங்கர், அதுல்யா, எம்.ஜி.ஆர் லதா, மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு, “பழைய சோறு பச்ச மிளகா” பாடல் புகழ், இசையமைப்பாளர் ”ஸ்ரீ” அவர்கள் இசையமைத்திருக்கிறார். பாடல்களை தாமரை, “மாயநதி” உமாதேவி, முருகன் மந்திரம், வேல்முருகன், மற்றும் ஜெகன் சேட் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2-&ல் சூரியன் பண்பலையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டில், ஆரி, ஆஷ்னா சவேரி, மாசூம் சங்கர் அதுல்யா மற்றும் இயக்குநர் இசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். ”நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16-ல் திரைக்கு வர இருக்கிறது.  நடிகர்கள்: ஆரி, ஆஷ்னாசவேரி, எம்.ஜி.ஆர். லதா, காளிவெங்கட், மாசூம் சங்கர், சித்தாரா, அபிலாஷ், அதுல்யா ரவி, அனில்முரளி, மனோபாலா, சித்ராலக்ஷ்மண்.   டெக்னீசியன்ஸ் : இயக்கம்-இசாக்,  ஒளிப்பதிவு-நௌஷத்,  இசை-ஸ்ரீ, படத்தொகுப்பு - தேவராஜ், கலை - ராமலிங்கம், பாடல்கள் - தாமரை, உமாதேவி, முருகன்மந்திரம், வேல்முருகன், ஜெகன்சேட், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் ஷாம், நடனம் - ராபர்ட், பாம்பே பாஸ்கர், ஆடைகள் - முகமது சுபீர்,  ஆடை வடிவமைப்பு - சோபியா சௌரிராஜன், தினேஷ்FT,  VFX - ட்ராட்ஸ்கி…
Read More
‘Mr.சந்திரமௌலி’.  ரிலீஸ்  தேதி அறிவிப்பு!

‘Mr.சந்திரமௌலி’. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும்  படம் 'Mr.சந்திரமௌலி'. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் 'Mr.சந்திரமௌலி' வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். தொடர்ந்து 18 மணி நேரம் நடந்துள்ள இந்த  படப்பிடிப்பில்  துளியும்   சோர்வாகமல், முழு ஓத்துழைப்பையும் தந்து அசத்தியுள்ளார் கதாநாயகன்  கவுதம் கார்த்திக். அவரது இந்த உழைப்பை 'Mr.சந்திரமௌலி' அணியும் இப்படத்தின்  சண்டை இயக்குனர் 'ஸ்டண்ட்' சிவாவும் பாராட்டியுள்ளனர். இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 27 ரிலீசுக்கு 'Mr.சந்திரமௌலி' வேகமாக தயாராகிவருகிறது. இந்த படத்தை BOFTA media works India private limited…
Read More
சரத்குமார், அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாம்பன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்!

சரத்குமார், அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாம்பன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்!

ஒரு கையில் எடுத்த சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல் ஆயுத்தை விடாமல் மறுபக்கம் ஏதாவதொரு சினிமாவில் தொடர்ச்சியாக பயணித்து வரும் சரத்குமார், அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாம்பன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. சென்னையில் ஒரு நாள் 2 படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சரத் குமார். அதுமட்டுமல்லாது ரெண்டாவது ஆட்டம், நல்லாசிரியர் படங்களிலும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது பாம்பன் என்ற பெயரில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 31) பாடல் பதிவுடன் துவங்குகிறது. சரத்குமாரின் பல படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்தக் கூட்டணி இதற்கு முன்பு மகா பிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம் உள்ளிட்ட பல படங்களைத் தந்திருக்கிறது. தற்போது மீண்டும் இணைந்திருக்கிறது. வெங்கடேஷின் பல படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.…
Read More
காளி படத்தின் ‘அரும்பே’ பாடல் – வீடியோ!

காளி படத்தின் ‘அரும்பே’ பாடல் – வீடியோ!

புதுமைக்கு பெயர் போனவை விஜய் ஆண்டனியின் படங்கள். கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த படமான 'காளி' தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க ஒரு புது யுக்தியை கையாண்டுள்ளது. 'காளி' படத்திற்காக சிறந்த டியூன்களை விஜய் ஆண்டனி தந்துள்ளார் என கூறப்படுகிறது. 'காளி' படத்தின் 'அரும்பே' பாடலை நேற்று இசையமைப்பாளர் அனிருத் ரிலீஸ் செய்தார் . இந்த பாட்டோடு இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த 'அரும்பே' பாடல் ரசிகர்களின் இலவச சட்டப்பூர்வமான டவும்லோடிற்கு Vijayantony.com என்ற இணையதளத்தில் தயாராகவுள்ளது. இந்த 'அரும்பே' பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இது குறித்து பாடலாசிரியர் விவேக் பேசுகையில் , '' விஜய் ஆண்டனி சாரின் இசையில் நான் எழுதியிருக்கும் முதல் பாடல் இது. அவருடன் பணிபுரிந்து அருமையான அனுபவமாகும். கிருத்திகா அவர்களுடன் இதற்கு முன்பு ஒரு மியூசிக் வீடியோவிற்காக பணிபுரிந்திருந்தாலும் ஒரு படத்திற்காக அவருடன் பணிபுரிவது இது தான்…
Read More
‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே ஹிட்!

‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே ஹிட்!

'பலூன்' படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள ஜெய்யின் அடுத்த படமான 'ஜருகண்டி' படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள்  இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கிவருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி என்பது அனைவரும் அறிந்ததே. 'ஜருகண்டி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  நேற்று, இந்திய முழுவதும் மொழி எல்லைகளை தாண்டி  தனக்கென ரசிகர்களை பெற்றிருக்கும்  பிரபல இயக்குனர் A R முருகதாஸ் அவர்களால் ரிலீஸ் செய்யப்பட்டது. நல்ல சினிமாவை என்றுமே ஊக்குவிப்பவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த ஆதரவு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைவது நிச்சயம். ''நல்ல படங்களை என்றுமே பாராட்டி ஆதரவு தரும் A R முருகதாஸ் அவர்கள் எங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் படத்தின்  90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் '' என…
Read More
கமல் & ஷங்கர் கூட்டணியில் தயாராகப் போகும் இந்தியன் 2ல் நயன்தாரா?

கமல் & ஷங்கர் கூட்டணியில் தயாராகப் போகும் இந்தியன் 2ல் நயன்தாரா?

கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் இந்தியன் 2இல் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் 2.0 படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளில் வேகம் காட்டிவரும் ஷங்கர் இந்தியன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 20 வருடங்களுக்கு அதன் இரண்டாம் பாகத்தை கமலுடன் இணைந்து உருவாக்கவிருக்கிறார். இது குறித்தான அறிவிப்பை தைவான் நாட்டில் படக் குழுவுடன் பலூன் ஒன்றை பறக்கவிட்டு உறுதிப்படுத்தினார். இப்படத்தின் கதாநாயகிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியனில் சேனாதிபதி, சந்திரபோஸ் என்ற இரண்டு கேரக்டர்களில் கமல் நடித்திருந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக மனீஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோர் நடித்திருந்தனர். 70 வயதான சேனாதிபதி கேரக்டரில் ஊழலுக்கு எதிராகப் போராடும் சுதந்திரப் போராட்ட தியாகியாக கமல்ஹாசன் நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படமும் அரசியல், சமூகப் பிரச்சினைகளைப் பேசும் படமாக உருவாகவிருக்கிறது. அரசியலில் களமிறங்கியிருக்கும் கமலுக்கும் இந்தப்…
Read More
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் –  2 !

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2 !

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2 " உருவாக உள்ளது.   இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில்  அஞ்சலி, பரணி, அதுல்யா,எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இசை - ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு - ஏகாம்பரம் கலை - ஜாக்கி எடிட்டிங் -  ரமேஷ் பாடலாசிரியர் – யுகபாரதி சண்டை பயிற்சி -  திலீப் சுப்புராயன் நடனம் - திணேஷ், ஜானி மக்கள் தொடர்பு - மெளனம் ரவி   தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.
Read More