இது தமிழில் என்னுடைய 7வது படம்! – ’நிமிர்’ இயக்குநர் பிரியதர்ஷன் பெருமை!

இது தமிழில் என்னுடைய 7வது படம்! – ’நிமிர்’ இயக்குநர் பிரியதர்ஷன் பெருமை!

மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ''நிமிர்''. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நான் நாடகத்தில் இருந்து வந்தவன், காஞ்சிவரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் இருந்து வந்ததால் நடிப்பு கொஞ்சம் மிகையாகவும் இருந்தது, பிரியதர்ஷன் சார் தான் எப்படி யதார்த்தமாக நடிக்கணும்னு சொல்லி கொடுத்தார் என்றார் நடிகர் ஜார்ஜ். பிரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்த படத்தில் நான் தான் ஜூனியர், எல்லோருமே என்னை விட பெரிய…
Read More
பல வருஷம் உழைச்சி உருவாக்கிய கதை – ஸ்கெட்ச்!

பல வருஷம் உழைச்சி உருவாக்கிய கதை – ஸ்கெட்ச்!

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “. இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே. சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவி கி‌ஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடித்துள்ளார்கள். கலை-மாயபாண்டி, இசை -எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு- சுகுமார், எடிட்டிங்-ரூபன், நடனம்-ஷோபி, பிருந்தா, ஸ்டண்ட் -ரவி வர்மன், தயாரிப்பு-மூவிங் பிரேம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய்சந்தர். இந்த படத்திற்காக விஜய்சந்தர் எழுதிய “கனவே கனவே புது கனவே” என்ற பாடலை நடிகர் விக்ரம் பாட தமன் இசையில் பதிவு செய்யப்பட்டது. கொஞ்சம் ஹிட் அடித்த ‘வாலு’ படத்தையடுத்து விஜய் சந்தர் இயக்கும் படமிது. அவரிடம் ஸ்கெட்ச் போட்ட பின்னணி குறித்து பேச்சு கொடுத்த போது , “நான் அதிர்ஷ்டசாலிங்க. விக்ரம்…
Read More
ஹன்சிகா ‘பப்’ டான்சர்! – குலேபகாவலி படம் குறித்த தகவல்!

ஹன்சிகா ‘பப்’ டான்சர்! – குலேபகாவலி படம் குறித்த தகவல்!

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா, மதுசூதனன் ராவ், ராமதாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். `அறம்' படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸின் அடுத்த படமாக இந்த படம் வெளியாகிது. எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ல் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநரிடம் கேட்ட போது, “இது பிளாக் காமெடி படம். தமிழ் சினிமால பிளாக் காமெடி ஜானர்ல படங்கள்…
Read More
உள்குத்து ரிலீஸாக உதவிய விஷால்! – புரொடியூசர் நெகிழ்ச்சி!

உள்குத்து ரிலீஸாக உதவிய விஷால்! – புரொடியூசர் நெகிழ்ச்சி!

உள்குத்து” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் PK FILM Factory G.விட்டல் குமார் , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் நடிகர் தினேஷ் பேசியது :- நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுதந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார். தயாரிப்பாளர் விட்டல்குமார் பேசிய போது, “ உள்குத்து திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும் , விஷால் சாரும் தான். கடவுளுக்கு நன்றி விஷால் சாருக்கு…
Read More
வேலைக்காரன் படத்தில் என்ன சொல்லி இருக்கேன்? – மோகன் ராஜா ஓப்பன் டாக்!

வேலைக்காரன் படத்தில் என்ன சொல்லி இருக்கேன்? – மோகன் ராஜா ஓப்பன் டாக்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா. அப்போது பேசிய அவர், “சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கன்னு பெரிய தெம்பை கொடுத்தார் ஆர்டி ராஜா. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது. அவருடன் 3வது படமும் இணைந்து பண்ணுவேன். அனிருத் சின்ன பையன், ஆனால் பெரிய திறமையாளர். கதையை புரிஞ்சிக்கிட்டு சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த…
Read More
வேலைக்காரன் படத்தில்  மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றும் சிவகார்த்திகேயன்!

வேலைக்காரன் படத்தில் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' மாதிரியான ஒரு படத்தில் நடித்ததில்லை. இதில் அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார் என ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறினார். 'வேலைக்காரன்' படம் குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறுகையில், "சென்னை வெள்ளத்தின் போது 'வேலைக்காரன்' படத்தின் ஒரு வரிக் கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னைக் கவர்ந்தது, இந்தப் படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். 'வேலைக்காரன்' வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்காலத் தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம். மோகன் ராஜா மற்றும் அவரின் உதவி இயக்குநர்களின் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒவ்வொரு நாளும் மாலை படப்படிப்பை முடித்து விட்டு, மறுநாள் காலை படப்பிடிப்புக்கு போகும்போது அவரின் உதவியாளர்கள் சோம்பிக்கள் போல வலம் வருவார்கள். அதற்குக் காரணம் காலை 4 மணி வரை எடுக்க வேண்டிய காட்சிகளை…
Read More
என்னுடைய நடிப்பை பாராட்டினார்கள்!- சத்யா வெற்றி விழாவில் சிபி மகிழ்ச்சி!

என்னுடைய நடிப்பை பாராட்டினார்கள்!- சத்யா வெற்றி விழாவில் சிபி மகிழ்ச்சி!

சிபிராஜின் “ சத்யா “ திரைப்படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்  சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் / தயாரிப்பாளர் சிபிராஜ் , நாயகி ரம்யா நம்பீசன் , வரலட்சுமி சரத்குமார் , இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி , இசையமைப்பாளர் சைமன் K கிங் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , இயக்குநர் அறிவழகன் , ஷணம் ( தெலுங்கு ) திரைப்படத்தின் கதாநாயகன் அதிவிசேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  விழாவில் சிபிராஜ் பேசியது :- சத்யா திரைப்படத்தின் பத்திரிகையாளர்  ஷோ முடிந்த பின்னர் அனைவரும் என்னுடைய நடிப்பை பற்றியும் , படத்தை பற்றியும் என்ன சொல்வார்கள் என்று பயத்தோடு இருந்தேன். அனைவரும் பாசிடிவாக கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய நடிப்பை கேலி செய்து படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்து முடிக்கும் போது அனைவரும் என்னுடைய…
Read More
விக்ரம் வேதா படம் 100 வது நாள் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை!

விக்ரம் வேதா படம் 100 வது நாள் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.  விஜய் சேதுபதி – மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.  இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விக்ரம் வேதா திரைப்படத்துக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொருவரையும் மேடையில் அழைத்து நினைவுக் கேடயம் கொடுத்து சிறப்பித்தார்கள். படத்துக்கு டி.ஐ செய்தவர்கள் முதல் ப்ரிவியூவுக்குக் கேட்டபோதெல்லாம் தியேட்டர் கொடுத்தவர்கள் வரை அத்தனை பேரும் மேடையில் ஏற்றப்பட்டனர். அதிலும்  நடிகர் விஜய் சேதுபதி, கதிர் மற்றும் நடிகைகள் வரலக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்…
Read More
ஸ்ருதிஹாசனின் லவ்வருடன் கமல்!

ஸ்ருதிஹாசனின் லவ்வருடன் கமல்!

கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த நடிகர் மைகேல் கார்சலே என்பவரை காதலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்த நிலையில் கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனின் திருமணம் சென்னையில் நேற்று (டிசம்பர் 5) நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் வருகை தந்திருந்தார். ​ விழாவுக்கு வருகை தந்திருந்த கமலிடம் ஸ்ருதிஹாசன் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். மகள் ஸ்ருதிஹாசன் மற்றும் வருங்கால மருமகன் மைகேல் கார்சலே ஆகியோருடன் கமல் அருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளிவந்துள்ளது. ​ அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மைக்கேல் கார்சலைத் தனது தாயார் சரிகாவிடம் ஸ்ருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரை சரிகா பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற புகைப்படமும் வெளியானது. சமீபகாலமாக ஸ்ருதிஹாசன் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாத நிலையில் மைக்கேல் கார்சலே-ஸ்ருதிஹாசன் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Read More
அண்ணாதுரை படத்தில் நாயகன், இசை மற்றும் எடிட்டர் விஜய் ஆண்டனி!

அண்ணாதுரை படத்தில் நாயகன், இசை மற்றும் எடிட்டர் விஜய் ஆண்டனி!

நல்ல கதையும், அதற்கான சரியான விளம்பர யுக்திகளும் தான் சினிமாவில் வெற்றியை பெற்று தரும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இதனை நன்கு உணர்ந்து, தீவிரமாக கடைபிடிக்கும் ஒருவர் விஜய் ஆண்டனி. ஒரு இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் அவர் தனது ‘அண்ணாதுரை’ படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராகவும் மாறியுள்ளார். தனது சினிமா பயணத்தை சிறுக சிறுக அழகாக செதுக்கி வெற்றியை சுவைத்து க்கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தனது அசுர தன்னம்பிக்கையாலும் , கடும் உழைப்பினாலும் இந்த இடத்தை அடைந்திருப்பவர் அவர். அவரது அண்ணாதுரை பெரிய எதிர்பார்ப்புடன் வெளி வருகிறது. இப்படம் குறித்து விஜய் ஆண்டனி பேசுகையில், ” இந்த தலைப்பு இப்படத்திற்கு கிடைத்ததில் எனக்கு மிகவும் பெருமை. கதை தான் என்றுமே கதாநாயகன் என்பதை உறுதியாக நம்புபவன் நான். இயக்குனர் ஸ்ரீனிவாசன் இப்பட கதையை என்னிடம் கூறிய பொழுது, மிகவும் பிடித்து போய் இதில் நடிக்க உடனே சம்மதித்தேன். இப்பட…
Read More