6 அத்தியாயம் – பிரபலங்களின் விமர்சனம்!

6 அத்தியாயம் – பிரபலங்களின் விமர்சனம்!

உலகின் எல்லா மொழி சினிமாக்களிலும்  வித்தியாசமான முயற்சிகள் அரங்கேறிக் கொண்டே இருப்பது வாடிக்கைதான் .அப்படி ஒரு வித்தியாசமான முயற்சி யில் உருவானதுதான் ‘6 அத்தியாயம்’. இதற்கு முன்னர் பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அந்தந்த அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. . ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில்  சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். நாளை - பிப். 23ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை பல்வேறு பிரபலங்களுக்கு ஸ்பெஷல் ஸ்கீரினிங் போடப்பட்டது. அதையடுத்து  இப்படம் குறித்து அவர்களின் கருத்துகள் இதோ: இயக்குனர் பாரதிராஜா தெளிவான சிந்தனை, சரியான திட்டமிடல் ,…
Read More
தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி !

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி !

தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும்,  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”.   “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது.   இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் நடிகர்கள் பார்த்திபன், நாசர், தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர்,…
Read More
எல்லோரையும் ஈர்க்கும் தலைப்பு -’’ஏண்டா  தலைல எண்ணெய் வெக்கல’.

எல்லோரையும் ஈர்க்கும் தலைப்பு -’’ஏண்டா  தலைல எண்ணெய் வெக்கல’.

யோகி & பார்ட்னர்ஸ்' சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் 'ஏண்டா  தலைல எண்ணெய் வெக்கல'. ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு நடித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரகுமான் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தி பேசினார். 20 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பாளர் யோகி, சுபா எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்கள். என்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு படம் பண்ணனும் என சொல்லிட்டே இருப்பாங்க. நான் தான் சினிமா ரிஸ்க், வேணாம்னு சொல்லிட்டே இருந்தேன். பின் ஒரு நாள் ரெஹானா மேடம் வழிகாட்டுதலில் படத்தை துவங்கியதாக சொன்னார்கள். கதை ரொம்ப நல்லா இருந்துச்சி. எனக்கும் திருப்தியாக இருந்தது. பாடல்களும்,…
Read More
ஆறு கதைகள்; ஆறு இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிட ‘6 அத்தியாயம்’!

ஆறு கதைகள்; ஆறு இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிட ‘6 அத்தியாயம்’!

ஏ.பி.நாகராஜன், பி.ஆர். பந்துலு தொடங்கி கே.பாலச்சந்தர், வஸந்த், கார்த்திக் சுப்புராஜ் வரை நீளும் இயக்குனர்கள் பலர் வெவ்வேறு கதைகளை ஒன்றிணைத்து ஒரு புள்ளியில் இணைக்குமாறு கதைகளை புனைந்து படங்களை உருவாக்கினர். அண்மையில் துல்கர் சல்மானின் நடிப்பில் மலையாளம் மற்றும் தமிழில் வெளிவந்த சோலோ திரைப்படம் அந்தாலஜி முறையைக் கொண்டிருந்தது. அதாவது படத்துக்குள் இருக்கும் வெவ்வேறு விதமான கதைகளில் ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் எவ்விதத் தொடர்புமிருக்காது. அப்படியான புதுவிதமான முயற்சியை தமிழில் 6 அத்தியாயங்கள் திரைப்படம் மூலம் கையாண்டுள்ளனர். இப்படத்தில் கேபிள் ஷங்கர், அஜயன் பாலா, சங்கர் தியாகராஜன் உட்பட 6 இயக்குனர்கள் இயக்கியிருக்கும் கதைகளில் பசங்க கிஷோர் , சேதுபூமி தமன் உள்ளிட்ட வளர்ந்து வரும் நடிகர்களும் பல புதிய கலைஞர்களும் பணிபுரிந்துள்ளனர். கதையின் உள்ளடக்கத்துக்கும், திரைமொழியின் வடிவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள கதைகளை அந்தாலஜி முறையில் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 23 அன்று திரைக்கு வருகிறது.…
Read More
‘நாகேஷ் திரையரங்கம்’  – வரும் வெள்ளி  ரிலீஸ்!

‘நாகேஷ் திரையரங்கம்’ – வரும் வெள்ளி ரிலீஸ்!

மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் தனது சம்பாத்தியத்தில் சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1984-ஆம் ஆண்டு ஜுன் 27-ந் தேதி ‘நாகேஷ் தியேட்டர்’ என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை தொடங்கினார். இந்த திரையரங்கை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த திரையரங்கம் ஒருகட்டத்தில் திருமண மண்டபமாக மாறி விட்டது. இருப்பினும், இன்றைக்கும், அந்த பகுதியில் நாகேஷ் தியேட்டர் பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது. இந்த திரையரங்கை பெருமைப்படுத்தும் வகையில் தற்போது தமிழ் சினிமாவில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி  வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக  இருக்கிறது. ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் நடித்த ஆரி இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார்.. கதாநாயகியாக ஆஷ்னா சவேரியும் நடித்திருக்கிறார்கள்.தவிர அதுல்யா , மசூம் சங்கர் என்று மேலும் இரண்டு கதாநாயகிகள் .. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லதா, சித்தாரா…
Read More
‘நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸ்!

‘நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸ்!

ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் திரு. ராஜேந்திர எம்.ராஜன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை” “மாயா” படப் புகழ் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படித்தான்” படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி ஜோடியாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். நெளஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில், தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார்…
Read More
ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, ‘சாட்சிகள் சொர்க்கத்தில் ‘ இசை வெளியீட்டு விழா!

ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, ‘சாட்சிகள் சொர்க்கத்தில் ‘ இசை வெளியீட்டு விழா!

ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படம் வெளியாக உள்ளது. நீண்ட காலமாகக் காத்திருந்த இத்திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி, மாசி மாதம் 2018 அன்று ஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ ஒரு நடப்பியலுக்கு மாறுபட்ட தன்மையுடைய கதை பாணியில் அமைக்கப்பட்ட, இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட தமிழர்களினதும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான படம். பாதிப் படம் தமிழில் துணையுரையுடன் ஆங்கிலத்திலும், மீதி ஆங்கில துணையுரையுடன் தமிழிலும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல சர்வதேச விருதுகளை தட்டிச்சென்ற கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம், 2009ல் இலங்கை அரச படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தலைவர் பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரனுக்கும், பாடகியும் உடகவியளாளரும், நடிகையுமான சகோதரி இசைப்ரியாவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி,…
Read More
“ பக்கா “  படத்திற்கு U சான்றிதழ்!

“ பக்கா “ படத்திற்கு U சான்றிதழ்!

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா”. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - S.S.சூர்யா.. படம் பற்றி கேட்ட போது, “கிராமங்களில் இருந்த வாழ்க்கை மெல்ல மாறி நகரமயமாகி வருவதைக் கிண்டல் செய்யும் கொண்டாட்டமான நகைச்சுவைப் படம் இது. நாயகன் விக்ரம் பிரபு, கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகராக நடிக்கிறார். ரசிகர் மன்றங்களையும் கிண்டலடிக்கும் இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு நேர் எதிராக ரஜினி ரசிகர் மன்றம் நடத்தும் கிராமத்து இளம்பெண் கதாபாத்திரத்தில் நிக்கி…
Read More
மதுர வீரன் படத்தில் சண்முக பாண்டியன் ஏன்? – இயக்குநர் விளக்கம்!

மதுர வீரன் படத்தில் சண்முக பாண்டியன் ஏன்? – இயக்குநர் விளக்கம்!

விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் நடிக்கும் 'மதுர வீரன் ' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராகி பின்னர் தள்ளிப் போய் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகப் போகிறது. இப்படத்தை PG முத்தையா இயக்கி , விஜி சுப்ரமணியன் தயாரிக்கும் படம்.இந்த படத்தில் புது முக நாயகி மீனாட்சி அறிமுகமாகவுள்ளார்.இப்படம் ஜல்லிக்கட்டு பற்றியும் அதில் பங்கேற்கும் காளைகளை பற்றியும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அனுபவத்தை பேசிய இயக்குநர் முத்தையா, “நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஓரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் “மதுரவீரன்” கதை உருவானது. இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும் வில்லன் என்றால்…
Read More
விஜய்சேதுபதி வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?

விஜய்சேதுபதி வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?

7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எனக்கு பலவீனங்களை கடந்து வருவதற்கு எழுத்தும், பாடல்களும் கிரியா ஊக்கியாக அமைந்தன. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் நல்ல நட்பு அமைந்தது. அப்படி அமைந்த நட்பு தான் இந்த படத்தில் என்னை கொண்டு வந்து சேர்த்தது. அந்த நட்பு பாடலில் பிரதிபலிக்கும். சமூக கோபங்களை பாடல்களில் ஆங்காங்கே தூவியிருக்கிறேன் என்றார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. இந்த படம் எனக்குள் பெரும்…
Read More