25
Nov
இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொன்அதற்கி பைனான்சியர் அன்புவின் மிரட்டலே காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அன்பு மீது சசிகுமார், அமீர், கர்.பழனியப்பன் உள்ளிட்ட பல இயச்க்குநர்கள் கூட்டாக சென்று அன்பு மீது போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அன்பு தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில், அன்புக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் பலர் பேட்டியளித்து வருகிறார்கள். அதை எல்லாம் மிஞ்சும் வகையில் தற்போதைய தமிழ்ப் படவுலகில் நிலவிவரும் இறுக்கமான சூழ்நிலை குறித்து ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சில உண்மைகளைச் சொல்ல ஒரு நிகழ்ச்சி - என்ற பெயரில் அன்பு-க்கு ஆதராவான கூட்டமொன்று பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது... இந் நிகழ்ச்சியில் பேசிய அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தமிழ் சினிமாவில் கந்து வட்டி என்பதே இல்லை. சினிமா உலகுக்கு பைனான்ஸியர்…
