ஹன்சிகா ‘பப்’ டான்சர்! – குலேபகாவலி படம் குறித்த தகவல்!

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா, மதுசூதனன் ராவ், ராமதாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். `அறம்’ படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸின் அடுத்த படமாக இந்த படம் வெளியாகிது. எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி‘ படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ல் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநரிடம் கேட்ட போது, “இது பிளாக் காமெடி படம். தமிழ் சினிமால பிளாக் காமெடி ஜானர்ல படங்கள் ரொம்ப குறைவாத்தான் வருது. அந்த குறையை போக்குற விதமாக இந்த படம் இருக்கும். இந்த வகையறா படங்களுக்குன்னு இளம் ரசிகர்கள் நிறைய பெருகிட்டு வர்றாங்க. வெளிநாட்டுல வர்ற பிளாக் காமெடி படங்களை ரசிக்கிற நம் நாட்டு இளம் ரசிகர்களும் பெருகிட்டு வர்றாங்க. ஆனா நம் நாட்டுல அந்த அளவுக்கு இந்த வகை படங்களை எடுக்க மாட்டேங்கிறாங்க. அது ஏன்னு தெரியல. பாலிவுட்ல கூட இடையில சில படங்கள் பிளாக் காமெடி ஜானர்ல வந்துச்சு. ஆனா தொடர்ந்து அவங்களும் ஆக்‌ஷன், ரீமேக் படங்களுன்னு வேற மாதிரி பிசி ஆயிட்டாங்க. ஒரு மாதிரி த்ரில் மூடை கொடுத்துக்கிட்டே, சிரிக்கவும் வைக்கிற வித்தை இந்த ஜானருக்கு மட்டும்தான் இருக்கு. அதனாலதான் இதை கதைக் களமா எடுத்தேன்.

1947ல் நடக்கிற கதை, பிறகு 2017ல் இப்போ நடக்கிற கதைன்னு ரெண்டு காலகட்டத்தை சொல்ற படமா இது இருக்கும். 1947ன்னதும் சுதந்திர போராட்டமும் ஆகஸ்ட் 15ம்தான் நினைவுக்கு வரும். அதையொட்டிதான் அந்த பீரியட் காட்சிகள் வரும். உடனே சுதந்திர போராட்ட காலகட்டம்னு சொன்னதும் கண்டிப்பா தேசபக்தி பற்றி கருத்து சொல்ற படமா இருக்கும்னு நினைக்கலாம். ஆனா, இது அந்த மாதிரி படம் இல்ல. சினிமால நல்ல மெசேஜ் சொல்றது நல்ல விஷயம்தான். ஆனா, ஒரு படம் என்ன பேசணும்கிறதை அந்த படத்தோட கதைதான் தீர்மானிக்குது. கதையை எழுதிட்டு, திரைக்கதையை உருவாக்கும்போது, ஒவ்வொரு விஷயத்தையும் முடிவு பண்றதும் கதைதான். கதையை மீறி சில விஷயங்களை திரைக்கதையில புகுத்தும்போது அது திணிப்பா மாறிடும். இல்லேன்னா நாடகத்தனமா தெரியும். அந்த மாதிரி தவறுகள் நடக்காம பாத்துக்கிறது ஸ்கிரிப்ட் ரைட்டரோட வேலை. அந்த விதத்துல நான் கவனமா இருக்கேன். இந்த படத்தோட கதை, எந்த மெசேஜையும் கேட்கல. இது பக்கா என்டர்டெயின்மென்ட்தான். அதுல சினிமாவுக்கான எல்லா கலவையும் இருக்கும். படம் முடிஞ்சு வெளியில வரும்போது, இந்த படம் இந்த விஷயத்தை பேசியிருக்குன்னு மனசுல தோணும்போது அதுகூட ஒரு மெசேஜ்தான். ஆனா அது எந்தவிதத்திலும் திணிப்பா இருக்கக்கூடாது.

2017ல் ஹைடெக் இளைஞனா வர்ற பிரபுதேவாவோடு ஹன்சிகாவை பார்க்கலாம். ரெண்டு காலகட்டத்துக்கும் முடிச்சி போடுற விதமா திரைக்கதை இருக்கும்.படத்தின் கதையை கேட்டதும், ஹன்சிகா நடிக்க சம்மதித்தார். இந்த காலகட்டத்துக்கான மாடர்ன் பொண்ணு. காமெடி, ரொமான்ஸ்ன்னு ரெண்டு விதத்துக்கும் ரெண்டு விதமான பாடிலாங்குவேஜை அவர் படத்துல யூஸ் பண்ணியிருக்கார். அது ரசிகர்களை அப்படியே இழுத்துப்போடும். ரொம்பவே சின்சியர் நடிகை. மே மாசம் சென்னை வெயில் எப்படி இருந்துச்சுன்னு சொல்லத் தேவையில்லை. சென்னை ரோடுல்ல ஒரு நாள் முழுக்க அந்த வெயில்ல ஷூட்டிங் நடத்தினப்போ, ஹன்சிகா கொடுத்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. வேறொரு நடிகையா இருந்தாங்கனா, இந்த அளவுக்கு கொளுத்துற வெயில்ல தொடர்ச்சியா நடிச்சு கொடுத்திருப்பாங்களான்னு தெரியல. படத்துல பிரபுதேவா-ஹன்சிகாவோட காம்பினேஷன் ரொம்ப கலர்ஃபுல்லா வந்திருக்கு. பெஸ்ட் ரொமான்ட்டிக் ஜோடின்னு கூட இவங்களை சொல்லலாம். எக்ஸ்ட்ரா விஷய்ம் என்னான்னா படத்தில் அவர், ‘பப்’ டான்சராக வருகிறார்.’’என்றார்