புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது. விஜய் சேதுபதி – மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
விக்ரம் வேதா திரைப்படத்துக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொருவரையும் மேடையில் அழைத்து நினைவுக் கேடயம் கொடுத்து சிறப்பித்தார்கள். படத்துக்கு டி.ஐ செய்தவர்கள் முதல் ப்ரிவியூவுக்குக் கேட்டபோதெல்லாம் தியேட்டர் கொடுத்தவர்கள் வரை அத்தனை பேரும் மேடையில் ஏற்றப்பட்டனர். அதிலும் நடிகர் விஜய் சேதுபதி, கதிர் மற்றும் நடிகைகள் வரலக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உட்பட இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி மற்றும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் எனப் பலருக்கும் இது முதல் 100ஆவது நாள் மேடை.யாம்
விழாவில் மாதவன் பேசியபோது, “ நான் சொன்னதுபோலவே 100ஆவது நாள் விழாவில் பேசுகிறேன். இதுமட்டுமல்லாமல், விக்ரம் வேதா திரைப்படம் ரிலீஸானதும் சென்னையை விட்டு சென்றவன் ஐந்து மாதங்கள் கழித்து இப்போதுதான் திரும்ப வருகிறேன். படத்துக்குக் கிடைத்த வரவேற்பு மிகப்பெரிய போதையைக் கொடுத்தது. இங்கிருந்தால் அந்த போதை தலைக்கேறிவிடும் என்பதால்தான் சென்றுவிட்டேன். படம் இந்த வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதனால்தான், முடிந்தவரையில் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யச்சொல்லி கேட்டிருந்தேன். மற்றவர்களைப் போலவே, எனக்கும் விக்ரம் வேதா பலவற்றைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்தால் அதைத் தங்களது திரைப்படமாகக் கையிலெடுத்து ஒவ்வொருவரிடமும் கொண்டுசேர்க்க மக்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்பது தெரிந்தது. போலீஸ் தான் வில்லன் என ஒரு வார்த்தைகூட நான் படித்த எந்த இடத்திலும் எழுதப்படவில்லை. இதைச்சொன்னால் படத்தின் உணர்வு பாதிக்கப்படும் எனத் தெரிந்து மறைத்திருப்பது சாதாரணமாக நடைபெறும் ஒன்றில்லை என்று கூறினார்.
தாமதமாக வந்த விஜய் சேதுபதி ஒரு ஷூட்டிங்கில் பெண் கேரக்டருக்காக ஒட்டிய பொட்டிலிருந்து கொட்டிய பவுடர் வரை எதையும் மாற்றவில்லை. சரியாக மடிக்கப்படாத சட்டை, ஒரு ரப்பர் செருப்புடன் வழக்கமாக சொல்லும் சிம்பிளான கெத்துடன் மேடையேறியவர் “பரபரப்பா என்ன பேசுறது. எலெக்ஷன்தான் நடந்துக்கிட்டு இருக்கு. அங்கே ஒரு வீட்டுக்கு போயிருந்தாகூட நல்லா சம்பாதிச்சு செட்டில் ஆகியிருக்கலாம்போல’ என்று அரட்டையாகவே தொடங்கி,
“விக்ரம் வேதா படத்தைப் பற்றி பாராட்டிப் பேசவும் நன்றி சொல்லவும் எதுவுமே இல்லை. புஷ்கர்-காயத்ரிக்குக் கிட்டத்தட்ட ஆயிரம் முறை நன்றி சொல்லிவிட்டேன். இப்போது ஆயிரம் முத்தங்களுடன் நன்றியையும் சேர்த்துச் சொல்லலாம். நான் இதுவரை 100ஆவது நாள் மேடை ஏறியதில்லை. தர்மதுரைக்கு விழா எடுக்கவில்லை. எனவே இது எனது முதல் மேடை. விக்ரம் வேதாவைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வதென்றால், என் வரலாற்றை எழுதினால் அதில் மிக முக்கியமான ஒரு திரைப்படமாக இருக்கும். வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை. படம் வெற்றிபெற உதவிய அனைவருக்கும் நன்றி என்று சொல்லி கைகூப்பினார்