“ பக்கா “ படத்திற்கு U சான்றிதழ்!

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா”. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.S.சூர்யா.. படம் பற்றி கேட்ட போது, “கிராமங்களில் இருந்த வாழ்க்கை மெல்ல மாறி நகரமயமாகி வருவதைக் கிண்டல் செய்யும் கொண்டாட்டமான நகைச்சுவைப் படம் இது. நாயகன் விக்ரம் பிரபு, கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகராக நடிக்கிறார். ரசிகர் மன்றங்களையும் கிண்டலடிக்கும் இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு நேர் எதிராக ரஜினி ரசிகர் மன்றம் நடத்தும் கிராமத்து இளம்பெண் கதாபாத்திரத்தில் நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுக்கு இடையில் வரும் கிராமத் தலைவரின் மகள் பிந்து மாதவி ஆகிய மூன்று பேருக்கு நடுவில் நடக்கும் சம்பவங்களும் திருப்பங்களும்தான் படம்” என்கிறார் படத்தை எழுதி, இயக்கும் எஸ்.எஸ்.சூர்யா. இந்த படத்திற்கு சென்சாரில் U சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கிறது என்று பாராட்டினர். படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன் / இசை – C.சத்யா / பாடல்கள் – யுகபாரதி, கபிலன்

கலை – கதிர் / நடனம் – கல்யாண், தினேஷ்

ஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல் / எடிட்டிங் – சசிகுமார்

தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்

இணை தயாரிப்பு – B.சரவணன்

தயாரிப்பு – T.சிவகுமார்.