வைகோ தயாரிப்பாளர் ஆனார்!

வைகோ தயாரிப்பாளர் ஆனார்!

வேலுநாச்சியார்' மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நாடகத்தை கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ மிக பிரமாண்ட திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.'வேலுநாச்சியார்' வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ. இந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: தமிழர்களின் உயிர்க்காவியமான இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியாகுமரி முனை வரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்த்தமைக்காத எங்களை பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்தது. அவர்களின் ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றி கொண்டவர் வேலுநாச்சியார். நான் ஜான்ஸி இராணியை மதிக்கிறேன். காந்தியத்தை, நானாசாகிப்பை மதிக்கிறேன் அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசி அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்ற வரலாற்றை திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணுகோபால்சர்மாவின் அருமை திருமகனார் சிரிகாந்தசர்மாவை ஆறரை ஆண்டுக்கு…
Read More
நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிச்சாதான் கல்யாணம்! – விஷால் திட்ட வட்டம்!

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிச்சாதான் கல்யாணம்! – விஷால் திட்ட வட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்கம் 64-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து நாடக நடிகர்களும் இதில் கலந்து கொண்டனர். செவாலியே சிவாஜி கணேசன் அரங்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சோ மற்றும் மறைந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொன்வண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்தார், பொருளாளர் கார்த்தி நடிகர் சங்கத்தின் வருங்காலப் பொருளாதார நிகழ்வுகளை முன்வைத்தார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில், “ இந்த அரங்கத்தை நிரப்பியிருக்கும் என் சக கலைஞர்களுக்கும், நிர்வாககுழு, செயற்குழு, நியமனக்குழுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகலந்த வணக்கம். இது ஒரு…
Read More
உண்மையான பேய் படம் ‘அவள்’ – ரெடி!

உண்மையான பேய் படம் ‘அவள்’ – ரெடி!

தனக்கு கொடுக்க பட்ட எந்த ஒரு கதாபாத்திரத்திற்குள்ளும் மிக எளிதாகவும் அழகாகவும் நுழைந்து அசத்துபவர் நடிகர் சித்தார்த். ஒரே  மாதிரியான படங்களில் என்றுமே நடிக்காத ஒரு அரிய நடிகர் அவர். அவரது நடிப்பில் உருவாகும்  அடுத்த படமான ‘அவள்’ ஒரு பேய் படமாகும். சுவாரஸ்ய மாக எடுக்கப்பட்ட , உண்மையான அச்ச உணர்வை தூண்டும்  பேய் படங்கள்  தமிழ் சினிமாவில் பெரும் பாலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டு காலமாக உண்மையான பேய் படங்களை விட பேய் காமெடி படங்களே தமிழ் சினிமாவில் வெளி வர ஆரம்பித்து,மக்களிடத்தில் பேய் படம் பார்க்கும் போது வரும் அச்ச உணர்வை தகர்த்து விட்டது என்று கூறலாம்.இது பேய் படம் ரசிக்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்து வந்தது. இந்நிலையில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவின் நடிப்பில், இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மிலிண்ட் ராவ் இயக்கத்தில், ‘Etaki Entertainment’ நிறுவனமும் ‘Viacom 18…
Read More
சினிமா டிக்கெட் கட்டணம் ஜிவ்..!: ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா டிக்கெட் கட்டணம் ஜிவ்..!: ரசிகர்கள் அதிர்ச்சி

தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கிடுகிடு என உயர்ந்துள்ளது. நாடு முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி., கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. சினிமாவை பொருத்தமட்டில் தியேட்டர் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 18 மற்றும் 28 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது. கூடுதலாக தமிழக அரசின் கேளிக்கை வரி 30 சதவீதம் விதிக்கப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பின் அந்த ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. கேளிக்கை வரி தொடர்பாக அரசு சார்பில் ஒரு குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டதில் 30 சதவீதம் கேளிக்கை வரியை, 10 சதவீதமாக குறைத்து அரசு உத்தரவிட்டது. இதற்கும் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 38 (28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 10 சதவீத கேளிக்கை வரி) சதவீத வரியை எங்களால் செலுத்த முடியாது என கூறி நேற்று…
Read More
இருட்டு அறையில் முரட்டு குத்து -க்கு பூஜை போட்டுட்டாஹ!

இருட்டு அறையில் முரட்டு குத்து -க்கு பூஜை போட்டுட்டாஹ!

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E  ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர்  பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா G K படத் தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது,‘ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்.’ என்றார். ற் அண்மையில் வெளியாகி வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப்…
Read More
வேதாளம், கருப்பன் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா பாடகி அவதாரம் எடுத்தார்!

வேதாளம், கருப்பன் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா பாடகி அவதாரம் எடுத்தார்!

இயற்கையாகவே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்துவதில் வெற்றியாளர்கள் முனைப்போடு இருப்பார்கள். இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியும், பிரபல தயாரிப்பாளர் A M ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் படங்கள் மூலம் ஒரு தயாரிப்பாளராக தனது முத்திரையை பதித்தவர்.அவர் தற்பொழுது பின்னணி பாடகராக அவதாரம் எடுத்து பாடல்கள் பாடிவருகிறார். அதில் ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். அப்படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் ஐஸ்வர்யாவின் குரல் வளத்தை பெரிதளவு பாராட்டியுள்ளனர். ” எனக்கு ஊக்கமளித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இசையில் பாடியது எனக்கு பெரும் பெருமை. தமிழில் ‘கூட்டன்’ என்ற படத்திலும் பாடியுள்ளேன். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எனது உச்சரிப்பு சரியாக இருப்பது பெரும் பலமாக உள்ளது. ‘தொடர்ந்த பயிற்சி திருவினையாக்கும்’ என்பதை…
Read More
இன்றைய இளையதலைமுறைக்கு பிடிச்ச டைப்பில் தயாரான ‘ ஜெயிக்கற குதிர’

இன்றைய இளையதலைமுறைக்கு பிடிச்ச டைப்பில் தயாரான ‘ ஜெயிக்கற குதிர’

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ ஜெயிக்கிறகுதிர “ இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஷக்தி N.சிதம்பரம்.. படம் பற்றி இயக்குனர் ஷக்தி N.சிதம்பரத்திடம் கேட்டோம்.. இந்த படம் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளால் பார்க்கப் பட்டு A சான்றிதழ் கொடுக்கப்பட்டது. இன்று இளைய தலைமுறை ரசிகர்களுக்கு பிடித்த காமெடி, காதல், கொஞ்சம் கிளாமர் போன்ற அனைத்து அம்சங்களும் இருந்தால்தான் அவர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெரும். அப்படி அனைத்து அம்சங்களும் உள்ள படம் தான் இந்த…
Read More
சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கு கல்யாண வைபோக கோலாகலம்!

சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கு கல்யாண வைபோக கோலாகலம்!

நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இன்று இந்து முறைப்படி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 150 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று இந்து முறைப்படியும், நாளை கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழாவைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு…
Read More
உதய நிதி ஸ்டாலின் நடிக்கும் பட டைட்டில் ‘நிமிர்’!

உதய நிதி ஸ்டாலின் நடிக்கும் பட டைட்டில் ‘நிமிர்’!

காமெடி படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'இப்படை வெல்லும்' என்ற படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தற்போது மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.  குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். மிகச்சிறிய உண்மைச் சம்பவத்தை எடுத்து யதார்த்தமாக படமாக்கப்பட்டது. நாயகன் பஹத் பாசிலை ஒருவன் அடித்துவிடுகிறான். அன்றுவரை யாருடைய பிரச்சனைக்கும் போகாத பஹத் பாசிலுக்கு அது அவமானமாகிவிடுகிறது. செருப்பை போட்டுக் கொள் என்று சொல்லும் போது, அவனை அடிக்காமல் செருப்பு போட மாட்டேன் என்று அப்போதைய வீம்புக்கு கூறிவிடுகிறான். தன்னை அடித்தவனை பஹத் தேடிச் செல்லும் போதுதான் அவன் வேலைக்காக துபாய் சென்றது தெரிய…
Read More
மோடி கம்முன்னு இருக்கறது தப்புதானே? – பிரகாஷ் ராஜ் வேதனை!

மோடி கம்முன்னு இருக்கறது தப்புதானே? – பிரகாஷ் ராஜ் வேதனை!

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு குடும்ப நண்பர் ஆவார்.கவுரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், கவுரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஆழ்ந்த மவுனத்தை கடை பிடிக்கிறார். அவர் என்னை விட மிகச் சிறந்த நடிகராக உள்ளார் என கூறினார். பிரகாஷ்ராஜின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மோடியை தரக்குறைவாக விமர்சித்திருப்பதாக கூறி லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை கண்டு பயப்பட போவதில்லை என்றும் தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் மோடியின் மெளனம் பற்றிப் பேசுவேன் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: நான்…
Read More