இதில் நான் போலீஸ் – லாந்தர் பட விழாவில் விதார்த் !!

இதில் நான் போலீஸ் – லாந்தர் பட விழாவில் விதார்த் !!

விதார்த் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு 'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் - நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர். நாயகன் விதார்த் பேசுகையில், ''நாயகன் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். இதற்கு இயக்குநர் அந்த கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார். படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர்…
Read More
உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

  கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னி முகுந்தன் நடிக்கும் அடுத்த படத்திற்கு மார்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹனிஃப் அடேனி இந்த படத்தை இயக்குகிறார். மலையாள திரையுலகில் தற்போதுள்ள இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் உன்னி முகுந்தன். இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. உன்னி முகுந்தன் நடிக்கும் ஒவ்வொரு புதிய படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரசிகர்களை தாண்டி அனைத்து திரையுலகினரும் காத்திருக்கும் படம் உன்னி முகுந்தன் - ஹனிஃப் அடேனி கூட்டணியில் உருவாகும் 'மார்கோ'. க்யூப்ஸ் எண்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ், ஷெரீப் முஹம்மது மற்றும் உன்னி முகுந்தன் பிலிம்ஸ் இணைந்து 'மார்கோ' படத்தை தயாரிக்கின்றனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமான 'மார்கோ' உருவாகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'மார்கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில்…
Read More
மகாராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் !!

மகாராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் !!

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, விஜய்சேதுபதியும் இயக்குநர் நிதிலனும்.. இந்தப்படம் உங்களுக்கு ஒரு அனுபவம் தரும், பல சர்ப்ரைஸ்கள் படத்தில் இருக்கிறது, தயவு செய்து அதை வெளிப்படுத்தி விடாதீர்கள், முதல் முறை பார்க்கும் அனைவருக்கும் அந்த அனுபவம் கிட்டட்டும் என்றனர். இந்தப்படம் பார்த்த போது கிடைத்தது ஒரு பேரனுபவம்.. எனக்கு விருமாண்டி பார்த்த போது அதன் உருவாக்கத்திலும், அபிராமி இறப்பு முதலாக பல காட்சிகளில் எனக்கேற்பட்ட பாதிப்பும், இந்தப்படத்திலும் பல இடங்களில் கிடைத்தது. சமீபத்தில் தமிழ் சினிமா பழைய மாதிரி இல்லையே என்று ஏற்பட்ட அத்தனை ஏக்கத்தையும், போக்கியிருக்கிறான் மாகாராஜா. கதை திரைக்கதை எல்லாம் எப்படி இருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தில் ஒவ்வொரு பாத்திரங்களும் எப்படி அணுகப்பட வேண்டும். அதை எல்லாம் எப்படி ரசிகனுக்கு தர வேண்டும் என்றெல்லாம் பாடமெடுத்திருக்கிறது. இந்தப்படம். இதற்குமேல் படிக்காதீர்கள்.. தனது மகளை காப்பாற்றிய குப்பைதொட்டியை திருடர்கள் திருடிவிட்டதாக போலீஸுக்கு போகிறான் ஒரு சாதாரண சவரத்தொழிலாளி. அவனை பைத்தியமாக…
Read More
பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ‘பருவு’ சீரிஸை வெளியிட்டது  ZEE5 தமிழ்!

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ‘பருவு’ சீரிஸை வெளியிட்டது ZEE5 தமிழ்!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸான ​​"பருவு" சீரிஸை பெருமையுடன் அறிவித்துள்ளது. ஷோ ரன்னராக பவன் சதினேனி பணியாற்ற, நம்பிக்கைக்குரிய அறிமுக இயக்குநர்களான சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இந்த சீரிஸை இயக்கியுள்ளனர். சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ள இந்த சீரிஸை, தலைசிறந்த எழுத்தாளரான சித்தார்த் நாயுடு எழுதியுள்ளார். இந்த பரபரப்பான திரில்லர் சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர். கவுரவக் கொலைகளுக்குப் பலியாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஒரு தம்பதியினர் தங்களையும் தங்கள் காதலையும் காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள், சதிகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுவார்களா, அல்லது சாதி வேறுபாடுகள் அவர்களைப் பிரிக்குமா? பாரம்பரியத்தைக் கடக்கும் உலகில், குடும்பங்கள் தங்கள் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தால் என்னவாகும் என்பது தான் இந்த சீரிஸின் கதை…
Read More
‘சௌகிதார்’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்டது படக்குழு!

‘சௌகிதார்’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்டது படக்குழு!

'தியா' புகழ் நடிகர் பிருத்வி அம்பர் மற்றும் 'ரதாவரா' படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு 'சௌகிதார்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் 'சௌகிதார்' வேடத்தில் நடிக்கிறார். 'சௌகிதார்' எனும் படத்தின் தலைப்பை சிவப்பு வண்ண எழுத்துகளில் படக்குழுவினர் வெளியிட்டனர். 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி - இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பாவின் ஆறாவது படைப்பான 'சௌகிதார்' படத்தின் தலைப்பை வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். 'சௌகிதார்' - ஒரு பன்மொழி திரைப்படம். கன்னடத்தில் y மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாராகிறது. 'சௌகிதார்' எனும் தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் புதிய கதையுடன் களம் காண்கிறார். 'அனே பாடகி ' படத்தில்…
Read More
அனைவரும் விரும்பும் ஒரே முதலாளி இவர்தான்!’லாந்தர்’ நடிகர் வித்தார்த்!

அனைவரும் விரும்பும் ஒரே முதலாளி இவர்தான்!’லாந்தர்’ நடிகர் வித்தார்த்!

'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் - நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர். ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை…
Read More
சுவாரசியமான அனுபவத்தை தரும்! ‘பயமறியா பிரம்மை’ பட இயக்குநர் ராகுல் கபாலி!

சுவாரசியமான அனுபவத்தை தரும்! ‘பயமறியா பிரம்மை’ பட இயக்குநர் ராகுல் கபாலி!

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா & பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி , குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், நடிகர் ஜாக் ராபின்சன் பேசுகையில், '' இந்தப் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை சொல்லலாம். 2022 ஆம் ஆண்டில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. இந்த படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமாகவும், புதிதாகவும் இருந்தது. இயக்குநர் கதை சொல்லும் விதமே புதிதாக…
Read More
தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

1936 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் ராமோஜி ராவ். செருகூரி வெங்கடசுப்பா ராவ் மற்றும் சுப்பம்மா ஆகியோர் இவரின் பெற்றோர். உலகின் மிகப்பெரிய தீம் பார்க் மற்றும் திரைப்பட ஸ்டுடியோவான ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவினார். 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி 'ஈநாடு' நாளிதழ் தொடங்கினார். மார்கதர்சி சிட் ஃபண்ட், ஈநாடு செய்தித்தாள், ஈடிவி நெட்வொர்க், ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி, உஷாகிரண் மூவிஸ், மயூரி ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், டால்பின் குரூப் ஆஃப் ஹோட்டல் ஆகிய நிறுவனங்கள் ராமோஜி ராவுக்கு சொந்தமான நிறுவனங்கள். ஒரு தயாரிப்பாளராக, அவர் டோலிவுட்டில் பல மறக்க முடியாத திரைப்படங்களைத் தயாரித்தார். தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தார். இவருடைய படங்கள்…
Read More
புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது  விஜய் சேதுபதியின் ’மகாராஜா’!

புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது விஜய் சேதுபதியின் ’மகாராஜா’!

சிறப்பான கதைகளைத் தேர்தெடுத்து அதனை உயர்தரமான தயாரிப்பு மதிப்பீட்டுடன் தமிழ் சினிமாவுக்கு பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கி வருகிறது. ’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து இன்னும் நல்ல திரைப்படங்களை வழங்க இருக்கிறது. அந்த வகையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கவனம் ஈர்க்கும் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கு இந்தப் படம் ஜூன் 14, 2024 அன்று வெளியாகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால், இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவின் ‘மகாராஜா’ திரைப்படம் இடம்பெறும் நிகழ்வை பேஷன் ஸ்டுடியோஸ் நடத்தியது. நடிகர் விஜய் சேதுபதி எப்போதுமே துபாய் மக்களிடம் இருந்து அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் பெற்று வருகிறார். விஜய் சேதுபதி தனது ஆரம்ப நாட்களை துபாயில் கழித்ததால், இந்த நாட்டு மக்களிடமிருந்து விருந்தோம்பல் மற்றும் பாசத்தைப் பெற ஒருபோதும் தவறவில்லை.…
Read More
வெப்பன் திரை விமர்சனம்!

வெப்பன் திரை விமர்சனம்!

இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில், இந்த வாரம் திரையரங்குகளுக்கு வந்திருக்கும் திரைப்படம் "வெப்பன்" சூப்பர் ஹீயூமனை மையப்படுத்தி முழுக்க முழுக்க ஆக்சன் கதையில் வந்திருக்கும் வந்திருக்கிறது இந்த திரைப்படம் சூப்பர் ஹீரோ கதைகள் இந்தியாவில் அதிகம் வந்ததில்லை, ஹாலிவுட் மாதத்திற்கு ஒரு சூப்பர் ஹீரோ படம் என்ற வகையில் பல வருடங்களாக வந்துவிடுகிறது ஆனால் உலகம் முழுக்க பார்க்கையாக எங்குமே சூப்பர் ஹீரோ கான்செப்ட் படம் அதிகமாக வந்ததில்லை. தமிழில் அவ்வப்போது இந்த மாதிரி படங்கள் முயற்சிக்கப் பட்டாலும் அது பெரிய அளவில் பெரிய வெற்றியை தந்ததில்லை, அதற்கு காரணம் இங்கு உள்ள வாழ்வியல் சூழலும், டெக்னாலஜியும் அதற்கு சரியாக ஒத்துப் போகாதது தான். சரி சத்யராஜ் இப்படத்தில் சூப்பர் ஹீயூமனாக நடித்திருக்கிறார். சூப்பர் ஹீரோவாக ஜெயித்திருக்கிறாரா ? இந்த படம் என்ன அனுபவம் தருகிறது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் சூப்பர் சீரம் பயன்படுத்தி, சூப்பர்…
Read More